யோனி ஈஸ்ட் தொற்று, இது வெண்புண் எனவும் அறியப்படுகிறது, ஒவ்வொரு பெண்ணும் குறைந்தபட்சம் ஒருமுறையாவது தனது வாழ்நாளில் அனுபவித்த பொதுவான தொற்றுநோய்களில் ஒன்றாகும். எளிதில் சிகிச்சையளிக் கூடிய ஒன்றாக அறியப்பட்டாலும், அதன் அறிகுறிகள் உங்களை இம்சிக்க கூடியது மேலும் உங்கள் அன்றாட நடவடிக்கைகளை பாதிக்க கூடியது.

இந்த தொற்றிற்க்கு பின்னால் பொதுவாக காணப்படும் குற்றவாளி கேண்டிடா என்ற ஈஸ்ட் ஆகும். நமது வாயில், தொண்டை, மற்றும் யோனி ஆகிய பகுதிகளில் காணப்படுகிற ஒரு இயல்பான உயிரினம் (சில பகுதிகளில் வாழும், சாதாரணமாகக் காணப்படும் ஒன்று) இந்த கேண்டிடா ஆகும். எனினும், நிலைமைகள் சாதகமானதாக இருக்கும்போது, அது வளர ஆரம்பித்து, யோனிக்குள் நுழைந்து பல்கிப் பெருகுகிறது. வெண்புண் சிவப்பு, அரிப்பு, மற்றும் யோனியில் இருந்து வெளியேற்றபடுதல் போன்ற அறிகுறிகளால் வகைப்படுத்தப்பட்டுள்ளது. வுல்வா-வில் (உங்கள் யோனியின் திறப்பை சுற்றியுள்ள தோல்) சிறிய வெள்ளைப் பகுதிகளும் காணப்படும் மற்றும் அங்கிருந்து பெரும்பாலும் ஒரு கெட்ட வாசனையை வரும். சாதாரண யோனி தொற்றுக்கு எளிமையாக வீட்டு வைத்தியம் மூலம் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படலாம். இருப்பினும் மீண்டும் மீண்டும் வரும் அல்லது கடுமையான நோய் தொற்றுக்கு உடனடியாக உங்கள் மருத்துவர் அல்லது மகளிர் மருத்துவரால் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

வீட்டிலேயே நீங்கள் சிகிச்சை பெறும் முன், நீங்கள் சந்தேகிப்பது உண்மையில் ஒரு  பூஞ்சை தொற்று மட்டுமே என உறுதிபடுத்திக்கொள்ளவும்.

உங்களுக்கு இருக்கும் அறிகுறிகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளவற்றை தவிர வேறு எதுவும் இல்லை என்றால், நீங்கள் பின்வரும் எளிய மற்றும் பயனுள்ள வீட்டு வைத்தியத்தை செய்து கொள்ள முடியும்:

  1. யோனி ஈஸ்ட் தொற்றுக்கான ஆப்பிள் சைடர் வினிகர் - Apple Cider Vinegar for vaginal yeast infection in Tamil
  2. யோனி ஈஸ்ட் தொற்றுக்காக ப்ரோபியாட்டிக்ஸ் - Probiotics for vaginal yeast infection in Tamil
  3. யோனி ஈஸ்ட் தொற்றுக்காக தயிர் - Yogurt for vaginal yeast infection in Tamil
  4. யோனி ஈஸ்ட் தொற்றுக்கு தேங்காய் எண்ணெய் - Coconut oil for vaginal yeast infection in Tamil
  5. யோனி ஈஸ்ட் தொற்றுக்கு தேயிலை மர எண்ணெய் - Tea tree oil for vaginal yeast infection in Tamil
  6. யோனி ஈஸ்ட் தொற்றுக்கு போரிக் அமிலம் - Boric acid for vaginal yeast infection in Tamil
  7. யோனி ஈஸ்ட் தொற்றுக்கு கேலெண்டுலா எண்ணெய் - Calendula oil for vaginal yeast infection in Tamil
  8. யோனி ஈஸ்ட் தொற்றுக்கு ஓரிகேனோ எண்ணெய் - Oregano oil for vaginal yeast infection in Tamil
  9. யோனி ஈஸ்ட் தொற்றுக்காக கற்றாழை - Aloe vera for vaginal yeast infection in Tamil
  10. யோனி ஈஸ்ட் தொற்றுக்கு க்ரன்பெர்ரி சாறு - Cranberry juice for vaginal yeast infection in Tamil
  11. யோனி ஈஸ்ட் தொற்றுக்காக பூண்டு - Garlic for vaginal yeast infection in Tamil
  12. யோனி ஈஸ்ட் தொற்று உள்ளவர்கள் பருத்தி உள்ளாடை அணிய வேண்டும் - Wear cotton underwear in vaginal yeast infection in Tamil
  13. யோனி ஈஸ்ட் தொற்று பற்றி சில அடிப்படை உண்மைகள் - Some basic facts about vaginal yeast infections in Tamil

ஆப்பிள் சைடர் வினிகர் ஈஸ்ட் தொற்றுடன் சண்டையிடுவதில் மிகவும் சிறப்பாக உள்ளது. எனினும், நீங்கள் இந்த ஆப்பிள் சைடர் வினிகரை தவிர வேறு எந்த வினிகரையும் பயன்படுத்தவில்லை என்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் மற்ற வினிகரை பயன்படுத்துவது தொற்றை எதிர்த்துப் போராடுவதை விடுத்து தொற்றை அதிகரிக்க செய்யும். ஆப்பிள் சைடர் வினிகரை தண்ணீரில் கரைத்து நீர்க்க செய்து, அதை கழுவுவதற்குப் பயன்படுத்தவும். நீங்கள் பிறப்புறுப்பு மண்டலத்தில் நீர்த்த வினிகரை தடவி, 20 நிமிடங்களுக்கு வைத்திருக்கவும், பின்பு சுத்தமான தண்ணீரில் நன்றாக கழுவுங்கள். ஆப்பிள் சைடரை பயன்படுத்துவதற்கான மற்றொரு வழி, சூடான தண்ணீர் கொண்ட உங்கள் குளியல் தொட்டியில் இரண்டு கப் ஆப்பிள் சைடரை கலக்கவும். 15-20 நிமிடங்களுக்கு அந்த நீரில் உட்கார்ந்திருங்கள். ஒரு பருத்தி துண்டை பயன்படுத்தி உங்களை உலர்வாக துடைத்துக்கொள்ளவும். அழுத்தி துடைத்து கொள்ள வேண்டாம். அழுத்தி துடைத்தால் எரிச்சல் அதிகரிக்கலாம்.

myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Urjas Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for sex problems with good results.
Long Time Capsule
₹712  ₹799  10% OFF
BUY NOW

இவை ஆரோக்கியமான பாக்டீரியா-வை (பெரும்பாலும் லாக்டோபாகில்லஸ்) கொண்டிருக்கும் காப்ஸ்யூல்கள், அதே போல திரவியங்கள் போன்றவையாகும். அவை நோய்த்தொற்றைத் தடுக்க உதவுவது மட்டுமல்லாமல், யோனி-யில் உள்ள pH அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது. ஒரு சமச்சீரான pH அளவு, அதிகப்படியான ஈஸ்ட்-ன் பெருக்கத்தை குறைக்க உதவுகிறது. ப்ரோபியோடிக் சப்ளிமெண்ட்ஸ்-சை யோனி-க்கு உள்ளே வைக்கப்படும் கேப்சூல்-லாக அல்லது தினமும் ஒரு பானமாக குடிக்க பயன்படுத்தப்படும் திரவியமாக உபயொகிக்கலாம்.

மீண்டும் மீண்டும் பூஞ்சை நோய்த்தொற்று ஏற்படும் பெண்களுக்கு இவை மிகவும் உபயோகமாக உள்ளன.

தயிர் என்பது லேக்டோபேசில்லஸ் போன்ற லாக்டிக் அமில பாக்டீரியாவின் வளமான ஆதாரம். இந்த பாக்டீரியா பிறப்புறுப்பு மண்டலத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது, குறிப்பாக யோனி. இது யோனி பகுதியைக் ஆக்கிரமித்து மேலும் தொற்றுக்களை ஏற்படுகிற அதிகப்படியான பூஞ்சைக் செல்களைக் கொள்கிறது. நீங்கள் தயிரை சாப்பிடலாம் அல்லது பிறப்புறுப்பு மண்டலத்தில் அதை தடவி , ஒரு மணி நேரத்திற்கு அப்படியே வைத்திருக்கலாம். ஒரு நாளைக்கு இது போல 2-3 முறை செய்யுங்கள். பின்பு சுத்தமான தண்ணீரில் நன்கு கழுவுங்கள்.

ஒரு 2004-ஆம் ஆண்டில் செய்த ஆய்வு கூறுகிறது: தேங்காய் எண்ணெய் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளை கொண்டிருக்கிறது மற்றும் அது ஈஸ்ட் தொற்றுகளுக்கு எதிராகவும், குறிப்பாக மருந்துகளுக்கு எதிர்ப்புதன்மை கொண்டவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது. எனவே, பாதிக்கப்பட்ட பகுதியில் தேங்காய் எண்ணெய் தேய்ப்பதன் மூலம், நீங்கள் விரைவில் தொற்றுக்களை அகற்றலாம்.  தேங்காய் எண்ணெயை ஒரு நாளைக்கு 3-4 முறை பயன்படுத்தவும்.

myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Kesh Art Hair Oil by using 100% original and pure herbs of Ayurveda. This Ayurvedic medicine has been recommended by our doctors to more than 1 lakh people for multiple hair problems (hair fall, gray hair, and dandruff) with good results.
Bhringraj Hair Oil
₹546  ₹850  35% OFF
BUY NOW

தேயிலை மர எண்ணெய் அதன் இயற்கை பூஞ்சை காளான் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பி பண்புகளுக்கு அறியப்படுகிறது. எனவே, இது யோனி ஈஸ்ட் தொற்று நோய்க்கான சிகிச்சையில் வீட்டு வைத்தியத்தில் ஒன்றாக பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், அதன் செறிவூட்டப்பட்ட வடிவம் கடுமையானது மற்றும் எரியும் உணர்வை ஏற்படுத்தக் கூடியது. அதனால்தான் நாம் எப்போதும் தேநீர் மர எண்ணெயை நீர், பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் உடன் கலந்து பயன்படுத்த வேண்டும். ஒரு நாளைக்கு பல முறை பாதிக்கப்பட்ட பகுதியில் அந்த நீர்க்க செய்த திரவத்தை கொண்டு தேய்க்க வேண்டும்.

போரிக் அமிலம் ஒரு ஆண்டிசெப்டிக் ஆகும். இதில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. நீங்கள் போரிக் அமிலத்தை தண்ணீரில் கலந்து நீர்க்க செய்து  பின்பு பாதிக்கப்பட்ட பகுதியின் மீது அதை தடவுங்கள். ஒரு சில நிமிடங்கள் கழித்து அதை நன்கு கழுவி விடுங்கள். குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்கு தினமும் அதைப் பயன்படுத்துங்கள்.

கேலெண்டுலா எண்ணெய் என்பது ஒரு அத்தியாவசிய எண்ணெய் ஆகும். இது  கேலெண்டுலா அஃபிசினாலிஸ் என்னும் ஒரு வகை மலர்களில் இருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. தென் பிரேசிலில் 2008 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வு, இந்த அத்தியாவசிய எண்ணெயில் பூஞ்சை காளான் செயற்பாட்டிற்கு எதிரான சாத்தியமான பண்புகள் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. எனவே, அதை வீட்டில் யோனி ஈஸ்ட் தொற்று சிகிச்சையில் பயன்படுத்தலாம். பாதிக்கப்பட்ட பகுதியில் இந்த எண்ணெயை ஒரு நாளைக்கு 2-3 முறை தடவவும்.

myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Urjas Energy & Power Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This Ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for problems like physical and sexual weakness and fatigue, with good results.
Power Capsule For Men
₹495  ₹799  38% OFF
BUY NOW

2010 ஆம் ஆண்டில் செய்த ஒரு ஆய்வில், ஓரிகேனோ எண்ணெய், ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் கொண்டு இருப்பதாக கண்டறியப்பட்டது. இந்த எண்ணெய் ஒரு தாவரத்தின் உலர்ந்த இலைகளில் இருந்து பிரித்தெடுக்கப்படுகிறது, ஓடரிகேனும் வல்கரே. இந்த எண்ணெயை ஈஸ்ட் தொற்று இருக்கும் இடத்தில் நீர்த்த வடிவில் ஒரு நாளைக்கு 2-3 முறை தடவி பயன்படுத்த வேண்டும்

கற்றாழை-யில் (அலோ வேரா) உள்ள என்சைம்கள், வைட்டமின்கள் மற்றும் அமினோ அமிலங்கள் போன்ற அழற்சி எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. உங்கள் ஈஸ்ட் தொற்றுக்கு சிகிச்சையளிக்க, நீங்கள் இரண்டு தேக்கரண்டி அலோ வேரா பயன்படுத்தலாம், ஒரு கப் ஆரஞ்சு பழச்சாறுடன் கலந்து அதை தினமும் குடிக்கலாம்.

ஈஸ்ட் மற்றும் பிற பூஞ்சை நோய்களுக்கு எதிராக க்ரான்பெர்ரி சாறு வினை புரிகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. 1968 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு பழைய ஆய்வில் பூஞ்சை எதிர்பு பண்புகளை கொண்டிருக்கும் பென்சோயிக் அமிலம் இதில் காணப்படுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டது. நீர்க்க வைக்காமல் அல்லது இனிப்பூட்ட செய்யாமல் க்ரன்பெர்ரி சாறை அப்படியே குடிக்கவும். ஒரு நாளுக்கு சில முறை இதை குடிப்பது ஈஸ்ட் தொற்றை குணப்படுத்த உதவும்.

பல ஆராய்ச்சியாளர்கள் புதிதாக எடுத்த பூண்டு சாறு, ஈஸ்ட் தொற்றுக்கு எதிராக செயல்படுவதற்கான ஆதாரங்களை பரிசோதித்து அளித்துள்ளனர். உள்ளே செலுத்தப்படுவதற்கும் அல்லது வெளியே எடுப்பதற்கும்  பூண்டு பற்கள் கடினமானது என்பதால், நீங்களாகவே தனியாக பூண்டை பயன்படுத்த வேண்டாம் என்று நாங்கள் அறிவுறுத்துகிறோம். பூண்டு காப்ஸ்யூல்களை வாய்வழியாகவும் எடுத்துக்கொள்ளளாம். மேலும் பூண்டு சாறு கிரீம்களை யோனியின் வாயை சுற்றி தடவியும் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகின்றன. இது மருந்து கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி உங்கள் ஈஸ்ட் தொற்று சிகிச்சைக்கு பயன்படுத்தலாம். கவனமாக மருந்தை பயன்படுத்துவதற்கான வழிமுறைகளைப் படிக்கவும். அது எரிச்சலை ஏற்படுத்துகிறது என்றால் அதைப் பயன்படுத்த வேண்டாம். சந்தேகம் இருந்தால், உங்கள் மருத்துவரிடம் இந்த மருந்துகளை பயன்படுத்துவது நீங்கள் சரியான சிகிச்சையைப் பெற உதவுமா என கேட்கலாம்.

சூடான மற்றும் ஈரமான சூழல் யோனி பகுதியில் ஈஸ்ட்-ன் வளர்ச்சியை ஆதரிக்கிறது. எனவே, இறுக்கமான ஆடைகள், செயற்கை உள்ளாடைகளை அணிவது போன்றவை யோனி நோய்த்தொற்று உள்ளவர்களின் நிலைமையை மோசமாக்கும். எனவே யோனி நோய்த்தொற்று உள்ளவர்கள் ஒரு உலர்ந்த மற்றும் தளர்வான பருத்தி உள்ளாடை அணிவது அல்லது எந்த உள்ளாடையும் அணியாமல் இருப்பது முக்கியம். இதைச் செய்வதன் மூலம் ஈஸ்ட்-ன் வளர்ச்சி தடுக்கப்படும் மற்றும் இது தொற்றுநோய்க்கான சிகிச்சையில் உதவும்.

நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய யோனி ஈஸ்ட் தொற்றுகள் பற்றிய சில முக்கிய தகவல்கள் இங்கே.

அறிகுறிகள் - Symptoms in Tamil

ஒரு ஈஸ்ட் தொற்றுக்கான பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:

  • யோனி மற்றும் பாதிக்கப்பட்ட பகுதியில் நமைச்சல்.
  • யோனியின் உள்ளே மற்றும் யோனியை சுற்றி சிவந்திருத்தல்.
  • அசௌகரியம் மற்றும் லேசான வலி.
  • அந்த பகுதியில் அதிகப்படியான ஈரப்பதம். 
  • புளித்த அல்லது தயிர் போன்ற வெள்ளை நிறத்தில் இருக்கும் பொதுவான திரவம் யோனியில் இருந்து வெளியேறும்.
  • பிறப்புறுப்பு மண்டல பகுதியில் அதிகரித்த வெப்பநிலை.
  • வெளியேற்றப்பட்ட திரவத்திலிருந்து ஒரு கெட்ட மற்றும் விரும்பத்தகாத வாசனை வருதல்.
  • சிறுநீர் கழிக்கும் போது வலி. (மேலும் வாசிக்க: சிறுநீர் கழிக்கும் போது வலி உண்டாகக் காரணங்கள்)

எப்போது ஒரு பெண்கள் மருத்துவரை சென்று பார்ப்பது

மேற்கூறிய சிகிச்சைகளை முயன்று பார்த்த பிறகும் உங்கள் தொற்று போகவில்லை என்றால், தொற்றுநோய்க்கான காரணத்தை தெரிந்து கொள்ள உடனடியாக உங்கள் பெண்கள் மருத்துவரை சென்று சந்திக்க வேண்டும். மீண்டும் மீண்டும் வரும் அல்லது சிகிச்சை அளிக்கப்படாத தொற்று நோய்கள், பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் அல்லது நோய்கள் போன்ற தீவிர மருத்துவ நிலைகளுக்கு வழிவகுக்கலாம். நீங்கள் பின்வரும் எந்த அறிகுறிகளையாவது எதிர்கொண்டிருந்தால், உடனடியாக மருத்துவரை நீங்கள் பார்க்க வேண்டும்.

  • நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது யோனி பகுதியில் தொற்று.
  • தொற்று மீண்டும் மீண்டும் வருகிறது என்றால் (இரண்டு முறைக்கும் மேல்).
  • பிறப்புறுப்பு மண்டலத்தில் புண்கள் அல்லது மருக்கள் இருத்தல்.
  • இடுப்பு பகுதியில் வலி.
  • தெரியாத ஒருவர் அல்லது பல நபர்களுடன் பாதுகாப்பற்ற உடலுறவு.
  • யோனி நோய்த்தொற்றுடன் தொடர்புடைய காய்ச்சல்  

காரணங்கள் - Causes in Tamil

யோனி ஒரு சுருங்கி விரியக்கூடிய மேலும் மென்மையான ஒன்று. இயற்கையாகவே சுய சுத்தம் செய்து கொள்ளக்கூடிய சுபாவம் கொண்டது. அதாவது நமது உடலே யோனியை சுத்தமாக வைத்திருக்க உதவும் சில நொதிகளை நம் உடலில் சுரக்கிறது. இருப்பினும் நமக்கு இன்னும் வழக்கமான லேசான மற்றும் எளிதில் சிகிச்சையளிக்கக்கூடிய தொற்றுநோய் உருவாகலாம், சில அடிப்படை மருத்துவ நிலைமைகள் இந்த வகை தொற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்தை அதிகரிக்கலாம். அப்படிபட்ட சில  மருத்துவ நிலைமைகள் பின்வருமாறு:

  • கர்ப்பம்​
    கர்ப்பம் ஹார்மோன் மாறுபாடுகளின் காரணத்தால் பல்வேறு உடல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. எனவே, இதனால் யோனி ஈஸ்ட் தொற்று கர்பகாலத்தில் ஏற்பட வாய்ப்புள்ளது. கர்பகாலத்தில் உங்களுக்கு ஒரு தொற்று ஏற்பட்டால், வீட்டு வைத்தியத்தை முயற்சிக்காதீர்கள். சரியான சிகிச்சை பெற உங்கள் மகளிர் மருத்துவரிடம் செல்லுங்கள், ஏனெனில் மேலே குறிப்பிட்டுள்ள சிகிச்சைகளில் சிலவற்றால் உங்கள் குழந்தைக்கு தீங்கு விளையலாம்.
     
  • மது உட்கொள்ளுதல்
    மேலே குறிப்பிட்டபடி, அதிகப்படியான மது உட்கொள்ளுதல் என்பது யோனி ஈஸ்ட் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். 
     
  • கருத்தடை சாதனங்கள்
    சில கருத்தடை மாத்திரைகள் உங்கள் யோனி பகுதியின் சூழலை மாற்றும். இதனால் அது தொற்றுநோய் ஏற்படுத்தி உங்களைப் பாதிக்கலாம். 
     
  • நீரிழிவு​
    நீரிழிவு நோயாளிகளின் உடலில் உள்ள அதிக சர்க்கரை ஈஸ்ட்-க்கு பிடித்த சாப்பாடு என்பதால், ஈஸ்ட் தொற்று நோய்களின் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. 
     
  • பலவீனமான நோய் எதிர்ப்பு அமைப்பு
    பிறப்பு மூலமாகவோ அல்லது  எச் ஐ வி எய்ட்ஸ் போன்ற சில நோய்களால் ஏற்பட்ட பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு, தொற்றுநோய்களுக்கு எதிராக போராட உதவும் உடலில் உள்ள திறனைக் குறைத்துவிடும். இதனால்  பலவீனமான நோய் எதிர்ப்பு அமைப்பு கொண்டவர்கள் இந்த தொற்று நோயாய்களுக்கு எளிதான இலக்காக அமைவார்கள். 
     
  • நுண்ணுயிர் கொல்லிகள்
    நீண்ட கால ஆண்டிபயாடிக் சிகிச்சையானது, யோனியில் ஈஸ்ட் செல்களின் சமநிலையைத் தக்கவைக்க முக்கியமாக இருக்கும் ஆரோக்கியமான பாக்டீரியாக்களை கொன்றுவிடுகிறது. இந்த பாக்டீரியாக்களின் எண்ணிக்கை குறையும் போது, ஈஸ்ட் அதிகப்படியாக வளருவதோடு, மேலும் நோய் தொற்று ஏற்படுத்தும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.
     
  • உடலுறவு மூலம் பரவும் நோய்கள் (STD)
    பாலியல் ரீதியாக பரவும் நோய்களும் உடலிலுள்ள ஆரோக்கியமான பாக்டீரியாக்களின் எண்ணிக்கையைக் குறைத்து, ஈஸ்ட் வளர்வதற்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்குகின்றன.

தடுப்புமுறை - Prevention in Tamil

மேலே குறிப்பிட்ட மருந்துகள் ஈஸ்ட் தொற்று நோயைக் கையாள உதவும். எனினும், யோனி மற்றும் ஒட்டுமொத்த சுகாதார நிலையினையும் பராமரிப்பது, நமக்கு நோய்கள் ஏற்படாமல் விலகி இருக்க எப்போதும் உதவும். உங்கள் உடலில் இத்தகைய நோய்த்தொற்றின் வளர்ச்சியைத் தடுக்க, செய்ய வேண்டிய மற்றும் செய்ய கூடாத செயல்களின் பட்டியல் பின்வருமாறு:

  • பருத்தி உடைகள்:
    பருத்தி உடைகள் மற்றும் பருத்தி உள்ளாடைகளை அணிவது யோனி பகுதியில் சூடு மற்றும் ஈரப்பதம் இருப்பதை தடுக்கிறது, இதனால் அதிகப்படியான ஈஸ்ட்-ன் வளர்ச்சி தடுக்கப்படுகிறது. 
     
  • தளர்வான ஆடை:
    இறுக்கமான ஆடைகள் உங்கள் யோனிக்கு புதிய காற்று செல்ல அனுமதிப்பதில்லை. இது ஈஸ்ட் வளர மற்றும் தொற்று ஏற்படுத்த ஒரு சாதகமான சூழலை வழங்கும். எனவே, உங்கள் யோனியை ஆரோக்கியமான மற்றும் தொற்று-இல்லாததாக வைத்திருக்க தளர்வான மற்றும் காற்றோட்டமான உடைகள் அணிய அறிவுறுத்தப்படுகிறது.
     
  • மது குடிப்பதை குறைக்கவும்:
    ஆல்கஹால் யோனி பகுதியில் நீர் வறட்சியை ஏற்படுகிறது இதனால் தொற்று பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளின் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. எனவே, பரிந்துரைக்கப்பட்ட அளவுகளுக்குள் நீங்கள் மதுவை உட்கொள்வது எப்பொழுதும் அறிவுறுத்துகிறது.
     
  • சுகாதாரத்தை பராமரிக்கவும்:
    அழுக்கு துணிகளை அணிய வேண்டாம். உடனடியாக உங்கள் வியர்வை மிக்க உடற்பயிற்சி துணிகளை அல்லது வேலைக்கு அணிந்து சென்று வந்த துணிகளை மாற்றவும், வீட்டிற்கு வந்ததும் புதிய உடையை அணியவும். உங்கள் பிறப்புறுப்பு மண்டலத்தை அழுக்கு அல்லது அசுத்தமான கைகளால் தொட்டுவிடாதீர்கள்.
     
  • உங்களை சரியான முறையில் துடைக்கவும்:
    மலம் கழித்த பின் அல்லது சிறுபநீர் கழித்த பின் கழுவி விட்டு, முன் புறமிருந்து பின் புறமாக ஒரு முறை நன்றாக துடைக்கவும். இப்படி செய்வதால் உங்கள் ஆசன வாயில் இருந்து உங்கள் யோனி பகுதிக்கு பாக்டீரியா பரவுவது தடுக்கப்படுகிறது.
     
  • உங்கள் தோலை மென்மையாக பராமரியுங்கள்:
    யோனி தோல் மென்மையான ஒன்றாகும் மற்றும் அதன் pH ஐ சம அளவில் பராமரிப்பது மிகவும் முக்கியமானது. கடுமையான சோப்புகள், நறுமணப் பொருட்கள் அல்லது வாசனையுள்ள குளியல் அல்லது குளியல் உப்புகள் போன்றவற்றை பயன்படுத்தாதீர்கள், ஏனெனில் இந்த தயாரிப்புகள் யோனி pH ஐ அதிகரிக்கின்றன மற்றும் ஈஸ்ட் மற்றும் பிற தொற்று பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஆதரிக்கின்றன. 
     
  • யோனி பகுதியை உலர்த்துதல்:
    ஒவ்வொரு குளியலுக்கு பின்னும் உங்களை நீங்களே துடைப்பதில் எப்போதும் மென்மையாக இருங்கள். அலுத்தித் துடைப்பது உங்கள் மென்மையான தோலை எரிச்சலூட்டி, அதனால் தொற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். ஒரு மென்மையான துண்டு கொண்டு உங்களை மென்மையாக ஒத்தி எடுத்து உடலை உலர வைக்க பயன்படுத்தவும்.
     
  • உங்கள் யோனியினுள் எதையும் பீச்சாதீர்கள்:
    நீங்கள் யோனியை மீண்டும் மீண்டும் வெளிப்புறமிருந்து சுத்தம் செய்வதை போலவே, உட்புறமிருந்தும் சுத்தம் செய்வதால் உங்களுக்கு தொற்றுநோய் ஏற்படாமல் தடுக்கலாம் என்று நினைக்கலாம். எனினும், அப்படி இல்லை. நாம் நீர் அல்லது வேறு வேதிப்பொருட்களைக் யோனியினுள் பீய்ச்சி சுத்தம் செய்யாமலே, நமது யோனி தானே அதன் தூய்மையைக் கவனித்துக்கொள்ளும் ஒரு சுத்திகரிப்பு கால்வாய் ஆகும். இந்த இயற்கையான தூய்மையானவர் அப்படியே இருக்கட்டும், அதன் உள் பகுதியைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம், ஏனென்றால் இயற்கையாகவே அதன் வேலையை மிகச் சிறப்பாக செய்ய அதற்கு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது.
     
  • பேன்டி லினெர்-யை பயன்படுத்த வேண்டாம்:
    நீங்கள் மாதவிடாய் காலத்தில் இருக்கும் சமயத்தில் மட்டுமே சனிட்டரி பேட் மற்றும் பேன்டி லினெர்-யை பயன்படுத்தவும். மற்ற நேரத்தில் அவற்றை பயன்படுத்துவது உங்கள் யோனியில் தோல் வறட்சி மற்றும் எரிச்சல் ஆகியவற்றை ஏற்படுத்தும். இது அரிப்பு, விரிசல், புண்கள், முதலியவற்றுடன் இணைந்து அந்த பகுதியில் தொற்று வளர்ச்சி ஏற்பட ஆதரவாக இருக்கும்.
     
  • உங்களுக்கு தொற்று ஏற்பட்டிருந்தால் உடலுறவில் ஈடுபடுவதை தவிர்க்கவும்:
    நீங்கள் ஈஸ்ட் தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் போது உடலுறவில் ஈடுபடுவது உங்கள் பிறப்புறுப்பு பகுதியில் எரிச்சலை அதிகரிக்கும் மற்றும் உங்கள் நிலை மேலும் மோசமாகிவிடும். எனவே, உங்கள் சிகிச்சை நடந்து கொண்டிருக்கும் போது உடலுறவில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

மருந்துகள் - Medicines in Tamil

ஆன்டிபங்கல் கிரீம்கள், களிம்புகள், திரவியங்கள், லோஷன்ஸ், யோனி மாத்திரைகள் மற்றும் பெசாரிஸ் அல்லது சப்போசிடொரிஸ் போன்ற வடிவில் இந்த மருந்துகள் உங்கள் அருகிலுள்ள மருந்து அங்காடியில் எளிதில் கிடைக்க கூடியவை. பின்வருபவை வீட்டிலேயே உங்கள் தொற்று நோயை குணப்படுத்துவதற்கு நீங்கள் பயன்படுத்திக்கொள்ளக் கூடிய சில ஓ.டி.சி (ஓவெர் தி கவுண்டர்).

  • க்லோற்றிமசோல்
  • மைகோனசோல் நைட்ரேட்
  • புடோகோனசோல்
  • டியோகோனசோல்
  • புடெனபீன் ஹைட்ரோகுளோரைடு
  • மேலே உள்ளவற்றின் ஒரு கலவையாகும்

இந்த மருந்துகள் பெரும்பாலும் யோனிக்கு உள்ளே மருந்தை தடவுவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு பொருந்தக்கூடிய குச்சியுடன் கிடைக்கின்றன. அந்த மருந்தை தடவுவதற்கு தொடங்குவதற்கு முன், நீங்கள் எப்படி அந்த மருந்தை பயன்படுத்த வேண்டும் என்னும் முறையைப் பற்றி மருந்து கடைகாரரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் அல்லது மருந்துகளின் பேக்கேஜில் கொடுக்கப்பட்ட வழிமுறைகளைப் படிக்க வேண்டும்.

நீங்கள் வேறு எந்த மருந்தை பயன்படுத்திக் கொண்டு இருந்தாலும் அதைப் பற்றி மருந்தாளரிடம் சொல்ல வேண்டும் என்பது முக்கியம், ஏனெனில் இந்த மருந்துகள் நீங்கள் ஏற்கனவே பயன்படுத்தும் மருந்துடன் சேர்ந்து எதிர்மறையாக செயல்படலாம் அல்லது அந்த மருந்துகளின் செயல்பாட்டில் இது குறுக்கிடலாம்.

மேற்கோள்கள்

  1. Falagas ME, Betsi GI, Athanasiou S. Probiotics for prevention of recurrent vulvovaginal candidiasis: a review. J Antimicrob Chemother. 2006 Aug;58(2):266-72. Epub 2006 Jun 21. PMID: 16790461
  2. Abdelmonem AM, Rasheed SM, Mohamed ASh. Bee-honey and yogurt: a novel mixture for treating patients with vulvovaginal candidiasis during pregnancy. Arch Gynecol Obstet. 2012 Jul;286(1):109-14. PMID: 22314434
  3. Office on Women's Health [Internet] U.S. Department of Health and Human Services; Vaginal yeast infections.
  4. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Vaginal Candidiasis
  5. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Vaginal yeast infection
  6. Better health channel. Department of Health and Human Services [internet]. State government of Victoria; Vaginal thrush
Read on app