கர்ப்ப சோதனையை மேற்கொள்வது என்பது ஒரு பெண்ணிற்கு ஆவலான மற்றும் பதற்றமான ஒரு தருணம் ஆகும். ஏனெனில் அதுவே ஒரு பெண்ணிற்கு கர்ப்பம் வேண்டுமா வேண்டாமா என்பதை தீர்மானிக்கும் தருணம் ஆகும். கர்ப்ப சோதனை தொகுப்புகள் மற்றும் கருவிகள் சிறியதாகவே இருப்பினும்கூட, அவற்றில் இருந்து வரும் முடிவுகள் வாழ்வை மாற்றக்கூடியதாகவே இருக்கும். அனைத்து கர்ப்ப சோதனை தொகுப்புகளும் கர்ப்ப கால சுரப்பியான மனித கோரியானிக் கொனடோடிராபின் அல்லது ஹெச்.சி.ஜீ என்னும் சுரப்பி பெண்ணின் உடலில் அதாவது இரத்திலோ அல்லது சிறுநீரிலோ உள்ளதா என்பதையே பரிசோதிக்கின்றன. பல விதமான கர்ப்ப சோதனைகள் சந்தையில் இருந்தாலும் கூட, அதன் செயல்முறையின் அடிப்படையில் அவற்றை மக்களும் சுகாதார தொழில்முறையாளர்களும் ஆராய்ந்து உபயோகிக்கின்றனர்.
சிறுநீர் கர்ப்ப சோதனையில், ஒரு துண்டு, கேசட், அல்லது ஒரு மிதவை சாதனம் பயன்படுத்தப்படுகிறது. பிறகு, உற்பத்தியாளர் வழிகாட்டுதல்களின்படி முடிவுகளின் விளக்கங்கள் அறியப்படுகிறது. நாம் சோதனை மேற்கொள்ளும்பொழுது ஏற்படுத்தும் சில தவறுகளால் நாம் எதிர்பார்த்த விளைவுகள் வராமல் போக வாய்ப்புகள் உள்ளன. கர்ப்ப சோதனைகளின் துல்லியம் நூறு சதவீதம் இல்லாத காரணத்தினால், உறுதிபடுத்துகிற கர்ப்ப சோதனை, சுகாதார வசதிக்கூடங்களில், மருத்துவர்களால் மேற்கொள்ளப்படுகிறது. இந்த சோதனைகளில் இரத்த மாதிரி அல்லது அல்ட்ராசவுண்ட் மூலம் முடிவுகளை அறிய முடிகிறது.
ஒரு கர்ப்ப சோதனையின் உள்ளடக்கம் என்ன ?
கர்ப்ப கால சுரப்பியான மனித கோரியானிக் கொனடோடிராபின் அல்லது ஹெச்.சி.ஜீ பெண்ணின் ரத்தத்திலோ அல்லது சிறுநீரிலோ உள்ளதா என கண்டறிதலே கர்ப்ப சோதனையின் அடிப்படைக் கொள்கை ஆகும். எனவே, கர்ப்ப சோதனை என்பது தவறான சொல்வழக்கு ஆகும். ஏனெனில் சோதனையில் கர்ப்ப கால சுரப்பி உள்ளதா என கண்டறியப்படுகிறதே தவிர கரு இருக்கிறதா என்பதை பரிசோதிப்பதில்லை. ஆரம்ப கருவானது கருப்பை உட்புறத்தில் ஒட்டிய பிறகு, நஞ்சுக்கொடி என்ற அமைப்பு சுரப்பதே இந்த கர்ப்ப கால சுரப்பியான மனித கோரியானிக் கொனடோடிராபின் அல்லது ஹெச்.சி.ஜீ ஆகும்.
இதுவே கர்ப்பத்தின் முதன்மை செயல் ஆகும். சிறுநீர் கர்ப்ப சோதனை இல்லாது சுகாதார வசதிக்கூடங்களில், இரத்த மாதிரியை கொண்டு ஹெச்.சி.ஜீ சுரப்பியின் இருத்தலை கண்டறிகின்றனர். மேலும் அல்ட்ராசவுண்ட் மூலம் கருவின் இருத்தலை கண்டறிகின்றனர்.