இந்தியாவில் பெருங்காயம் ஹிங் என பொதுவாக அழைக்கப்படுகிறது. பெருங்காயம் ஃபெரூலா அசாபோடிடா மற்றும் அதன் பல வகை மரபணு மூலிகைகளின் வேரில் இருந்து பிரித்தெடுக்கப்படும் மரப்பால் (கம் போன்ற பொருள்) ஆகும். இந்த தாவரம் பிரதானமாக மத்திய தரைக்கடல் பகுதிகளில் கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் காணப்படுகிறது. பெருங்காயம் அதன் மருத்துவ குணங்களுக்காக மிகவும் மதிப்பு வாய்ந்தது, குறிப்பாக செரிமானத்தில் உதவுகிறது.
ஆயுர்வேதத்தில், பெருங்காயம் ஒரு மலமிளக்கி (செரிமானத்தில் பயன்படும் மற்றும் மலம் கழிப்பதை ஊக்குவிக்கிறது) என அறியப்படுகிறது, மற்றும் ஃப்லாடுலேன்ட் (வாயு வெளியேற்ற உதவுகிறது மற்றும் வயிறு உப்புசத்தை குறைக்கிறது) ஆக வேளை செய்கிறது எனவும் விவரிக்கப்பட்டுள்ளது.
பெருலா வில் சுமார் 170 இனங்கள் உள்ளன. இதில் மூன்று இந்தியாவில் வளர்கின்றன, முக்கியமாக காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் இது அதிகமாக காணப்படுகிறது. இந்த தாவரம் அபியாசீஸ் என்னும் குடும்பத்தை சேர்ந்தது. மேலும் இது ஒரு பெரன்னியல் (இரண்டு ஆண்டுகளுக்கு மேல் வாழ கூடியது) மூலிகை மற்றும் பொதுவாக 4 மீட்டர் உயரம் வரை வளர கூடியது. இந்த தாவரத்தின் தண்டு வெற்றிடமானது மற்றும் சதைப்பற்று (நீரை சேமித்து வைக்க கூடியது) உள்ளது ஆகும். இதன் பூக்கள் வழக்கமாக மஞ்சள் நிறத்தில் இருக்கும். வேர்கள் மற்றும் வேர்த்தண்டுக்கிழங்கு (வேர்களின் கிடைமட்டமாக பருமன்) என்பது இந்த தாவரத்தின்ன் மிக மதிப்புள்ள பகுதியாகும், அதிலிருந்து தான் மரபால் 'ஒலியோரிஸின்' எடுக்கப்படுகிறது. இந்த மரபால் உலரவைக்கப்பட்டு பெருங்காயம் அல்லது ஹிங் தயாரிக்கப்படுகிறது.
அசாபோடிடா பற்றிய சில அடிப்படை தகவல்கள் (ஹிங்)
- தாவரவியல் பெயர்: ஃபெருலா அசாபோடிடா
- குடும்பம்: அபியாசீஸ்
- பொது பெயர்: ஹிங், ஹின்ஜர், கியாம், யங், ஹாங்கு, பெருங்காயம், இன்குவா, இங்குமோ
- சமஸ்கிருத பெயர்: பத்ஹிகா, அகுடகண்டு
- பயன்படுத்தப்படும் பகுதிகள்: வேர்கள் மற்றும் வேர்த்தண்டுக்கிழங்குகளின் உலர்ந்த மரப்பால் (பிசின்)
- இதன் பிராந்தியம் மற்றும் புவியியல் பரவல்: மத்திய மற்றும் கிழக்கு ஆசியாவின் மத்திய தரைக்கடல் பகுதிகள்