ஐவிரலி, குர்குர்பிட்டாசியயி குடும்பத்தை சேர்ந்த ஒரு மூலிகைத்தன்மை கொண்ட தாவரம் ஆகும். அது, ஒரு மெல்லிய மற்றும் பரவுகின்ற தண்டினைக் கொண்ட, வருடாந்திர மூலிகை (ஒவ்வொரு வருடமும் மறுநடவு செய்யப்பட வேண்டியது) ஆகும். இந்தத் தாவரத்தின் மெல்லிய இலைகள், ஒரு புறத்தில் சொரசொரப்பாகவும், மற்றொரு புறம் வழவழப்பான மேற்பரப்பையும் கொண்டிருக்கின்றன. ஐவிரலியைக் அடையாளம் காணும் அம்சமாக, அதன் மஞ்சள் வண்ண பூக்கள், மற்றும் இந்திய தெய்வம் சிவனின் அடையாளமான சிவலிங்கத்தைப் போன்ற உருண்டை வடிவ விதைகளும் இருக்கின்றன. சொல்லப் போனால், இந்தத் தாவரம் ஷிவலிங்கி என அழைக்கப்பட காரணமே, அதன் விதைகளின் தனித்துவமான அமைப்பியலே (தோற்றம்) ஆகும்.

புராதான காலத்தில் இருந்து, ஐவிரலி ஒரு பாலுணர்வுத் தூண்டியாக, மற்றும் கருத்தரிக்கும் தன்மையை அதிகரிக்கும் ஒரு மூலிகையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஐவிரலி விதைகள், ஒரு குழந்தையைக் கருத்தரிக்க, அல்லது கருக்கலைவு ஏற்படுவதைத் தவிர்க்க, பல்வேறுபட்ட பழங்குடியினப் பெண்களால் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. கடந்த சில தசாப்தங்களாக, நவீன மருத்துவத்தின் வருகை காரணமாக ஐவிரக் கொவ்வை போன்ற மருத்துவ குணம் மிக்க தாவரங்கள், ஒரு முக்கியமான நிவாரணியாக தங்கள் அடையாளத்தை இழந்து விட்டன. ஆனால், அது ஆயுர்வேதம் மற்றும் நாட்டு மருத்துவத்தில் முக்கியமான மலட்டுத்தன்மை எதிர்ப்பு மூலிகைகளில் ஒன்றாக இன்னமும் நீடிக்கிறது.

ஐவிரக் கொவ்வை விதைகளைப் பற்றிய சில அடிப்படை விவரங்கள்

  • தாவரவியல் பெயர்: பிரியோனியா லாசினியோஸா லின்.
  • குடும்பம்: குர்குர்பிட்டாசியயி
  • பொதுவான பெயர்கள்: ஐவிரக் கொவ்வை, கர்குமரா
  • சமஸ்கிருதப் பெயர்: லிங்கினி, அம்ருதா, பாஹுபத்ரா, சித்ரபாலா
  • பயன்படும் பாகங்கள்: இலைகள், பழங்கள், விதைகள்
  • சொந்த பிராந்தியம் மற்றும் புவியியல் பரவுதல்: ஐவிரலி தாவரம் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படக் கூடியது ஆகும். மேலும் அது மொரிசியஸ், ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், மலாய் மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளிலும் காணப்படுகிறது.
  • ஆற்றலியல்: வெப்பமூட்டுதல். உடலில் பித்த தோஷத்தை அதிகரிக்கிறது.
  1. ஐவிரலி விதைகளின் ஆரோக்கியம் சார்ந்த நன்மைகள் - Shivlingi seeds health benefits in Tamil
  2. ஐவிரலியை எவ்வாறு பயன்படுத்துவது - How is shivlingi used in Tamil
  3. ஐவிரலி விதைகளை எவ்வாறு எடுத்துக் கொள்வது - How to take shivlingi seeds in Tamil
  4. ஐவிரலி விதைகளின் பக்க விளைவுகள் - Shivlingi seeds side effects in Tamil

ஆயுர்வேதம் மற்றும் நாட்டு மருத்துவத்தில், ஐவிரலி விதைகள் பல்வேறு ஆரோக்கியம் அளிக்கும், மற்றும் குணமளிக்கும் நன்மைகளுடன் தொடர்புடையதாக இருக்கிறது. அது ஒரு மிகச் சிறந்த நுண்ணுயிர் எதிர்ப்பி, அழற்சி எதிர்ப்பி (வீக்கம் மற்றும் சிவந்து போதலைக் குறைக்கிறது), மற்றும் காய்ச்சல் தணிப்பான் ஆகும். ஆனால், ஐவிரலி கருவுறுதல் தன்மையை அதிகரிக்கின்ற பண்புகளுக்காகத் தான் மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது. ஐவிரக் கொவ்வையின் அறிவியல் பூர்வ ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்ட, ஆரோக்கியம் சார்ந்த நன்மைகளைப் பற்றி நாம் இப்போது பேசலாம்.

  • பெண்களுக்கான நன்மைகள்: ஐவிரலி விதைகள், அவற்றின் கருவுறுதலை அதிகரிக்கும் நன்மைகளுக்காக மிகவும் பிரபலமாக அறியப்படுகின்றவை ஆகும். அவை கருப்பை திசுக்களுக்கு ஊட்டமளிக்கின்றன, மாதவிடாய் சுழற்சியை முறைப்படுத்துகின்றன, மற்றும் கருப்பை நுண்குமிழிகளின் தரத்தை மேம்படுகின்றன. இருந்தாலும், ஐவிரலி விதைகள், ஒரு கருக்கலைப்பு விளைவைக் கொண்டிருக்கின்றன, எனவே, கர்ப்ப காலத்தில் ஐவிரலி விதைகளை  எடுத்துக் கொள்வது தவிர்க்கப்பட வேண்டும்.
  • ஆண்களின் கரு உண்டாக்கும் திறனை மேம்படுத்துகிறது: ஐவிரலி விதைகள் ஆண்களின் கரு உண்டாக்கும் திறன் மீது ஒரு சாதகமான விளைவைக் கொண்டிருக்கிறது. முன் மருத்துவ ஆய்வுகளில், அவை டெஸ்டோஸ்டெரோன் அளவுகள், மற்றும் விந்தணுக்களின் மொத்த எண்ணிக்கையை அதிகரிக்கின்றன எனக் கண்டறியப்பட்டு உள்ளது. இருப்பினும், ஆண்களுக்கு ஐவிரலி விதைகளின் கருவுண்டாக்கும் திறனை அதிகரிப்பதை உறுதி செய்வதற்காக மருத்துவரீதியான ஆய்வுகள் தேவைப்படுகின்றன.
  • ஆண் குழந்தை பிறக்க: ஐவிரக் கொவ்வை விதைகளை உட்கொள்வது, ஆண் குழந்தை பிறக்க வழிவகுக்கும் என்பது மிகவும் பரவலாக நம்பப்படுகிற பொதுக் கருத்து ஆகும். இருப்பினும், ஒரு குழந்தையின் பாலினம், மரபணுக் காரணிகளால்  தீர்மானிக்கப்படுகிறது, மற்றும் மூலிகைகள் மற்றும் பிற்சேர்க்கை பொருட்களை எடுத்துக் கொள்வது மூலம், ஒரு ஆண் குழந்தையைப் பெறுவது என்பது சாத்தியம் இல்லாதது ஆகும்.
  • காய்ச்சல் தணிப்பான்: ஆயுர்வேத மருத்துவத்தில் ஐவிரலி விதைகள் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் அது, உடலில் ஒரு சத்து மருந்தின் விளைவை ஏற்படுத்துவதன் மூலம், காய்ச்சலோடு இணைந்த சோர்வு மற்றும் பலவீனத்தைக் குறைக்கிறது.
  • மலச்சிக்கலைக் குறைக்கிறது: ஐவிரலி பசையானது, பாரம்பரியமாக மலச்சிக்கலுக்கான ஒரு நிவாரணியாகப் பயன்படுத்தப்படுகிறது. அது நார்ச்த்துக்களை அதிக அளவில் கொண்டிருப்பதால், மலத்துக்கு ஒரு திரட்சியைக் கொடுத்து, அதை இளக்கி, ஒரு இயற்கையான மலமிளக்கி போன்று செயல் புரிகிறது.

மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் நன்மைகளைத் தவிர, ஐவிரலி நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் வெளிப்படுத்துகிறது.அதாவது, அது நோய்த்தொற்றுக்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது, மற்றும் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது என்று அர்த்தமாகும்.

கர்ப்பம் மற்றும் கருவுறுதலுக்காக ஐவிரலி விதைகள் - Shivlingi seeds for pregnancy and fertility in Tamil

நீங்கள் ஆயுர்வேதத்தைப் பின்பற்றும் ஒருவராக இருந்தால், ஐவிரலி விதைகளின் மலட்டுத்தன்மை எதிர்ப்பு அற்புதங்களைப் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டு இருப்பீர்கள். பாரம்பரிய மற்றும் நாட்டு மருத்துவங்கள், ஐவிரக் கொவ்வை விதைகளின் கருவுறுதல் தன்மையை அதிகரிக்கும் பண்புகளுக்காக, அதை உயர்ந்த மதிப்பைக் கொண்ட ஒரு இடத்தில் வைத்திருக்கின்றன. ஐவிரலி விதைகள், வெல்லம் மற்றும் துளசி ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு கலவை, பெண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மையைப் போக்குவதில் பயன்படுத்தப்படுகிறது. இது கருப்பை திசுக்கள் மீதான, ஐவிரலி விதைகளின் ஒரு சத்து மருந்து போன்ற விளைவை சுட்டிக் காட்டுகிறது.

மருத்துவர்களின் கூற்றுப் படி, தற்போதைய வாழ்வில், கருப்பை இருப்புகள் குறைதல் (டி.ஓ.ஆர்) பிரச்சினையானது, பெண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக மாறி வருகிறது. வழக்கமாக இது, கருப்பை நுண்குமிழ்கள் தரம் குறைந்தவையாக இருப்பதோடு தொடர்புடையதாக இருக்கிறது, மற்றும் பொதுவாக, 30 களின் ஆரம்பத்தில் அல்லது இறுதியில் பெண்கள் சந்திக்கின்ற ஒரு பிரச்சினையாக இருக்கிறது. இருந்தாலும், வாழ்க்கைமுறை மற்றும் உடலியல் போன்ற சில காரணிகளின் காரணமாக இளம்பெண்களுக்கும் இந்தப் பிரச்சினை ஏற்படக் கூடும். டி,எச்.இ.ஏ (டீஹைட்ரோபியான்ட்ரோஸ்டெரோன்) பிற்சேர்க்கைகள், ஆண்கள் மற்றும் பெண்கள் இரண்டு பாலினத்தவருக்கும் ஏற்படுகின்ற கருத்தரித்தல் தொடர்பான பிரச்சினைகளைப் போக்கப் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. அது, கருப்பை நுண்குமிழிகள் மீது ஒரு வலிமையான தூண்டுதல் விளைவைக் கொண்டிருக்கின்ற, உடலில் உள்ள ஒரு ஹார்மோன் ஆகும். ஆய்வுகள், ஐவிரலி, டி,எச்.இ.ஏ மீது ஒரு அறியப்படாத விளைவைக் கொண்டிருப்பதன் மூலம் கருத்தரித்தல் திறனை அதிகரிக்கிறது எனத் தெரிவிக்கின்றன.

..ஸ்.ஆர் -இன் செயல்முறை வேதியியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரை, ஐவிரலி விதைகள் குறைந்த இரத்த ஓட்டத்தைக் கொண்ட பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியை இயல்பாக்க உதவுகிறது என்று தெரிவிக்கிறது. இருந்தாலும், மேலும் அந்தக் கட்டுரை, மாதவிடாயின் போது நீங்கள் அதிக அளவிலான இரத்தப்போக்கைக் கொண்டிருந்தால், ஐவிரலி விதைகளைத் தவிர்ப்பது நல்லது என்பதையும் குறிப்பிடுகிறது.

இந்தியாவில் உள்ள சில பிரபலமான பழங்குடி இனத்தவர்கள், ஐவிரலி விதைகள், அஸ்வகந்தா, மற்றும் பால் ஆகியவற்றை சேர்த்து, ஒரு கருக்கலைப்பு மருந்தாக பயன்படுத்தி இருக்கின்றனர். எனவே, ஐவிரலி விதைகளை எடுத்துக் கொள்ளும் சரியான வழியை அறிந்து கொள்ள, உங்கள் ஆயுர்வேத மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது எப்போது அறிவுறுத்தத்தக்கது ஆகும்.

myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Urjas Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for sex problems with good results.
Long Time Capsule
₹712  ₹799  10% OFF
BUY NOW

ஆண்களின் மலட்டுத்தன்மைக்காக ஐவிரலி விதைகள் - Shivlingi seeds for male infertility in Tamil

ஐவிரலி விதைகளின் கருவுறு தன்மையை அதிகரிக்கும் நன்மைகள் பெண்களுக்கானது மட்டும் அல்ல, ஆண்களுக்கும் அதே அளவு திறன் வாய்ந்தது என அறியப்படுகிறது. எத்தனோபொட்டானிக்கல் (மனிதர்கள் அடிப்படையிலானது) ஆய்வுகள், ஐவிரலி விதைகள், ஆண்களுக்கு வீரியத்தை அதிகரிப்பதுடன், கூடவே டெஸ்டோஸ்டெரோன் அளவுகளையும் அதிகரிப்பதாக நம்பப்படுகிறது.

ஐவிரலி தாவரத்தின் மீதான அறிவியல் ரீதியிலான ஆய்வுகள் குறைவாக இருக்கின்றன. ஆனால், கருத்தரித்தல் மற்றும் பாலியல் செயல்பாட்டின் மீதான அதன் விளைவுகளைப் பற்றி மிகவும் விரிவாக ஆராயப்பட்டு இருக்கிறது. முன் மருத்துவ ஆய்வுகள், ஐவிரலி விதைகளின் பாலுணர்வைத் தூண்டும் விளைவுகளை உறுதி செய்கின்றன. மேலும் அந்த ஆய்வு, ஐவிரக் கொவ்வை விதைகளின் எத்தனால் சார்ந்த சாறுகள், விந்தணு எண்ணிக்கை, மற்றும் டெஸ்டோஸ்டெரோன் அளவுகளின் மீது ஒரு தூண்டுதல் விளைவைக் கொண்டிருக்கின்றன எனவும் தெரிவிக்கிறது. இது, ஐவிரலி விதைகளின் கருவுறு தன்மையைத் தூண்டும் நன்மைகளை பகுதியளவு உறுதிசெய்கிறது.

இருப்பினும், மனிதர்கள் மீதான ஆய்வுகள் இல்லாத காரணத்தால், ஐவிரலியின் இந்த நன்மையைப் பற்றி மேலும் அறிய, உங்கள் ஆயுர்வேத மருத்துவரிடம் செல்வது மிகவும் நல்லது ஆகும்.

(மேலும் படிக்க: டெஸ்டோஸ்டெரோன் பற்றாக்குறை அறிகுறிகள்)

மலச்சிக்கலுக்காக ஐவிரலி - Shivlingi for constipation in Tamil

ஐவிரலியின் மலமிளக்கும் விளைவுகள், பெரும்பாலான பாரம்பரிய மருத்துவ முறைகளில் அறியப்பட்டதாக, மற்றும் மதிப்பிற்குரியதாக இருக்கின்றன. ஐவிரக் கொவ்வை இலைகளால் தயாரிக்கப்பட்ட பசை, மலச்சிக்கலுக்கான ஒரு ஆயுர்வேத நிவாரணியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சித்த மருத்துவத்தில் முழு ஐவிரலி தாவரமும் ஒரு மலச்சிக்கல் நிவாரணியாகப் பயன்படுத்தப்படுகிறது.

இருந்தாலும், மலச்சிக்கலைக் குறைப்பதில் ஐவிரலியின் திறனைப் பரிசோதிக்கின்ற அறிவியல்பூர்வ ஆய்வுகள் இன்னமும் நிலுவையில் உள்ளன, ஆனால், ஐவிரலி விதைகள், குளுக்கோமன்னன் என அறியப்படும் இயற்கையாகத் தோன்றும் ஒரு வேதியியல் மூலக்கூறினை அதிக அளவில் கொண்டிருக்கின்றன என்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. குளுக்கோமன்னன்கள், ஒரு நீரில் கரைகின்ற நார்ச்சத்து என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது, அவை உங்கள் உணவுக்கு ஒரு திரட்சியைத் தருவதற்கு, மற்றும் மலத்தை இளக்குவதற்கு, உங்கள் குடலுக்குள் சேருகின்றன என அர்த்தம் ஆகும். இவ்வாறு அது ஒரு திறன்மிக்க மலமிளக்கியாக செயல்படுகிறது.

இதனை உறுதி செய்யக்கூடிய ஆதாரம் இல்லாத காரணத்தால், ஒரு மலச்சிக்கல் நிவாரணியாக ஐவிரலி விதைகளை எடுத்துக் கொள்வதற்கு முன்னால், ஒரு மருத்துவரிடம் ஆலோசனை பெறுமாறு நீங்கள்  மிகவும் திடமாக அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

காய்ச்சலுக்காக ஐவிரலி விதைகள் - Shivlingi for fever in Tamil

ஐவிரலி தாவரத்தின் இலைகள் மற்றும் விதைகள், காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. விலங்குகள் அடிப்படையிலான ஒரு ஆய்வு, ஐவிரலி விதைகளின் மெத்தனால் சாறுகள், மிகச் சிறந்த ஒரு காய்ச்சல் தணிக்கும் செயல்பாட்டைக் கொண்டிருக்கின்றன எனத் தெரிவிக்கிறது, மேலும் அது, சில பாரம்பரிய சிகிச்சை முறைகளில், ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஒரு சத்து மருந்தாகவும் பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால், காய்ச்சலுக்கான சிகிச்சைகளில் ஐவிரலியின் சரியான செயல்படும் முறை, அல்லது எடுத்துக் கொள்ள வேண்டிய சரியான அளவு ஆகியவற்றை உறுதி செய்ய, இது வரையில் எந்த ஒரு மருத்துவ ஆய்வுகளும் மேகொள்ளப்பட்டிருக்கவில்லை. எனவே, ஒரு காய்ச்சல் தணிப்பானாக ஐவிரக் கொவ்வையை எடுத்துக் கொள்ளும் முன்னர், உங்கள் ஆயுர்வேத மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது மிகவும் அறிவுறுத்தத்தக்கது ஆகும்.

ஆண் குழந்தைக்காக ஐவிரக் கொவ்வை விதைகள் - Shivlingi seeds for male child in Tamil

ஐவிரலி விதைகளைத் தனியாகவோ, அல்லது ஒரு மூலிகைக் கலவையாகவோ எடுத்துக் கொள்வது, ஒரு ஆண் குழந்தையைக் கருத்தரிக்க உதவுகிறது என்பது ஒரு பாரம்பரியமான நம்பிக்கை ஆகும். ஆயினும், அறிவியல் பூர்வமாக, ஒரு குழந்தையின் பாலினம், அது பெறுகின்ற பாலின குரோமோசோம்கள் தொகுதியின் மூலமே தீர்மானிக்கப்படுகிறது. பெண்கள் இரண்டு எக்ஸ் (எக்ஸ் எக்ஸ்) குரோமோசோம்களைக் கொண்டிருக்கின்றனர். ஆண்கள் ஒரு எக்ஸ் மற்றும் ஒரு ஒய் குரோமோசோமைக் கொண்டிருக்கின்றனர். இந்த ஜோடிகளில் உள்ள ஒவ்வொரு குரோமோசோமும், எதிரே உள்ள  மற்ற இரண்டு குரோமோசோம்களில் எந்த ஒன்றுடனும் இணைவதற்கு சமமான வாய்ப்பு இருக்கின்றது. பெண்ணின் குரோமோசோம் ஜோடியில் இருந்து எக்ஸ் குரோமோசோம், ஆணின் ஒய் குரோமோசோம் உடன் இணையும் போது மட்டுமே, ஒரு ஆண் குழந்தை கருவுருகிறது. இது, செல்களின் மட்டத்தில் நடக்கின்ற, ஆண் மற்றும் பெண்ணின் புணரிகளின் (கருவுறுதல்) இணைப்பு நடைபெறும் நேரத்தில் ஏற்படும், ஒரு இயற்கையான செயல்முறை ஆகும்.

அதனால், எந்த வகை பிற்சேர்க்கைப் பொருள், மூலிகை, அல்லது  பிற வழிகளின் மூலம்,  ஒரு ஆண் குழந்தையைப் பெறுவது சாத்தியமற்றது ஆகும்.

(மேலும் படிக்க: எவ்வாறு கர்ப்பம் தரிப்பது)

நீரிழிவுக்காக ஐவிரலி விதைகள் - Shivlingi seeds for diabetes in Tamil

ஒரு விவோ (விலங்குகள் அடிப்படையிலானது) ஆய்வு, ஐவிரலி விதைகளின் எத்தனால் சாறுகள், இரத்த சர்க்கரை அளவுகளைக் குறைபதில் மிகவும் உதவிகரமாக இருப்பதாகத் தெரிவிக்கிறது. இருப்பினும், மனிதர்களுக்கு ஐவிரலியின் நீரிழிவு எதிர்ப்பு திறனை உறுதி செய்ய, இதுவரை எந்த ஒரு மருத்துவரீதியிலான ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, நீரிழிவைக் கொண்ட நபர்கள், ஐவிரலியை எந்த ஒரு வடிவத்திலும் எடுத்துக் கொள்ளும் முன்னர், ஒரு ஆயுர்வேத மருத்துவரிடம் ஆலோசனை பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

(மேலும் படிக்க: நீரிழிவுக்கான காரணங்கள்)

கொழுப்பு அளவுகளுக்காக ஐவிரலி விதைகள் - Shivlingi seeds for cholesterol in Tamil

மருந்தியல் மற்றும் மருந்து தயாரிப்பு அறிவியலின் சர்வதேச இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வுக்கு கட்டுரையின் படி, ஐவிரலி விதைகள், சில கொழுப்புக்குறைப்பு (கொழுப்பு அளவுகளைக் குறைக்கிறது) திறனை வெளிப்படுத்தியதாகத் தெரிவிக்கிறது. மனிதர்களிடையே நடத்தப்படும் ஆய்வுகள் போதுமான அளவில் இல்லாத காரணத்தால், உடலின் கொழுப்பு அளவுகள் மீதான ஐவிரக் கொவ்வை விதைகளின் விளைவுகளைப் பற்றிப் புரிந்து கொள்ள, ஒரு ஆயுர்வேத மருத்துவரிடம் செல்வது மிகவும் நல்லது ஆகும்.

(மேலும் படிக்க: உயர் கொழுப்பு சிகிச்சை)

ஐவிரலியின் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் - Shivlingi antimicrobial properties in Tamil

விட்ரோ ஆய்வுகள், ஐவிரலி தாவரத்தின் எத்தனால் சாறுகள், ஒரு பரவலான அளவிலான நுண்ணுயிரிகளுக்கு எதிராக, ஒரு திறன்மிக்க செயல்பாட்டினைக் கொண்டிருக்கிறது என சுட்டிக் காட்டுகின்றன. அந்த ஆய்வுகள், ஐவிரலி தாவர சாறு, எஸ்செரிச்சியா கோலி, ஸ்டாஃபிலோக்கோகஸ் அவுரஸ், ப்சொடோமொனாஸ் அவுரிஜினோஸா, பாசில்லஸ் சேரியூஸ், மற்றும் சால்மோனெல்லா டைப்பிமுரியம் போன்ற பொதுவான நோய்த்தொற்று உண்டாக்கும் நுண்ணுயிரிகளைக் கொல்வதில் மிகவும் திறன்வாய்ந்தது என்று தெரிவிக்கின்றன.

புற்றுநோய்க்காக ஐவிரலி விதைகள் - Shivlingi seeds for cancer in Tamil

சமீபத்திய விட்ரோ ஆய்வுகள், மனிதர்களின் புற்றுநோய் செல்கள் மீதான, ஐவிரலி இலைகளின் புற்றுநோய் எதிர்ப்பு விளைவுகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. அந்த ஆய்வுகளில், ஐவிரலி இலைகளின் மெத்தனால் சார்ந்த, தண்ணீர் அடிப்படையிலான, குளோரோபார்ம் சாறுகள், வழக்கமான உடல் செல்களுக்குத் தீங்கு விளைவிக்காமல், புற்றுநோய் செல்கள் மீது மட்டும் வலிமையான சைட்டோடாக்ஸிக் விளைவைக் (மனிதர்களுக்கு உள்ள புற்றுநோய் செல்களைக் கொல்கிறது) காட்டியதாக அறிவிக்கப்பட்டது. மேலும், ஐவிரலி இலை சாறுகள், ஒரு நன்கு அறியப்பட்ட புற்றுநோய் எதிர்ப்பு மருந்தை விடவும், மிகவும் திறன்மிக்க புற்றுநோய் எதிர்ப்பு காரணிகளாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

வீக்கத்தைக் குறைக்க ஐவிரலி விதைகள் - Shivlingi for reducing swelling in Tamil

ஐவிரலி, அழற்சியினால் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஒரு பாரம்பரியமான நிவாரணியாகப் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக,வீக்கத்தின் கடுமையைக் குறைப்பதற்காக, ஐவிரலி இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் ஒருவித பசையானது, மேற்பூச்சாக சருமத்தில் தடவப்படுகிறது. மூலிகை அடிப்படையிலான மருந்துகளின் மீது, முக்கிய அலோபதி மருத்துவத்தின் கவனம் அதிகரித்து வருவதன் காரணமாக,, தினந்தோறும் மேலும் மேலும் அதிகமான மூலிகை சார்ந்த பிற்சேர்க்கை பொருட்கள், மற்றும் மருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றன. இந்த நடைமுறையில், ஐவிரலியின் அழற்சி எதிர்ப்பு செயல்பாடும், ஆய்வகங்களில் பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது. விலங்குகள் அடிப்படையிலான ஆய்வுகள், ஐவிரலி இலைகளின் குளோரோபார்ம் சாறுகள், குறிப்பிடத்தக்க அழற்சி எதிர்ப்பு திறனைக் கொண்டிருக்கின்றது எனத் தெரிவிக்கின்றன.

ஆஸ்துமாவுக்காக ஐவிரக் கொவ்வை விதைகள் - Shivlingi seeds for asthma in Tamil

ஐவிரலி தாவரத்தின் ஆஸ்துமா எதிர்ப்பு செயல்திறனைப் பரிசோதிக்க, விட்ரோ மற்றும் விவோ இரண்டு வகை ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அவற்றில், இந்த விதைகளில் உள்ள 70% எத்தனால்  சார்ந்த சாறு, ஒவ்வாமை தொடர்பான ஆஸ்துமா ஏற்படும் அபாயத்தைக் குறைக்க மிகவும் உதவிகரமாக இருக்கின்றது எனக் கண்டறியப்பட்டது.

மேலும் அந்த ஆய்வுகள், அதே சாறுகள் ஒரு வலி நிவாரணியாக (வலியைப் போக்குகிறது) மற்றும் ஒரு வலிப்பு தடுப்பு மருந்தாக (ஜன்னி மற்றும் வலிப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது) செயல்படுகிறது எனவும் தெரிவிக்கின்றன. கூடுதலாக, ஐவிரலி சாறுகள், கிலோவுக்கு 3 கிராம் என்ற அளவில் வாய்வழியாகக் கொடுக்கப்படும் பொழுது, எந்த ஒரு நச்சுத்தன்மையையும் ஏற்படுத்தவில்லை எனவும் கூறப்பட்டு உள்ளது.

கிழக்கத்திய மருந்தியல் மற்றும் செயல்முறை சார்ந்த மருத்துவம் என்ற இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையின் படி, ஐவிரலியின் ஆஸ்துமா எதிர்ப்பு பண்புகள், அந்த தாவரத்தில் உள்ள அழற்சி குறைப்பு புளோவோனாய்டுகள் (இயற்கையாகத் தொன்று ஒரு வேதியியல் மூலக்கூறு) காரணமாக இருக்கக் கூடும் என்று கூறுகிறது. மனிதர்களுக்கு ஏற்படும் ஆஸ்துமா பிரசினையில், ஐவிரலியின் சரியான செயல்படும் முறை, மற்றும் நச்சுத்தன்மை,ஏதேனும் இருந்தால், ஆகியவற்றைப் புரிந்து கொள்ள இன்னும் அதிக ஆய்வுகள் தேவையாக இருக்கின்றன.

ஐவிரலி விதைகளை நேரடியாக, அல்லது பொடி வடிவில் எடுத்துக் கொள்ள இயலும்.

ஐவிரலி இலைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் பசை, அழற்சிக்குப் பயன்படுத்தப்படும் ஒரு பாரம்பரியமான நிவாரணி ஆகும்.

ஐவிரக் கொவ்வை விதைகள் மற்றும் இலைகளும் கூட, ஆயுர்வேத மருத்துவத்தில் ஒரு காய்ச்சல் தணிப்பானாக (காய்ச்சலைக் குறைக்கும் காரணி) பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஐவிரலியை வயது வந்தவர்கள் எடுத்துக் கொள்ளும் பொருத்தமான அளவு. ஒரு நாளுக்கு 1-2 கிராம்கள் ஆகும். ஆயுர்வேத மருத்துவர்களின் கூற்றுப் படி, உங்கள் உணவுக்குப் பின் 3 மணி நேரங்களுக்குப் பிறகு,  ஐவிரலி விதைகளை எடுத்துக் கொள்ள சிறந்த நேரம் ஆகும்.

உடல் எடையைக் குறைப்பதற்காக, ஒரு நாளுக்கு இரண்டு முறை பாலுடன் சேர்த்து ஐவிரலி விதைகளை எடுத்துக் கொள்ளலாம்.

(மேலும் படிக்க: உடல் பருமன் சிகிச்சை)

  1. ஐவிரலி விதைகள், சில பராம்பரிய மற்றும் நாட்டு மருத்துவத்தில், ஒரு கருக்கலைப்பு பொருளாகப் (கருக்கலைப்புக்கு காரணமாகிறது) பயன்படுத்தப்படுகிறது. எனவே, நீங்கள் கருத்தரித்தல் திறனை அதிகரிப்பதற்காக ஐவிரலி விதைகளை எடுத்துக் கொள்ள விரும்பினால், ஐவிரலி விதைகளை எதுத்துக் கொள்ளும் சரியான அளவு, மற்றும் முறையைப் பற்றி அறிந்து கொள்ள, உங்கள் மருத்துவரிடம் கேட்பது மிகவும் நல்லதாகும்.
  2. ஆய்வுகள் குறைவாக இருப்பதன் காரணமாக, ஐவிரலியின் பக்க விளைவுகள் ஏதும் இல்லை. இருப்பினும், ஐவிரலியை எந்த ஒரு வடிவத்திலும் எடுத்துக் கொள்ளும் முன்னர், உங்கள் ஆயுர்வேத மருத்துவரிடம் ஆலோசிப்பது எப்போதும் அறிவுறுத்தப்படுகிறது.

Medicines / Products that contain Shivlingi Seeds

மேற்கோள்கள்

  1. Purdue University, ndiana, U.S. [Internet]. Shivlingi (Bryonia laciniosa Linn.)
  2. Princy Louis Palatty et al. A Clinical Round up of the Female Infertility Therapy Amongst Indians. Journal of Clinical and Diagnostic Research. 2012 September (Suppl), Vol-6(7): 1343-1349
  3. Padma Rekha Jirge. Poor ovarian reserve. J Hum Reprod Sci. 2016 Apr-Jun; 9(2): 63–69. PMID: 27382229
  4. University of Rochester Medical Center Rochester, NY. [Internet] Dehydroepiandrosterone and Dehydroepiandrosterone Sulfate Does this test have other names?
  5. .Mukul Chauhan, Vineet Sharma, Himanchal, Deepak Kumar. A Scientific Review on Shivlingi Beej (Bryonopsis Laciniosa): Amystrical Ethno-Medicine for Infertility. IOSR Journal of Applied Chemistry, Volume 11, Issue 5 Ver. II (May. 2018), PP 40-44
  6. Pradeep kumar, Prof. Nrmala Babu Rao. Folk lore uses and Preliminary Phytochemical Investigation on Leaves, Seeds Extract of Diplocyclos palmatus (L.) C.Jeffrey. International Journal of Advanced Research (2015), Volume 3, Issue 9, 501 - 505
  7. Vadnere Gautam P, Pathan Aslam R, Kulkarni Bharti U, Abhay Kumar Singhai. [link]. International Journal of Research in Pharmacy and Chemistry
  8. University of Michigan, Michigan, United States [Internet] Glucomannan
  9. Sandip B. Patel, Devdas Santani, Veena Patel, Mamta Shah. Anti-diabetic effects of ethanol extract of Bryonia laciniosa seeds and its saponins rich fraction in neonatally streptozotocin-induced diabetic rats. Pharmacognosy Res. 2015 Jan-Mar; 7(1): 92–99. PMID: 25598641
Read on app