யோனியில் இருந்து ஏற்படும் எந்த ஒரு இரத்தப்போக்கும், யோனி இரத்தப்போக்கு என அறியப்படுகிறது. அது மாதவிடாய் சுழற்சியின் போது இயல்பாக ஏற்படும் பொழுது, அது மாதவிடாய் என அறியப்படுகிறது. ஆயினும், மாதவிடாயின் பொழுது அதிகமான இரத்தப்போக்கு, அல்லது ஒரு பெண்ணின் மாதாந்திர மாதவிடாய் காலத்தைத் தவிர்த்து ஏற்படும் எந்த ஒரு அசாதாரணமான இரத்தப்போக்கும், அக்கறை கொள்ள வேண்டிய ஒரு விஷயமாகும்.
யோனி இரத்தபோக்குக்கு, இனப்பெருக்க அமைப்பைத் தவிர, மற்ற விஷயங்களோடு தொடர்புடைய காரணிகளைக் கொண்ட பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றுள், அந்தப் பெண்ணின் மருத்துவப் பிரச்சினைகள், மருந்துகள், கருத்தடை சாதனங்கள், இரத்தக் கோளாறுகள், மற்றும் பலவும் அடங்கும்.
யோனியிலிருந்து அசாதாரணமான இரத்தப்போக்கு ஏற்படுவதை உதாசீனப்படுத்தக் கூடாது, மற்றும் அது மறைந்திருக்கும் ஒரு தீவிரமான மருத்துவப் பிரச்சினையை சுட்டிக் காட்டுவதாக இருக்கக் கூடும் என்பதால், உடனடியாக ஒரு மருத்துவரிடம் தெரிவித்து, ஆலோசனை பெற வேண்டும். ஒரு அசாதாரணமான யோனி இரத்தப்போக்கினை குறித்த நேரத்தில் கண்டறிதல், மற்றும் சிகிச்சை எடுத்துக் கொள்ளுதல் ஆகியவை இனப்பெருக்கத்துக்கும், அதே போல் அந்தப் பெண்ணின் பொதுவான ஆரோக்கியத்துக்கும் மிகவும் முக்கியமானது ஆகும். யோனி இரத்தப்போக்குக்கான சிகிச்சை, அதன் பின்னால் மறைந்திருக்கும் பிரச்சினையைப் பொறுத்ததாக இருக்கிறது, மற்றும் அது, மருந்துகள், ஹார்மோன் சிகிச்சை, மற்றும் ஒருவேளை தேவைப்பட்டால் ஒரு அறுவைசிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கிறது.
யோனி இரத்தப்போக்குக்கான காரணங்களைப் பொதுவாக, இனப்பெருக்க அமைப்பு, இயாட்ரோஜெனிக் (மருத்துவ சிகிச்சைகளின் காரணமாக), மற்றும் மருத்துவ அமைப்பு முறை என வகைப்படுத்தலாம். மாறுபட்ட வயதுப் பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு ஏற்படும் யோனி இரத்தப்போக்கின் காரணங்களும் கீழே விளக்கப்பட்டு இருக்கிறது.