சில இயற்கை உணவுகள் மற்றும் விட்டமின் சப்ப்ளிமெண்ட் நீண்டகாலம் எடுத்துக்கொண்டால் மாதவிடாய் நாட்களை குறைக்கலாம். மெனோரெஜியாவின் பயோமெடிக்கல் லிட்டரெச்சரின் விரிவான ஆய்வின் படி, ப்ளீடிங்கை குறைத்து உங்களது மாதவிடாயை விரைவில் முடிக்க உதவும் உணவு சப்பிலிமெண்ட் மற்றும் மூலிகைகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:
வைட்டமின் ஏ
வைட்டமின் ஏ சப்பிலிமெண்ட் எடுத்துக்கொள்வதால் மாதவிடாய் நாட்கள் குறைவதாக கண்டறியப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு வைட்டமின் ஏ அதிகப்படியான டோஸ் 3000 எம்சிஜி. மாதவிடாயை விரைவில் முடிக்க அதிக டோஸ் பரிந்துரைக்கப்படுகிறது. ஒரு மருத்துவரை ஆலோசித்து மறுத்து அளவை புரிந்துக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
இரும்புச்சத்து
இரும்புச்சத்து குறைப்பட்டினால் அதிக மாதவிடாய் ப்ளீடிங் ஏற்படும் என்பது உங்களில் பலருக்கு தெரியாது. அதனோடு சிலசமயம் உங்கள் மாதவிடாய் நாட்களையும் கூட்டி விடுகிறது. ஆகவே, உங்களது உணவில் பிளாக்ஸ்ட்ராப் சர்க்கரைப்பாகு, திராட்சை, வடிப்போனொதி (Brewer’s yeast), கீரைகள், முட்டைகள், பீன்ஸ் போன்றவற்றை சேர்த்துக்கொள்வதால் உங்களது மாதவிடாய் நாட்களை ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு குறைக்கலாம்.
வைட்டமின் பி காம்ப்லெஸ்
உடலில் வைட்டமின் பி காம்ப்லெஸ் குறைபாடு ஏற்படும் போது, கல்லீரலின் செயலப்பாடு குறைகிறது. அதனால், மாதவிடாய்க்கு காரணமான எஸ்ட்ரோஜென் ஹார்மோனை கல்லீரலால் செயல் இழக்க முடிவதில்லை. அதனால், ஒவ்வொரு நாளும் வைட்டமின் பி சப்ளிமெண்ட் எடுத்துக்கொள்வதன் மூலம் மாதவிடாய் நாட்களை குறைக்க உதவும்.
வைட்டமின் சி மற்றும் பயோபிளேவொணாயிட்ஸ்
வைட்டமின் சி மற்றும் பயோபிளேவொணாயிட்ஸ் அதிக ப்ளீடிங்கை குறைப்பது மட்டுமில்லாமல் உணவில் இருந்து இரும்புச்சத்தை சிறப்பாக உறிஞ்ச உதவுகிறது. இவை காப்பில்லரி வால்ஸ் உடைவதை குறைக்க உதவுகிறது. ஆகவே, உணவில் வைட்டமின் சி மற்றும் பயோபிளேவொணாயிட்ஸ் நிறைந்த உணவுகளான சிட்ரஸ் பழங்கள் (எலுமிச்சை, ஆரஞ்சு, மாம்பழம், டோமாட்டோ, மற்றும் பல) மற்றும் காய்கறிகள் (ப்ரோக்கோலி, உருளைக்கிழங்கு , காலிஃப்ளவர், கீரைகள், மற்றும் மற்ற பச்சை காய்கறிகள்) சேர்த்துக்கொள்வதால் உங்களது மாதவிடாய் நாட்களை விரைவில் முடிக்க உதவும். நீங்கள் வைட்டமின் சி சாப்ளிமெண்ட்டை தினமும் எடுத்துக்கொள்ளலாம். வயது வந்த பெண்களுக்கு தினசரி வைட்டமின் சி மருந்தளவு 75 எம்ஜி மற்றும் பருவபெண்களுக்கு 65 எம்ஜி.
வைட்டமின் கே
இரத்த உறைதலில் வைட்டமின் கே முக்கிய ஊட்டச்சத்து ஆகும். பெரும்பாலான பெண்களுக்கு சாதாரண ப்ளீடிங் மற்றும் உறையும் நேரம் இருந்தாலும், லேசான உறையும் (கிலாட்டிங்) பிரச்சனை இருக்கும் பெண்களுக்கு வைட்டமின் கே பயன்படுத்துவது உதவிகரமாக இருக்கும். பருவபெண்களுக்கு தினசரி மருந்தளவு 75 எம்சிஜி மற்றும் வயது வந்த பெண்களுக்கு 90 எம்சிஜி. ஆனால் மாதவிடாயை முடிக்க, உங்களது ஹெல்த், எடை, உயரம் மற்றும் மற்ற மருத்துவ நிலைகளை பொறுத்து உங்களது மருத்துவர் இந்த மருந்தளவுகளை அதிகரிக்கக்கூடும் .
மற்ற வழிமுறைகள்
உடற்பயிற்சி, மசாஜ், ஹீட் தெரபி, மன கிளர்ச்சி அடைதல், நிறைய தண்ணீர் குடித்தல் போன்றவை மாதவிடாய் நாட்களை திறம்பட குறைக்கும் சில வழிமுறைகள். அவை உங்களது மாதவிடாய் நாட்களை குறைக்க பயனுள்ளதாக இருக்கலாம், ஏனென்றால்:
- உடற்பயிற்சி மூலம் எண்டோமெட்ரியல் உட்சுவர் விரைவாக விழுவதால், மாதவிடாய் நாட்கள் குறைகிறது.
- உங்களது பெல்விக் பகுதியில் ஹீட் தெரபி மற்றும் மசாஜ் தருவதன் மூலம் உங்கள் கருப்பை தசைகள் ரிலாக்ஸ் ஆவதோடு இரத்த ஓட்டத்தை பெருக்குகிறது. அவை உங்களது மாதவிடாய் வலி நிவாரணியாக உதவினாலும், அது மாதவிடாய் நாட்களை குறைக்க உதவுவதில்லை.
- மாதவிடாயின் போது மன கிளர்ச்சி வைத்துக்கொள்வதால் எண்டோமெட்ரியல் உட்சுவர் விரைவாக விழுவதோடு உங்களது பெல்விக் வலியையும் தணிக்கிறது.