ஆளி விதைகள் என்றால் என்ன?
இன்றைய தலைமுறையில் பெரும்பாலான உடல்நல அக்கறை கொண்ட மக்கள், 'அதிசய' ஆளி விதைகளை பற்றி நன்கு அறிந்திருக்கின்றனர். ஆளி விதைகளை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டிருக்கும், அவர்களில் ஒருவராக நீங்கள் இருந்தால், ஆளி விதைகளைப் பற்றி மற்றும் உங்கள் உடலில் அதன் நல்ல விளைவுகள் பற்றி அனைத்தையும், படித்து தெரிந்து கொள்ள நீங்கள் சரியான இடத்தில் இருக்கிறீர்கள்.
ஆளி விதைகள், இளைய மற்றும் மூத்த தலைமுறைக்கு, உணவுப்பழக்கத்துக்கான ஒரு அருமையான ஆதாரமாக இருப்பதாக அறியப்படுகின்றன. அது அனைவரின் இதயத்திலும் இடம் பிடித்து இருக்கின்றது. ஒரு உணவு குறை நிரப்பியாக தொடங்கிய அது, விரைவில் மிட்டாய்கள், தானியங்கள், சக்தி பண்டங்கள், இன்ன பிற வடிவில் சந்தை அலமாரியை நிரப்பிருக்கிறது. உள்ளபடியே சொல்வதென்றால், விதைகளின் சிறந்த தரத்துக்காக, விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளி செடிகளை பயிரிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அறிவியல் மற்றும் ஆராய்ச்ச்சிகள், மேம்படுத்தப்பட்ட பல வகைகளில் ஆளி விதைகளை, சந்தையில் அளிப்பதில் வெற்றி அடைந்து இருந்தாலும், இந்த 21 -ஆம் நூற்றாண்டும், நீங்கள் நினைக்கக் கூடிய மாதிரியே புதிதாக ஆச்சரியப்படுகிறது. ஆளி விதைகளின் முந்தைய சாதனை, பழங்கால சகாப்தம் மீண்டும் வருவதற்கு உதவுகிறது. ஆளி விதைகள் மற்றும் நார்ச்சத்து பற்றி, பைபிள் -இல் கூட குறிப்பிடப்பட்டு இருக்கின்றது. எகிப்தியர்கள், பிணத்தைப் புதைப்பதற்கு முன்னர், மம்மியாக்கும் நடைமுறையில், அதனைப் பதனப்படுத்துவதற்கு, சணல் நார் துணி மற்றும் ஆளி விதையை பயன்படுத்துவதற்கு அறிந்து இருந்தார்கள். அதனால், மனிதன் எந்த அளவுக்குப் பழமையானவனோ, அந்த அளவுக்கு ஆளி விதைகளும் பழமையானவை எனக் கூறினால் பிழை ஆகாது.
ஆளி விதைகளைப் பற்றிய சில அடிப்படை உண்மைகள்:
- தாவரவியல் பெயர்: லினம் யுசிட்டாடிஸ்ஸிமம் ( இந்த இனத்தின் பெயர், "மிகவும் பயனுள்ளது" எனப் பெருள்படுகிறது)
- குடும்பம்: லினேசியே
- பொதுவான பெயர்: "அல்சி கே பீஜ்", அலிசி விதை, ஆளி விதை, வழக்கமான ஆளி.
- சமஸ்கிருதப் பெயர்: அடசி
- பயன்படும் பாகங்கள்: விதைகள்
- சொந்த பிராந்தியம் மற்றும் புவியியல் பரவுதல்: ஆளி விதைகள், பெரும்பாலான ஐரோப்பிய, ஆசியா, கனடா, மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளில் வளர்க்கப்படுகின்றன. இந்தியாவில், மஹாராஷ்டிரா, பீகார், சட்டிஸ்கர் மற்றும் மத்திய பிரதேசம் ஆகியவை ஆளி விதைகளின் முக்கிய உற்பத்தியாளர்கள் ஆகும்.
- ஆற்றலியல்: வெப்பமடைதல்.