மாதவிடாய் வலியானது, மாதவிலக்கு வலி அல்லது வலிமிகுந்த மாதவிடாய் எனவும் அறியப்படுகிறது. இது, கிட்டத்தட்ட அனைத்துப் பெண்களுமே, அவர்களின் மாதவிடாய் காலத்தில் ஒரு முறையேனும், அனுபவித்த ஒன்றாக இருக்கிறது. மாதவிடாய் வலியானது, பல்வேறுபட்ட பெண்களால் பல்வேறு விதங்களில் உணரப்படுகிறது. ஒரு பெண், பல்வேறு மாதவிடாய் சுழற்சிகளை, பல்வேறு விதங்களில் உணரவும் செய்யலாம். சிலருக்கு, இது மிதமான மற்றும் குறைவான அசௌகரியத்தைக் கொடுக்கிற அதே வேளையில், வேறு சிலருக்கு இது வலிமிகுந்ததாக மற்றும் தொல்லை தருவதாக இருக்கிறது.
மாதவிடாய் வலி, உங்கள் தொடைகள், கால்கள், கீழ் முதுகு, மற்றும் சிலநேரங்களில் மார்புப்பகுதிக்கும் பரவக் கூடிய மாதவிடாய் காலத் தசைப்பிடிப்புகளாக, கீழ் இடுப்புப் பகுதியில் உணரப்படுகிறது. பெரும்பாலும் மாதவிடாய் வலி, ஒரு பெண்ணுக்கு அவரின் முதல் மாதவிடாய் காலத்தின் போது, மிகவும் தீவிரமானதாக இருக்கிறது.
இருந்தாலும், உங்களின் உடல்நிலை, மனநிலை மற்றும் ஊட்டச்சத்து நிலை ஆகியவற்றைப் பொறுத்து, உங்கள் வாழ்க்கையின் பிற்பகுதியில் கூட, மாதவிடாய் வலியைப் பல்வேறு மாறுபட்ட தீவிரமான நிலைகளில் நீங்கள் உணரக் கூடும். பெரும்பாலும், இது வீட்டிலேயே சிகிச்சை அளிக்கக் கூடியது. ஆனால், உங்கள் மாதவிடாய் வலி மிகவும் கடுமையாக மற்றும் தாங்க முடியாததாக இருக்கும் பட்சத்தில், உங்கள் வலியுடன் இணைந்த வேறு ஏதேனும் மறைந்திருக்கும் மருத்துவரீதியிலான பிரச்சினை அல்லது கோளாறு எதுவும் இல்லை என்பதை உறுதி செய்ய, உங்கள் மகப்பேறு மருத்துவரை அணுகும் படி, உங்களை மிக முக்கியமாக அறிவுறுத்துகிறோம்.