திருமணமான தம்பதிகளுக்கு, அதிலும் முக்கியமாக ஒரு பெண்ணிற்கு, வாழ்வின் மிகக் கடினமான மற்றும் வேதனையைத் தரக்கூடிய ஒரு முடிவு கருக்கலைப்பு ஆகும்.
கருக்கலைப்பு என்பது மருத்துவரீதியாக ஒரு கருவை அழிப்பதே ஆகும். இதை மருத்துவம் மூலமாகவோ அல்லது அறுவை சிகிச்சை மூலமாகவோ செய்வர். கருக்கலைப்புக்கான பாதுகாப்புகள் மற்றும் செயல்முறைகள், கர்ப்பத்தின் மூன்றுமாத காலகட்டத்தை பொறுத்து மாறும். கருக்கலைப்பு செயல்முறைகளை கர்ப்பத்தின் ஆரம்ப கட்டத்தில் விரைவாக செய்துமுடித்தால், கருக்கலைப்பினால் உண்டாகும் சிக்கல்களை தவிர்க்கலாம்.
பல விதங்களிலும் கருக்கலைப்பு பாதுகாப்பானதாகவே இருப்பினும், அதனால் வரும் பக்க விளைவுகள் சில பெண்ணை பாதிக்கும். அவற்றுள் சில - கடுமையான இரத்தப்போக்கு, இடுப்பு கோளாறுகள், குமட்டல் மற்றும் வாந்தி ஆகும். மேலும் அதிகப்படியான இரத்த இழப்பு, காய்ச்சல் மற்றும் தீவிர வலி ஏற்படும்பொழுது மருத்துவரை அணுகுவதே சிறந்ததாகும்.
எதிர்கால கருத்தரித்தல் அல்லது பெண்ணின் கருத்தரித்தல் தன்மையை, கருக்கலைப்பு எவ்விதத்திலும் பாதிக்காது. எனவே மருத்துவரின் உதவியோடு செய்யப்படும் கருக்கலைப்பு பாதுகாப்பானதே ஆகும்.