இந்தியாவில் மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய்களில் பசு நெய் அல்லது தேசி நெய்யும் ஒன்று. ஒரு சமையல் பொருளாக இருப்பதைத் தவிர, பசு நெய் அதன் சிகிச்சைமுறை மற்றும் ஊட்டச்சத்து நன்மைகளுக்கு நன்கு அறியப்படுகிறது. பசு நெய் ஒரு ரசாயனம் என்பதை ஆயுர்வேத மருத்துவம் அங்கீகரிக்கிறது.

மிகவும் பழங்கால ஆயுர்வேத நூல்களில் ஒன்றான சரக் சமிதாவில், பசு நெய் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. சமஸ்கிருதத்தில் உண்மையில், பசு நெய்  க்ஹ்ரிடா என அழைக்கப்படுகிறது. இது தமிழில் "பிரகாசமான" அல்லது "பிரகாசத்தை உருவாக்க" என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, மாடு நெய்யின் நன்மைகளை பற்றி மிக சிறிய அறிவியல் ஆராய்ச்சிகளே இதுவரை நடத்தப்பட்டிருக்கிறது. இது பசுவில் இருந்து தயாரிக்கப்படும் ஒன்றாக இருந்தபோதிலும், நெய் உலகெங்கிலும் லட்சக்கணக்கானோரால் உபயோகிக்கப்படும் உயர்ந்த அளவிலான விருப்பமாக உள்ளது.

பசு நெய் என்றால் என்ன?

இந்தியாவின் உணவு பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்தின் படி, நெய் என்பது பால், திரிந்த பால், சமையல் வெண்ணெய் அல்லது சேகரிக்கப்பட்ட பால் கிரீம் ஆகியவற்றிலிருந்து எந்த வித பாதுகாப்பு பொருட்கள் மற்றும் நிறமும் சேர்க்கப்படாமல் தயாரிக்கப்பட்ட கொழுப்பு என வரையறுக்கப்படுகிறது.

உங்களுக்கு தெரியுமா?

பசு நெய் இந்து சமயத்தில் உயர்ந்த ஆன்மீக மற்றும் மத மதிப்பைக் கொண்டுள்ளது. இது வேத யஜ்-களினுடைய மிக முக்கியமான பாகங்களில் ஒன்றாகும். இந்து சடங்குகளின்படி கடவுட்களுக்கு பசு நெய் சமர்பிக்கப்படுகிறது.

  1. ஒரு நாளில் எவ்வளவு பசு நெய் சேர்த்துக்கொள்ளலாம்? - How much cow ghee can be taken per day in Tamil?
  2. எருமை நெய் மற்றும் பசு நெய் - Cow ghee vs. Buffalo ghee in Tamil
  3. பசு நெய்யின் ஆரோக்கிய நலன்கள் - Cow ghee health benefits in Tamil
  4. பசு நெய் பயன்பாடு - Cow ghee use in Tamil
  5. பசு நெய்யின் பக்க விளைவுகள் - Cow ghee side effects in Tamil
பசு நெய்யின் நன்மைகள், பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் டாக்டர்கள்

பசு நெய்க்கு இதுவரை எவ்வித அளவும் அறியப்படவில்லை. ஆனால் 3 கிராம் அளவு நெய் அதிக பக்க விளைவு இல்லாமல் மருத்துவ பரிசோதனையில் பயன்படுத்தப்பட்டது. உங்கள் உடற்கூறு மற்றும் உடலியல் நிலைக்கு ஏற்ப, உங்கள் ஆயுர்வேத டாக்டரிடம், பசு நெய்யின் சரியான அளவைப் பற்றி தெரிந்து கொள்வது நல்லது.

myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Urjas Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for sex problems with good results.
Long Time Capsule
₹712  ₹799  10% OFF
BUY NOW

பசு நெய் மற்றும் எருமை நெய் இரண்டிற்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன. பால் நிபுணர்கள் இவற்றின் தனித்துவமான நறுமணங்களின் அடிப்படையில் இந்த இரண்டையும் வேறுபடுத்திக் காட்டுகின்றனர். இருப்பினும், நம்மில் சிலருக்கு எருமை நெய்யில் இருந்து பசு நெய்யை சில எளிதில் கவனிக்கக்கூடிய பண்புகளை கொண்டு வேறுபடுத்தி பார்க்க தெரியும்:

  • பசு நெய் மஞ்சள் நிறத்தில் இருந்து தங்க நிறம் வரை இருக்கும். ஆனால் எருமை நெய் ஒரு பச்சை நிற சாயல் கொண்ட வெள்ளை நிற நிழலில் இருக்கும். பசு நெய்யில் இருக்கும் அதிகப்படியான பீடா-கரோட்டின், புல் மற்றும் தானியங்களில் இருக்கும் ஒரு மஞ்சள் நிறமி ஆகியவற்றின் காரணமாகவே பசு நெய் மஞ்சள் நிறமாக உள்ளது. அதுபோலவே எருமை நெய்யில் அதிகப்படியாக நிறைந்திருக்கும் பிலிரூபின் மற்றும் பில்வெர்டின் காரணமாக பச்சை நிற சாயல் ஏற்படுகிறது.
  • எருமை நெய்யுடன் ஒப்பிடும்போது பசு நெய் அதிக அளவு கொலஸ்ற்றால் உள்ளடக்கத்தை கொண்டிருக்கிறது.
  • பசு நெய்யை விட எருமை நெய்யில் முழு கொழுப்பு உள்ளடக்கம் அதிகம்.

பாரம்பரிய மற்றும் ஆயுர்வேத மருந்துகள் பசு நெய்யின் பல நன்மைகளை பட்டியலிடுகின்றன. இது கொழுப்பு உணவின் ஒரு ஆதாரமாக பயன்படுத்தப்படுகிறது, ஆனால் அது ஒரு சிறந்த உடல்நல ஊக்கமருந்து ஆகும். பசு நெய்யின் பாரம்பரிய குணப்படுத்தும் நன்மைகளை உறுதிப்படுத்த மருத்துவப் ஆய்வுகள் இன்னும் இல்லாத நிலையில், பெரும்பாலான இந்திய சமையல் அறைகளில் வேறு சில எண்ணெய்களுக்கு மாற்றீடாக சமையலில் மிகவும் விரும்பி பயன்படுத்தப்படும் ஒன்றாக நெய் இருக்கிறது. பசு நெய் பற்றிய சில ஆரோக்கிய நன்மைகள் சிலவற்றை ஆராய்வோம்.

  • வயிற்றுக்கு நல்லது: பசு நெய் உங்கள் வயிற்றின் உட்புற விளிம்பை பாதுகாக்கிறது மற்றும் நல்ல குடல் நுண்ணுயிரிகளை மேம்படுத்துகிறது. இது குடல் செல்களை மீண்டும் வளர உதவுகிறது மற்றும் பெருங்குடல் அழற்சி, எரிச்சலுடன் மலம் கழிக்கும் நோய்க்குறி மற்றும் வயிற்று புண்கள் போன்ற இரைப்பை குடல் நிலைமைகளை தடுக்கிறது.
  • ஒரு குழந்தை மசாஜ் எண்ணெய்: பசு நெய் குழந்தைகளுக்கான சிறந்த மசாஜ் எண்ணெய் ஆகும். இது உங்கள் சிறிய குழந்தையின் தோலிற்கு ஈரப்பதம் மற்றும் அவர்களின் மூளை வளர்ச்சிக்கு தேவைப்படுகிற டிஹெச்ஏ ஆகியவற்றை அளிக்கிறது.
  • காயம் குணமாவவதை மேம்படுத்துகிறது: பசு நெய் பாரம்பரியமாக ஒரு காயத்தை குணப்படுத்தும் சிகிச்சைமுறை முகவராக அறியப்படுகிறது. இது காயம்பட்ட இடத்தில் தோலின் மீளுருவாக்கம் மற்றும் புதிய திசு வளர்ச்சி ஆகியவற்றை ஊக்குவிக்கிறது. ஒரு இயற்கை ஆக்ஸிஜனேற்றியாக இருப்பதால், பசு நெய் வடு ஏற்படாமல் தடுக்கிறது.
  • மூளை செயல்பாட்டை மேம்படுத்துகிறது: பசு நெய் ஒமேகா -3 கொழுப்புகளின், குறிப்பாக டிஹெச்ஏவின் நல்ல ஆதாரமாக இருக்கிறது. டிஹெச்ஏ நினைவகம் மற்றும் அறிவாற்றல் போன்ற நரம்பியல் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. இது டிமென்ஷியா மற்றும் அல்சைமர் ஏற்படுவதற்கான ஆபத்துக்களை குறைக்கிறது
  • நீரிழிவு எதிர்ப்பான்: அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களின் நல்ல ஆதாரமாக பசு நெய் உள்ளது. இது இன்சுலின் சுரப்பை தூண்டி அதனால் இரத்த குளுக்கோஸ் அளவை குறைக்கக்கூடிய ஒரு வகை கொழுப்பு.
  • முடிக்கான நன்மைகள்: பசு நெய் உங்கள் முடிகான ஒரு டானிக் என்று அறியப்படுகிறது. இது உங்கள் உச்சந்தலை மற்றும் மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிக்கிறது மற்றும் ஈரப்பதமூட்டுகிறது. இதனால், பளபளப்பான மற்றும் பரட்டை இல்லாத மேம்பட்ட முடி வளர்ச்சிக்கு வழிவகுத்தது.

தோலுக்கு பசு நெய்யின் நன்மைகள் - Cow ghee benefits for skin in Tamil

பசு நெய் ஊட்டச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்த ஆதாரமாக உள்ளது. இந்த நெய்யில் உள்ள கொழுப்பு அமிலத்தன்மை மிகவும் ஈரப்பதம் கொண்ட ஒன்றாக அறியப்படுகிறது. எனவே, பசு நெய்யின் மேற்பூச்சு பயன்பாடு தோலுக்கு நீரேற்றம் அளிப்பது மட்டுமலாமல் அது உங்கள் தோலுக்கு ஊட்டமளித்து அதை மென்மையான மற்றும் மிருதுவானதாக தன்மையுடயதாக மாற்றுகிறது.

கூடுதலாக, பசு நெய் பல வயது குறைப்பான் குணங்களை கொண்டுள்ளது என்று நம்பப்படுகிறது. இதனை தொடர்ந்து பயன்படுத்துவதால் உங்களை இளைஞர்களாக தோற்றமளிக்க செய்வதோடு புத்துணர்வுடனும் வைத்திருக்கும்.

எடை இழப்புக்கு பசு நெய் - Cow ghee for weight loss in Tamil

நீங்கள் ஒரு எடை குறைப்பு செயல்பாட்டில் ஈடுபட்டு இருந்தால், நீங்கள்  அனைத்து வகையான கொழுப்பு உணவுகளையும் கண்டாலே ஓடுவீர்கள். நீங்கள் கொழுப்புக்களை உண்ணுவதை நிறுத்தி விட்டால், நீங்கள் மெலிந்து போவீர்கள் என்று பொதுவாக நம்பப்படுகிறது. பெரும்பாலான எடை இழப்பு திட்டங்களில் முக்கிய கவலை உடலில் கூடுதல் கொழுப்பை எரிப்பதே ஆகும். பசு நெய் எடை இழப்புக்கான வீட்டுப் மருந்து என பிரபலமாக அறியப்படுகிறது. ஆனால், விஞ்ஞான ஆய்வுகள் என வரும்போது, மாடு நெய்யின் எடை இழப்பு பற்றிய நன்மைகள் பற்றி அதிகப்படியாக நிரூபிக்க முடியாது.

நெய்யின் எடை இழப்பு பண்புகளுக்கு பொறுப்பான முக்கிய கலவையாக சி.எல்.ஏ. கொழுப்புகள் (இணைந்த லினோலிக் அமிலம்) அறியப்படுகிறது. எடை இழப்புத் திட்டங்களில் சி.எல்.ஏ.யின் செயல்திறனை சோதிப்பதற்கான பல ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன, ஆனால் அந்த முடிவுகளில் சர்ச்சைகள் இல்லாமல் இல்லை.

இரண்டு வெவ்வேறு மறுஆய்வு கட்டுரைகளின்படி, ஒரு நாளைக்கு 3 கிராம் நெய் நுகர்வு உடல் எடை மற்றும் கொழுப்பைக் குறைப்பதில் சில விளைவுகளை ஏற்படுத்தும் என அறியப்படுகிறது. எனினும், இந்த ஆய்வு முடிவின் இறுதியில் போதுமான அளவு உடல் எடையில் மாற்றம் எதுவும் ஏற்பட்டதாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மேற்கொண்டு செய்யபட்ட மருத்துவ சோதனை, உணவு முறையில் சி.எல்.ஏ. சேர்த்துகொள்ளப்படால் உடல் பருமன் கொண்ட மக்களின் உடல் பருமனிலும், பி.எம்.ஐ.-யிலும் எந்த விளைவையும் கொண்டிருக்கவில்லை என பரிந்துரைக்கிறது. ஆனால், சில சந்தர்ப்பங்களில் இடுப்பு சுற்றளவில் சிறிதளவு குறைப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. உறுதியான சான்று இல்லாத இந்த நிலையில், உங்கள் டாக்டரிடம் பசுவின் நெய்யின் சாத்தியமான எடை குறைப்பு நன்மைகளைப் பற்றி பேசுவது சிறந்தது.

(மேலும் வாசிக்க: உடல் பருமன் ஏற்படுவதற்கான காரணங்கள்)

இதயத்திற்கு பசு நெய் - Cow ghee for heart in Tamil

இதய நோய்களுக்கு பசு நெய்யின் நன்மை என வரும்போது, அதற்கு உறுதியான ஆதாரங்களை வழங்குவது கடினம். விவோ ஆய்வில், நெய்யின் நுகர்வு, உடலில் உள்ள உயர் அடர்த்தி (நல்ல) கொழுப்பை அதிகரிக்கலாம், இதையொட்டி இதய தமனியில் FSF (ஃபைப்ரின் சமச்சீர் காரணி)-யின் அளவு குறையலாம் என பரிந்துரைக்கிறது. உயர் இரத்த அழுத்தத்தின் காரணமாக கொரோனரி தமனிகள் வெளியிடும் ஒரு புரதம் FSF ஆகும். FSF-யை குறைப்பதால், பசு நெய் இரத்த அழுத்தத்தை குறைக்க பயன்படலாம் என குறிப்பு தெரிகிறது. 

(மேலும் வாசிக்க: உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகள்)

சமீபத்தில் மருத்துவ ஆய்வில், உணவில் நெய் சேர்த்துக்கொள்ளப்படுவதால் சீரத்தில் உள்ள  HDL-C (நல்ல கொழுப்பு) அதிகரிப்பதோடு, உடலில் டிரிகிளிசரைட்களின் (ஒரு கொழுப்பு வகை) அளவு குறைக்கிறது என தெரிய வந்துள்ளது. ட்ரைகிளிசரைடுகள் ஒரு வகையான இயற்கை கொழுப்புகள் ஆகும். அவை இதய நோய்களுடனும், இறப்புக்களுடனும் நீண்ட காலமாக தொடர்புபட்டவை.

(மேலும் வாசிக்க: உயர் கொழுப்பு சிகிச்சை)

உடலில் HDL கொழுப்பு அதிகரிப்பு நேரடியாக மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற இதய பிரச்சினை அதிகரிப்புகள் ஏற்பட காரணமான ஆத்தொரோக்ளெரோசிஸ் (தமனிகளில் உள்ள தகடு உருவாக்கம்) ஏற்படும் வாய்ப்பு குறைவதோடு தொடர்புடையது. . இருப்பினும், மனித உடலில் நெய்யின் நடவடிக்கை மற்றும் சாத்தியமான பக்க விளைவுகளை கண்டறிய இன்னும் ஆய்வுகள் தேவைப்படுகின்றன. நீங்கள் எந்தவொரு இதய பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தாலும், நீங்கள் எவ்வளவு அளவு பசு நெய் சேர்த்து கொள்ளலாம் என்பதை உங்கள் ஆயுர்வேத டாக்டரிடம் கேட்டு அறிந்து கொள்வது நல்லது.

வயிற்றுக்கு பசு நெய்யின் நன்மைகள் - Cow ghee benefits for stomach in Tamil

பசு நெய் பாரம்பரியமாக பல்வேறு இரைப்பை குடல் பிரச்சினைகளுக்கு ஒரு பயனுள்ள தீர்வு என்று அறியப்படுகிறது. ஆயுர்வேத டாக்டர்களின் கூற்றுப்படி, பசு நெய் வயிற்றின் உட்புற புறணிக்கு ஒருசிறந்த ஈரப்பதமளிக்கும் காரணி ஆகும்.

பசு பால் என்பது ப்யூரிக் அமிலத்தின் (ஒரு சிறிய சங்கிலி கொழுப்பு அமிலம்) அறியப்பட்ட ஆதாரமாக உள்ளது. ப்யூரிக் அமிலம், நுண்ணுயிரி அல்லது நச்சுகள் உடலில் பரவுவதற்கான அபாயத்தை குறைக்கக்கூடிய குடல் தொற்று தடுப்பான்களை வலுவூட்டுகின்றது என்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் ஆய்வுகள் குடல் செல்களின் வளர்ச்சி, குடல் மற்றும் குடல் நுண்ணுயிர்களின் பெரிஸ்டேடிக் (அலை) இயக்கம் ஆகியவற்றில் ப்யூரிக் அமிலத்திற்கு ஒரு முக்கிய பங்கு உண்டு என்று கூறுகின்றன.

புண்கள், அழற்சி குடல் நோய்கள் மற்றும் பெருங்குடல் அழற்சி போன்ற பொதுவான குடல் பிரச்சினைகள் மீது அழற்சி எதிர்ப்பு விளைவை சமச்சீர் செய்வதற்கும் இது அறியப்படுகிறது. இருப்பினும், மனித வயிற்றில் பசு  நெய்யின் குணப்படுத்தும் விளைவுகளை நிரூபிக்க எந்த மருத்துவ ஆதாரமும் இல்லை. எனவே, மனிதர்களுக்கு பசு நெய்யின் நன்மைகளைப் பற்றி மேலும் அறிய உங்கள் ஆயுர்வேத வைத்தியரிடம் பேசுவதே சிறந்தது.

(மேலும் வாசிக்க: வயிற்றில் அமிலத்தன்மை ஏற்பட காரணங்கள்)

குழந்தைகளுக்கான பசு நெய் - Cow ghee for babies in Tamil

பாரம்பரியமாக, பசு நெய் குழந்தைகளுக்கு ஒரு சிறந்த எண்ணெய் ஆதாரமாகவும், மசாஜ் எண்ணெய்யாகவும் கருதப்படுகிறது.  நரம்பியல் மற்றும் மூளை நோய்களில் உயிரியக்க ஊட்டச்சத்து மருந்துகள் மற்றும் உணவு துணை புத்தகத்தின் படி, நெய் ஒரு சிறந்த கேரியர் எண்ணெய் ஆகும்.

இது தோலிற்குள் உறிஞ்சப்பட்டு, உடல் செல்களை வந்தடைந்து அதற்கு உள்ளே செல்லலாம். இதனால், பல்வேறு சத்துக்கள் மற்றும் மூலிகைக் கூறுகளை குழந்தையின் தோலிற்குள் கொண்டு செல்ல ஒரு வாகனமாக இது பயன்படுத்தப்படுகிறது. கூடுதலாக, நெய் என்பது டிஹெச்ஏ மற்றும் ஒமேகா -3 கொழுப்புகளின் அறியப்பட்ட ஆதாரமாக இருக்கிறது. இது குழந்தைகளின் மூளை செயல்பாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமான ஒன்றாகும். எனினும், இந்த கோட்பாடுகள் அல்லது அதன் பக்க விளைவுகளை சோதிக்கும் எந்த மருத்துவ ஆய்வுகளும் மனிதர்களில் இல்லை. உங்கள் குழந்தைக்கு சிறந்தது என்ன என்பதை உங்கள் மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்வது அவசியம்.

கண்களுக்கு பசு நெய் - Cow ghee for eyes in Tamil

பசு நெய் பல்வேறு கண் பிரச்சினைகளின் சிகிச்சைக்கு நன்கு அறியப்பட்ட ஒரு ஆயுர்வேத தீர்வு. ஆயுர்வேத மருத்துவர்களின் படி, பசு நெய் ஒரு சிறந்த மசகு எண்ணெய் ஆகும். இதனால், கணினி பார்வை நோய்க்குறி-க்கு(சி.வி.எஸ்) இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கணினி பார்வை நோய்க்குறி என்பது நீண்ட நேரம் கணினி உபயோகிப்பதால் கண்கள் உலர்ந்து போவது மற்றும்  கண்களில் அரிப்பு ஏற்படுவது போன்றவை ஆகும்.

(மேலும் வாசிக்க: உலர்ந்த கண்ணிற்கு சிகிச்சை)

கூடுதலாக, பசு நெய் வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த ஒரு மூலமாகும். இதுவே நெய்யை ஒரு சிறந்த டானிக் மற்றும் கண்களுக்கு ஏற்ற ஒரு சிகிச்சைமுறை முகவராக மாற்றுகிறது. நெய்யை  திரிபலா மற்றும் தேன் உடல் கலந்து இரவில் சாப்பிடுவது கண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.

கொழுப்புக்கான பசு நெய் - Cow ghee for cholesterol in Tamil

ஒரு  இன் விவோ ஆய்வின் படி, நெய் நுகர்வு கல்லீரலில் இருந்து பித்த கொழுப்பின் சுரப்பியை தூண்டுகிறது. இதன் விளைவாக, விலங்கு மாதிரிகளில் குறிப்பிட்ட அளவு சீரம் கொழுப்பு குறைந்து காணப்பட்டது. இதேபோல், நெய் உட்கொள்வது சீரம்-ல் உள்ள மொத்த கொழுப்பு அளவைக் குறைப்பதில் சில விளைவை ஏற்படுத்தும் என்று சமீபத்திய மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.

இருப்பினும், பசு நெய் அதிகபட்ச கொழுப்பு மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் நிறைந்த ஒன்று என அறியப்படுகிறது. எனவே, நீங்கள் அதிக கொலஸ்டிரால் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், பசு நெய் எடுத்துக் கொள்வதற்கு முன்பு உங்கள் ஆயுர்வேத டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

காயத்தை குணப்படுத்துவதற்கான பசு நெய் - Cow ghee for wound healing in Tamil

பாரம்பரிய மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறை அதன் காயம் ஆற்றும் பண்புகளுக்காக பசு நெய்யை பயன்படுத்தி வருகிறது.

பசு நெய் மற்றும் கற்றாழை ஆகியவற்றால் செய்யப்பட்ட ஒரு மருந்து, கீறல் (மேலோட்டமான காயங்கள்) மற்றும் உள் (ஆழமான திசு) காயங்களை குணப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என விலங்கு மாதிரி சோதனைகள் தெரிவிக்கின்றன.

இது கொலாஜன் வளர்ச்சி, புதிய திசு உருவாக்கம் மற்றும் காயம் மூடப்படும் நேரம் ஆகியவற்றின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கூடுதலாக, இந்த ஜெல்லின் காயம் குணப்படுத்தும் திறன் பொதுவான மேற்பூச்சு கிரீம்களை போலவே இருக்கிறது என பரிந்துரைக்கப்பட்டது.

மூளைக்கு பசு நெய்யின் நன்மைகள் - Cow ghee benefits for brain in Tamil

நெய் DHA (ஒரு வகை கொழுப்பு) மற்றும் ஒமேகா -3 கொழுப்புகளின் ஒரு நல்ல ஆதாரம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த கொழுப்பு அமிலங்கள் மூளையின் முக்கியமான பகுதியாகின்றன.

 மருந்தியல் ஆராய்ச்சி என்ற ஒரு கட்டுரையின் படி, நினைவகம் மற்றும் அறிவாற்றல் போன்ற முக்கியமான மூளை செயல்பாடுகளுக்கு DHA பொறுப்பெற்கிறது. பொதுவாக மூளையில் குறைந்த அளவு டிஹெச்ஏ, அல்சீமர் நோய் மற்றும் டிமென்ஷியா போன்ற  நரம்பியல் குறைபாடுகளுடன் தொடர்புபடுத்தப்படுகின்றன.  

ஆயுர்வேதத்தில், பசு நெய் அறிவாற்றல் மற்றும் நினைவகத்தை மேம்படுத்த உதவுவதாக அறியப்படுகிறது. இருப்பினும், இது விலங்கு ஆய்வுகளால் உறுதி செய்யப்படவில்லை. எனவே, ஒரு மூளையின் தூண்டு முகவராக நெய்யின் திறனை புரிந்து கொள்ள  உங்கள் ஆயுர்வேத டாக்டரிடம் பேசுவது சிறந்தது.

பசு நெய்யின் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் - Cow ghee antioxidant properties in Tamil

விலங்கு ஆய்வுகள் CLA நிறைந்த நெய் கல்லீரலில் ஆக்ஸிஜனேற்றிகளின் அளவை அதிகரிக்கிறது என்று கூறுகின்றன. மேலும் இது கடுகு எண்ணெயை விட நல்ல இரத்தச் சர்க்கரைக் குறைப்பான் என்று கூறப்பட்டது .

கூடுதலாக, நெய்யின் நுகர்வு எச்டிஎல் கொழுப்பு அளவை கணிசமாக அதிக அளவிற்கு எடுத்துச் செல்கிறது என்று குறிப்பிட்டது.

மொத்தமாக, தமனிகளில் கொழுப்பு நச்சுத்தன்மை அதிகரிப்பு மற்றும் பிளேக் உருவாக்கம் ஆகியவற்றின் அபாயத்தை இந்த பண்புகள் குறைக்கிறது. இதனால் இதய ஆரோக்கியத்திற்காக பசு நெய்யை ஒரு சிறந்த கொழுப்பு மாற்றீடான ஆக்குகிறது. இருப்பினும், நெய்யைப் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரிடம் நீங்கள் பரிந்துரை பெருவது எப்போதுமே நல்லது.

நீரிழிவுக்கான பசு நெய் - Cow ghee for diabetes in Tamil

இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதில் நெய்யின் வலிமையைக் கூறும் பல ஆதாரங்கள் உள்ளன என்றாலும், அவற்றை உறுதிப்படுத்துவதற்கு அறிவியல் சான்றுகள் இல்லை.

இருப்பினும், நெய்யில் சிறிய மற்றும் சங்கிலி கொழுப்புகள் அதிகமாக இருப்பதுடன், மோனோ மற்றும் பல நிறைவுறா கொழுப்பு அமிலங்களின் நல்ல மூலமாகும்.

ஒரு ஆய்வு கட்டுரை படி, இந்த அனைத்து கொழுப்புகளுக்கும் குடல் ஹார்மோன் GLP-1 மீது ஒரு தூண்டல் விளைவு உள்ளது. GLP-1, உடலில் இன்சுலின் வெளியீட்டை தூண்டுவதால் இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்க வழிவகுக்கிறது. இருப்பினும், இது ஒரு கோட்பாட்டினை வரையறுக்க அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கிறது. இதை நிறூபிக்க மேலும் சான்று அடிப்படையிலான ஆய்வுகள் தேவைப்படுகிறது.

(மேலும் வாசிக்க: நீரிழிவு அறிகுறிகள்)

முடிக்கு பசு நெய்யின் நன்மைகள் - Cow ghee benefits for hair in Tamil

ஆயுர்வேதத்தில் பசு நெய் முடிக்கு பல நன்மைகள் செய்வதாக அறியப்படுகிறது. முதலில், இது ஒரு சிறந்த மாய்ஸ்சரைசர் ஆகும், இது உங்கள் உச்சந்தலையை ஈரப்பதமாக வைத்திருந்து, உலர் மற்றும் அரிப்பு தோல் அறிகுறிகள் ஏற்படாமல் தணிக்கிறது. இரண்டாவதாக, இது ஒரு சிறந்த கேரியர் எண்ணெய் ஆகும், இதன் அர்த்தம் நீங்கள் பசுவின் நெய்யுடன் பல மூலிகைகளை சேர்த்து மசாஜ் எண்ணெய் வடிவில் பயன்படுத்தலாம்.

(மேலும் வாசிக்க: உச்சந்தலையில் அரிப்பு ஏற்பட காரணங்கள்)

இந்த மூலிகைகள் உங்கள் உச்சந்தலையில் சிறப்பாக உறிஞ்சப்படுவது மட்டும் அல்லாது, அவை உங்கள் உச்சந்தலை மற்றும் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒரு செல்லுலார் அளவில் வேலை செய்யும். இறுதியாக, பசு நெய்யில் அதிக அளவில் உள்ள வைட்டமின் ஏ  மற்றும் மற்ற சத்துக்கள் ஒரு சிறந்த முடி டானிக்-காக இதை வேலை செய்ய வைக்கிறது. எனவே, பசு நெய்யை பயன்படுத்துவதால் உங்கள் மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிப்பது மட்டும் அல்லாது, உங்களுக்கு பளபளப்பான மற்றும் பரட்டை அற்ற முடியை வழங்கும்.

புற்றுநோய் பராமரிப்புக்கான பசு நெய் - Cow ghee for cancer care in Tamil

புற்றுநோய் வரும் முன் காப்பு மற்றும் ஆபத்து குறைப்பு தொடர்பான பசு நெய் சார்ந்த உணவு திறன் பண்புகளை சோதிக்க பல ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. மார்பக புற்றுநோய் வளர்ச்சியைக் குறைப்பதில் சோயா எண்ணை விட பசு நெய் மிகவும் திறமையானதாக இருப்பதாக அத்தகைய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

கல்லீரலில் புற்றுநோய் வளர்சிதை மாற்றத்தைத் துவங்குவதற்கு பொறுப்பான சைட்டோக்ரோம் p450 (புரதம்) செயலை பசு நெய் முடக்குகிறது என்று மேலும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், மனித ஆய்வுகள் இல்லாத நிலையில், புற்றுநோய்களுக்கு எதிரான பசு நெய்யின் செயல் திறன் பற்றி அறிய  உங்கள் ஆயுர்வேத வைத்தியரிடம் பேசுவதே சிறந்தது.

பசு நெய்யின் மிகவும் பொதுவான பயன்பாடானது ஒரு சமையல் எண்ணெய் வடிவில் உள்ளது. அதன் தனித்துவமான நறுமணம் காரணமாக இது பேக்கிங், இனிப்புகள் அல்லது சாலட் டிரஸ்ஸிங் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது. ஆயுர்வேத அழகுசாதன பொருட்கள் மற்றும் சோப்புகளில் இது ஈரப்பதம் மற்றும் சிகிச்சைமுறை ஆகிய பயன்பாட்டிற்காக ஒரு மூலக்கூறாக சேர்க்கப்படுகிறது.

காப்ஸ்யூல்கள் மற்றும் கண் துளி போன்ற சில ஆயுர்வேத சூத்திரங்களில் பயன்படுத்தப்படும் முக்கிய பொருட்களில் பசு நெய் ஒன்றாகும்.

(மேலும் வாசிக்க: ஆலிவ் எண்ணெய்யின் நன்மைகள்)

  • பசு நெய்யில் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்கிறது, இது நேரடியாக ஆத்தெரோஸ்லரோசிஸ் மற்றும் இதய பக்கவாதம் போன்ற நிலைமைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, மிதமான அளவு நெய்யை உங்கள் உணவில் எடுத்து கொள்ளலாம் அல்லது உங்கள் உடலியல் நிலைக்கு ஏற்ப நீங்கள் சாப்பிடக்கூடிய நெய்யின் சரியான அளவை அறிந்து கொள்ள டாக்டரிடம் பேசுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.
  • கலப்படம் செய்யப்பட்ட நெய்யில் சில தீங்கு விளைவிக்கும் கொழுப்புகள் இருக்கலாம். எனவே, உங்கள் வீட்டிலேயே சொந்தமாக நெய் தயாரித்துக்கொள்வது அல்லது உங்கள் நம்பகமான பிராண்டுகளிலிருந்து நெய் வாங்குவதே சிறந்தது.
  • சில ஆய்வுகளில், மலச்சிக்கலின் அறிகுறிகள் அதே போல் குமட்டல் மற்றும் வாந்தியின் அறிகுறிகள் நெய் நுகர்வு தொடர்புடையதாக உள்ளது. நீங்கள் உங்கள் உணவில் நெய்யை சேர்த்துக்கொள்ள விரும்பினால், நீங்கள் குறைந்த அளவில் இருந்து தொடங்குவதே சிறந்ததாக உள்ளது.
  • மூச்சுக்குழாய் அழற்சி அல்லது காசநோய் போன்ற ஒரு சுவாசக் கோளாறு நோயால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், நீங்கள் நெய்யை உணவில் சேர்த்துக்கொள்ளாமல் இருப்பதே சிறந்தது.
Dr. Harshaprabha Katole

Dr. Harshaprabha Katole

Ayurveda
7 Years of Experience

Dr. Dhruviben C.Patel

Dr. Dhruviben C.Patel

Ayurveda
4 Years of Experience

Dr Prashant Kumar

Dr Prashant Kumar

Ayurveda
2 Years of Experience

Dr Rudra Gosai

Dr Rudra Gosai

Ayurveda
1 Years of Experience


Medicines / Products that contain Ghee

மேற்கோள்கள்

  1. Rita Rani, Vinod K. Kansal. Study on cow ghee versus soybean oil on 7,12-dimethylbenz(a)-anthracene induced mammary carcinogenesis & expression of cyclooxygenase-2 & peroxisome proliferators activated receptor- γ in rats. Indian J Med Res. 2011 May; 133(5): 497–503. PMID: 21623034
  2. Kumar MV, Sambaiah K, Lokesh BR. Hypocholesterolemic effect of anhydrous milk fat ghee is mediated by increasing the secretion of biliary lipids. J Nutr Biochem. 2000 Feb;11(2):69-75. PMID: 10715590
  3. Mohammadifard N, Hosseini M, Sajjadi F, Maghroun M, Boshtam M, Nouri F. Comparison of effects of soft margarine, blended, ghee, and unhydrogenated oil with hydrogenated oil on serum lipids: A randomized clinical trail. ARYA Atheroscler. 2013 Nov;9(6):363-71. PMID: 24575140
  4. Hui Yan, Hui Yan, KolapoM. Ajuwon. Butyrate modifies intestinal barrier function in IPEC-J2 cells through a selective upregulation of tight junction proteins and activation of the Akt signaling pathway. PLoS One. 2017; 12(6): e0179586. PMID: 28654658
  5. Andrzej Załęski, Aleksandra Banaszkiewicz, Jarosław Walkowiak. Butyric acid in irritable bowel syndrome . Prz Gastroenterol. 2013; 8(6): 350–353. PMID: 24868283
  6. Kalpana S. Joshi. Docosahexaenoic acid content is significantly higher in ghrita prepared by traditional Ayurvedic method. J Ayurveda Integr Med. 2014 Apr-Jun; 5(2): 85–88. PMID: 24948858
  7. Yogita Surendra Karandikar, Akshata Sanjay Bansude, Eesha Ajit Angadi. Comparison between the Effect of Cow Ghee and Butter on Memory and Lipid Profile of Wistar Rats. J Clin Diagn Res. 2016 Sep; 10(9): FF11–FF15. PMID: 27790463
  8. Hosseini M, Asgary S. Effects of dietary supplementation with ghee, hydrogenated oil, or olive oil on lipid profile and fatty streak formation in rabbits. ARYA Atheroscler. 2012 Fall;8(3):119-24. PMID: 23358722
  9. Mohammadifard N, Hosseini M, Sajjadi F, Maghroun M, Boshtam M, Nouri F. Effect of hydrogenated, liquid and ghee oils on serum lipids profile. ARYA Atheroscler. 2010 Spring;6(1):16-22. PMID: 22577408
  10. Shankar SR. Serum lipid response to introducing ghee as a partial replacement for mustard oil in the diet of healthy young Indians. Indian J Physiol Pharmacol. 2005 Jan;49(1):49-56. PMID: 15881858
  11. Whigham LD, Watras AC, Schoeller DA. Efficacy of conjugated linoleic acid for reducing fat mass: a meta-analysis in humans. Am J Clin Nutr. 2007 May;85(5):1203-11. PMID: 17490954
  12. Onakpoya IJ, Posadzki PP, Watson LK, Davies LA, Ernst E. The efficacy of long-term conjugated linoleic acid (CLA) supplementation on body composition in overweight and obese individuals: a systematic review and meta-analysis of randomized clinical trials. Eur J Nutr. 2012 Mar;51(2):127-34. PMID: 21990002
  13. Ribeiro AS et al. Effect of Conjugated Linoleic Acid Associated With Aerobic Exercise on Body Fat and Lipid Profile in Obese Women: A Randomized, Double-Blinded, and Placebo-Controlled Trial. Int J Sport Nutr Exerc Metab. 2016 Apr;26(2):135-44. PMID: 26402730
  14. Kathirvelan Chinnadurai, Harpreet Kaur Kanwal, Amrish Kumar Tyagi, Catherine Stanton, Paul Ross. High conjugated linoleic acid enriched ghee (clarified butter) increases the antioxidant and antiatherogenic potency in female Wistar rats. Lipids Health Dis. 2013; 12: 121. PMID: 23923985
  15. C. Guo, T. Huang, A. Chen, X. Chen, L. Wang, F. Shen, and X. Gu. Glucagon-like peptide 1 improves insulin resistance in vitro through anti-inflammation of macrophages. Braz J Med Biol Res. 2016; 49(12): e5826. PMID: 27878229
Read on app