மார்பக கட்டி எனப்படுவது மார்பகத்தில் வளரும் அசாதாரண திசு வளர்ச்சி ஆகும் . அவைகள் வட்ட வடிவிலோ அல்லது ஒழுங்கற்ற வடிவத்திலோ , வலியுடன் கூடியதாகவோ அல்லது வலி இல்லாமலோ , மென்மையாகவோ அல்லது உறுதியாகவோ , புண்ணுடன் கூடியதாகவோ அல்லது இல்லாமலோ , புற்று நோய் உடையதாகவோ அல்லது புற்றுநோய் இல்லாமலோ தோன்றலாம் . அதனால் நீங்கள் மார்பக கட்டிய கண்டரிந்தாலோ அல்லது பரோஷனையில் தெரிய வந்தாலோ , கவலை படாதீர்கள் . ஆனால் அவற்றை ஒரு மருத்துவரின் உதவி இல்லாமல் உறுதி செய்ய முடியாது.
அதனால் உங்கள் மார்பில் எதேனும் கட்டி போல் சந்தேகம் தோன்றினால் நீங்கள் ஒரு மருத்துவ உதவிய நாடுவதை ஒருபோதும் தள்ளிப்போட கூடாது . மார்பக கட்டியை புறக்கணிப்பது நல்லதல்ல , அது பரவி உங்களுக்கு அசௌகர்யத்தை உண்டாக்கலாம் . அதற்கு சிகிச்சை அளிக்காவிட்டால் பல சிக்கல்களுக்கு வழி வகுக்கும் , இறுதியில் உங்கள் மார்பகங்களை அகற்ற வேண்டிய நிலமைகூட வரலாம்.