பெருஞ்சீரக விதை, ஒரு காரமான சுவையுடைய மசாலாப் பொருள் ஆகும். அது பார்ப்பதற்கு ஜீரக விதைகளைப் போல் தோன்றுகிற, ஆனால் அவற்றை விட சற்றே அதிக இனிப்புச் சுவை கொண்டதாகும். அவை, கேரட்டுகள் சார்ந்திருக்கும் அதே குடும்பத்தை சார்ந்த, பெருஞ்சீரக செடியில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதன் இதமான மற்றும் இனிய மணத்தை அறியாத, ஒரு இந்திய வீடு இருக்க முடியாது. அவை, ஒரு இதமான மற்றும் இனிமையான நறுமணத்தைக் கொண்டிருக்கின்றன மற்றும் நிறத்தில், வழக்கமாகப் பச்சை அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கின்றன. சொல்லப் போனால், பெருஞ்சீரக விதைகளை இந்தியர்கள், பல்வேறு உணவு சமைக்கும் முறைகளில் பரவலாகப் பயன்படுத்துகின்றனர். மேலும் வறுத்த பெருஞ்சீரக விதைகள், மிகவும் பிரபலமான ஒரு, உணவுக்குப் பிந்தைய வாய் சுத்தப்படுத்தியான முக்வாஸ்- ல் ஒரு முக்கியமான உட்பொருளாக இருக்கின்றன. தென்னிந்தியாவில், மக்கள் இந்த விதைகளில் இருந்து, செரிமானத்துக்கு நல்லது என்று கருதப்படும் பெருஞ்சீரகத் தண்ணீர் தயாரிக்கின்றனர். கிழக்குப் பகுதி இந்தியாவில் இது, பான்ச் ஃபோரோன் என்று அழைக்கப்படும் ஒரு வகை மசாலா கலவையின், முக்கியமான உட்பொருட்களில் ஒன்றாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது, வடஇந்தியாவிலும், குறிப்பாக காஷ்மீர் மற்றும் குஜராத் மாநிலங்களில் பயன்படுத்தப்படுகிறது.
பெருஞ்சீரகம் மத்திய தரைக்கடல் பகுதியை சார்ந்தது ஆகும். ஆரம்பத்தில் அது, கிரேக்கர்களால் பயிரிடப்பட்டு, பின்னர் அது ஐரோப்பாவின் மற்ற பகுதிகளுக்குப் பரவியது. பிறகு, அதன் மருத்துவப் பண்புகளை அளிப்பதற்காக அது, உலகத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. தற்போது இந்தியா, பெருஞ்சீரகத்தை அதிக அளவில் பயிரிடும் முதல் நாடாக இருக்கிறது. பெருஞ்சீரகத்தை விளைவிக்கும் மற்ற நாடுகளில், ரஷ்யா, ரோமானியா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் அடங்கும்.
சமையற் கலை மீது ஆர்வம் கொண்ட பெரும்பாலானவர்கள் பெருஞ்சீரக விதைகளின் பயனைப் பற்றி நன்கு அறிந்திருக்கிறார்கள். ஆனால், மொத்த பெருஞ்சீரக செடியையும், பல்வேறு காரணங்களுக்காகப் பயன்படுத்த முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா. பூக்கள் மற்றும் இலைகள் உணவுக்கு அழகூட்ட, இலைகளும் தண்டுகளும் பழக்கூட்டுகளில் மற்றும் பீஸாக்களில், பூப்போன்று அலங்கரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. உலர் பெருஞ்சீரகப் பழம், வழக்கமாக உமிழ்நீரின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக வாயில் மெல்லப்படும். மேலும் அது, மதுபானங்கள், சோப்புகள், சுவையூட்டிகள், இறைச்சி வகைகள், மற்றும் கேக்குகளில், ஒரு சுவையூட்டியாகவும் பயன்படுத்தப்படுகிறது.
இதன் பயன்கள் அவ்வளவு தான் என நீங்கள் எண்ண வேண்டாம், இந்த விதைகள், மருத்துவரீதியான பயன்களையும் கூட கொண்டிருக்கின்றன. பெருஞ்சீரக விதைகள், முக்கியமாக ஒரு அமில எதிர்ப்பு பொருளாக, மற்றும் வாய் துர்நாற்றத்தைப் போக்க ஒரு வாய் சுத்தப்படுத்தியாகப் பயன்படுத்தப்படுகின்றன. வேக வைக்கப்பட்ட பெருஞ்சீரக விதைகள் மற்றும் அவை வேக வைக்கப்பட்ட தண்ணீர், இரண்டும் வயிற்றுப் பொருமலைப் போக்க உதவுகின்றன மற்றும் உடல் எடைக் குறைப்புக்கும் உதவுகின்றன. பெருஞ்சீரக விதைகள், ஒரு வலி நிவாரணியாகவும், மற்றும் வீக்கத்தைக் குறைப்பதற்கும் கூட உதவுகின்றன. மேலும் பெருஞ்சீரகம், கண்களுக்கு நன்மை அளிக்கக் கூடியது என்று கருதப்படுகிறது.
இந்த சிறிய விதைகள் கொண்டிருக்கும் ஊட்டச்சத்து சார்ந்த மற்றும் குணமளிக்கும் அற்புதங்களைப் பற்றி நாம் இப்பொழுது காணலாம்.
பெருஞ்சீரக விதைகளைப் பற்றிய அடிப்படை விவரங்கள்:
-
தாவரவியல் பெயர்: ஃபெயோனிக்குலம் வல்கேர்
-
குடும்பம்: அப்பியசியயி
-
பொதுவான பெயர்: சோம்பு
-
சமஸ்கிருதப் பெயர்: மதுரிகா
-
பயன்படும் பாகங்கள்: விதைகள், தண்டுகள், இலைகள், மலர்கள், கிழங்குகள்
-
சொந்த பிராந்தியம் மற்றும் புவியியல் பரவுதல்: பெருஞ்சீரகம் உலகம் முழுவதும் பயிரிடப்படுகிறது. பெருஞ்சீரக த்தின் உலகளாவிய உற்பத்தியில், இந்தியா சுமார் 60% பங்களிப்பை வழங்குகிறது. இந்தியாவில் பெருஞ்சீரகம் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் மாநிலங்கள், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, பஞ்சாப், உத்திரப் பிரதேசம் மற்றும் ஹரியானா ஆகியவை ஆகும்
-
சுவாரஸ்யமான தகவல்கள்: பெருஞ்சீரக விதைகள், 'கூட்டம் விதைகள்' எனவும் குறிப்பிடப்படுகின்றன. ஏனென்றால், முற்காலத்தில், சர்ச்சுகளில் நடக்கும் நீண்ட கூட்டங்களின் போது, மெல்வதற்காக அவற்றை எடுத்துச் செல்வதை மக்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.