துத்தநாகம் குறைபாடு என்றால் என்ன?
துத்தநாகம் என்பது உணவு மற்றும் உணவுப்பொருட்களிலிருந்து பெறப்படும் ஒரு முக்கிய கனிமமாகும். இது புரதம் மற்றும் டி.என்.ஏ. போன்ற புரோட்டீன் தொகுப்பாகும், இது கர்ப்ப கால வளர்ச்சி, குழந்தைப்பருவ வளர்ச்சி, வாசனை மற்றும் சுவையின் சரியான உணர்வு, காயம் குணமடைதல் மற்றும் நோயெதிர்ப்பு செயல்பாடு போன்ற உடலிலுள்ள பல்வேறு செயல்பாடுகளில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. உடலில் துத்தநாகத்திற்கு என்று எந்த சேமிப்பு முறையும் இல்லை என்பதால் போதுமான அளவு துத்தநாகம் உடலுக்கு தேவைப்படுகிறது. உடலில் போதிய அளவு துத்தநாகம்இல்லாதது துத்தநாக குறைபாடு என அழைக்கப்படுகிறது.
அதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் என்ன?
துத்தநாகம் குறைபாட்டின் பொதுவான அறிகுறிகள்:
- பசியின்மை.
- வளர்ச்சி நிலையில் தாமதம் அல்லது குறைபாடு.
- குறைவான நோய் எதிர்ப்பு சக்தி.
அரிய மற்றும் கடுமையான குறைபாடு அறிகுறிகள் பின்வருமாறு:
- வயிற்றுப்போக்கு.
- முடி கொட்டுதல்.
- ஆண்மையின்மை.
- தாமதமாக பருவமடைதல்.
- தோல் மற்றும் கண்ணில் புண்கள்.
- ஆண்களுக்கு பாலணு ஆக்கம் குறைதல்.
பிற அறிகுறிகளாவான, தாமதமாக காயம் ஆறுதல், எடை இழப்பு, சோம்பல் மற்றும் குறைந்த சுவை உணர்வு போன்றவை துத்தநாக குறைபாடுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.
முக்கிய காரணங்கள் என்ன?
துத்தநாகப் பற்றாக்குறையின் முக்கிய காரணங்கள்:
- உணவு பற்றாக்குறை.
- உடலில் முறையற்ற உணவு உறிஞ்சப்படுதல்.
- உடலின் துத்தநாக தேவையின் அதிகரிப்பு.
- உடலில் இருந்து துத்தநாகத்தின் அதிகரித்த இழப்பு.
பின்வரும் காரணிகள் துத்தநாகப் பற்றாக்குறையின் ஆபத்தை அதிகரிக்கின்றன:
- மோசமான உணவு உட்கொள்ளல்.
- மது பழக்கம்.
- குரோன்ஸ் நோய், குடற்புண்கள், எரிச்சல் குடல் நோய்க்குறி, வாந்தி போன்ற இரைப்பை நோய் வகைகள் உணவிலிருந்து துத்தநாகம் உறிஞ்சுதலைக் குறைக்கிறது.
- கர்ப்பம் மற்றும் பாலூட்டும்போது உடலில் துத்தநாகத்தின் தேவை அதிகரிக்கத்தல்.
இது எப்படி கண்டறியப்படுகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது?
இரத்தத்தில் உள்ள துத்தநாக அளவை சோதித்து, துத்தநாகத்தின் கடுமையான பற்றாக்குறையைக் கண்டறிய ஒரு இரத்த பரிசோதனை பயன்படுத்தப்படுகிறது. ஆல்கலின் பாஸ்பட்டேஸ் என்சைம் மற்றும் ஆல்புமனின் நிலைகள் துத்தநாக குறைபாட்டை கண்டறிய உதவும்.
துத்தநாகம் பற்றாக்குறையில் துத்தநாகம் மாற்று சிகிச்சை முக்கியமானது. அடிப்படை காரணங்களைப் பொறுத்து துத்தநாகத்தின் அளவு மாறுபடுகிறது.
துத்தநாகக் குறைபாடு காரணமாக ஏற்படும் தோல் புண்கள் மாய்ஸ்சரைசர் மற்றும் மேற்பூச்சு ஸ்டீராய்டுகள் மூலம் சிகிச்சையளிக்கப்படாது.
துத்தநாகம் மிகுந்த உணவு வகைகளை சாப்பிடுவது, இந்த நிலைமை கையாள உதவியாக இருக்கும். சிப்பி வகை உணவு, சிவப்பு இறைச்சி, கோழி, பயிறு வகைகள், பீன்ஸ், முழு தானியங்கள் மற்றும் பால் பொருட்கள் போன்ற உணவு வகைகளில் உடலின் தேவைகளை பூர்த்தி செய்ய துத்தநாகம் போதுமான அளவில் உள்ளன.