திறந்த காயம் என்றால் என்ன?
காயம் காரணமாக தோலில் ஏற்படும் வெடிப்புகள் பெரிதாகி தோலின் உட்புறத்தில் உள்ள திசுக்கள் வெளிப்படையாக தெரிந்தால் அது திறந்த காயங்கள் என கூறப்படுகின்றன. இதன் விளைவாக, காயத்தில் இரத்த போக்கு மற்றும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உண்டாகிறது . பெரும்பாலான திறந்த காயங்கள் தோலின் மேற்பரப்பில் காணப்படுகின்றன, மற்றும் சிறிதானவை. சில காயங்கள் தீவிரமானவை. அவை ஆழமான திசுக்களாகிய நரம்புகள், இரத்தக் குழாய்கள் மற்றும் தசைகள் போன்றவற்றை பாதிக்கின்றன.
இதன் முக்கிய அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
திறந்த காயத்தின் முக்கிய அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்:
- வலிமிகுந்த கன்றிப்போன காயம்.
- மிதமான அல்லது கடுமையான இரத்தபோக்கு.
- காயமடைந்த தோலின் மேல் பரவும் நீலநிற அல்லது செந்நிற மாற்றம்.
- பாதிக்கப்பட்ட பகுதியில் செயல்பாடு இழப்பு.
- வீக்கம்.
முக்கிய காரணங்கள் யாவை?
திறந்த காயத்திற்கு முக்கிய காரணங்கள் மற்றும் காயங்களின் வகைகள் பின்வருமாறு:
- ஒரு மேற்பரப்பில் தோல் தேய்க்கப்படும் போதோ அல்லது உரசும் போதோ சிராய்ப்பு எனும் ஆழமற்ற காயம் ஏற்படுகிறது.
- அதிர்ச்சி, ஒரு பொருளோடு மோதுதல் அல்லது விபத்து ஏற்படும் போதும் கீறல்காயம் எனும் ஆழமான காயம் ஏற்படுகிறது.
- கத்தி அல்லது அறுவை சிகிச்சை கத்தி போன்ற கூர்மையான பொருளால் வெட்டப்படும் போது ஆழமான கீறல் எனும் திறந்த காயம் ஏற்படுகிறது.
- ஆணிகள், ஊசிகள் அல்லது பற்கள் (விலங்கு அல்லது மனிதக் கடி) போன்ற மெல்லிய முனைகளை கொண்ட பொருட்களால் வரும் திறந்த காயத்திற்கு துளை காயம் என்று பெயர்.
- துப்பாக்கிக் குண்டு போன்ற தோளை துளைத்து செல்லும் ஒரு பொருளால் ஊடுருவும் காயம் ஏற்படுகிறது.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது?
ஒரு திறந்த காயத்தை மருத்துவர் மதிப்பீடு செய்து தகுந்த சிகிச்சை அளிக்க உதவுகிறது.
திறந்த காயங்களுக்கு சிகிச்சையளிக்க பின்வரும் முறைகள் பயன்படுத்தப்படுகின்றன:
- காயத்தில் இரத்த போக்கு ஏற்பட்டால், சுத்தமான துணிக்கட்டை பயன்படுத்தி மென்மையாக அழுத்தினால் அது நின்றுவிடும்.
- ஒரு காயத்திலிருந்து அந்த காயம் ஏற்பட காரணமான பொருட்களை அகற்றி, காயத்தை தண்ணீரால் கழுவி, காயத்திலிருந்து எஞ்சிய கழிபொருட்களை அகற்ற நோய் நுண்மங்கள் ஒழிக்கப்பெற்ற கரைசலில் கழுவ வேண்டும். இப்படி செய்வதால் நோய் தொற்று ஏற்படுவதற்க்கான வாய்ப்பு குறையும்.
- ஆண்டிபயாடிக் களிம்பு மருந்துகள், காயத்தின் மேல் ஒரு மெல்லிய அடுக்கில் பயன்படுத்தப்படுகிறது.
- இணைப்புகள், நுண்ணுயிர் நீக்கப்பட்ட கட்டுகள், தையல்கள் அல்லது தோல் பசை கொண்ட துணிக்கட்டுகள் காயத்தை மூடுவதற்கு பயன்படுத்தப்படலாம்.
- டெட்டனஸ் தடுப்பூசி போட்டு ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருந்தால், டெட்டனஸ் போட வேணடும். அதுவும் குறிப்பாக தொற்று காயங்கள், விலங்கு அல்லது மனிதக் கடி காரணமாக காயம் ஏற்பட்டிருந்தால் டெட்டனஸ் அவசியம் போட வேண்டும்.