வில்ம்ஸ் கட்டி என்றால் என்ன?
வில்ம்ஸ் கட்டி என்பது சிறுநீரக அல்லது சிறுநீரகக் குழாய் சார்ந்த புற்றுநோய் ஆகும். இது கருப்புற்று வகையினைச் சேர்ந்தது. இது குழந்தைகளில் காணப்படும் மிகவும் பொதுவான திட வீரிய புத்திழையப் பெருக்கம் (புற்றுநோயான கட்டி) வகையினதாகும். இந்த நிலையை முதலில் மருத்துவர் மேக்ஸ் வில்ம்ஸ்,என்ற அறுவைசிகிச்சை நிபுணர் வேறு பெயரில் விவரித்தார், ஆரம்பத்தில் இது சிறுநீரகத்தின் பிறவி சார்ந்த சதைப்புற்று என்று அறியப்பட்டது. பின்னர் மேக்ஸ் வில்ம்ஸ் நினைவாக வில்ம்ஸ் கட்டி என்று அழைக்கப்பட்டது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
இந்த கட்டி ஒரு குழந்தை 10 வயதை எட்டுவதற்கு முன்னரே தோன்றுகிறது. வில்ம்ஸ் கட்டியின் பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:
- வயிற்றில் தொட்டுணரக்கூடிய அசாதாரண வளர்ச்சி.
- வயிற்று வலி.
- பசியிழப்பு.
- குமட்டல்.
- வாந்தி.
- சிறுநீரில் குருதி ( சிறுநீருடன் குருதி கலந்து வெளிப்படும் ஒரு நிலை).
- ஈரல் பெருக்கம் (விரிவடைந்த கல்லீரல்).
- நீர்க்கோவை (வயிற்றில் திரவம் சேர்தல்).
- இதய செயலிழப்பு.
- அதிகரித்த இரத்த அழுத்தம்.
- டிஸ்மார்பிசம் (அசாதாரண உடல் அமைப்பு).
- தோல் நிறமிழப்பு.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
வில்ம்ஸ் கட்டி ஒரு அரிய நோயாகும். மரபணு காரணிகள் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வில்ம்ஸ் கட்டியின்நோயாக்கம் பற்றிய புரிதலுக்கு கணிசமான மரபியல் மற்றும் மூலக்கூறு ஆய்வுகள் பங்களித்திருக்கின்றன. குரோமோசோம் 11-ல் ஏற்படும் மாற்றங்கள் வில்ம்ஸ் கட்டியுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
இதன் கண்டறிதல் முறைகள் பின்வருமாறு:
- மேல் வயிற்றில் வீக்கம் இருத்தல்.
- நோய் விபரவியல் ஆய்வுகள் மற்றும் நோய் சார்ந்த குடும்ப வரலாறு.
- வயிறு மற்றும் இடுப்பு அல்ட்ராசோனோகிராபி.
- கைக்குழந்தைகளில் இரத்தச் சர்க்கரைக் குறைவு அல்லது ஹைப்போகிளைசீமியா (குறைந்த இரத்த சர்க்கரை).
- வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி (சி.டி) ஸ்கேன்.
- முழுமையான இரத்த எண்ணிக்கை (சி.பி.சி).
- சிறுநீரக செயல்பாடு சோதனை.
- சிறுநீர்ப்பரிசோதனை.
- கல்லீரல் செயல்பாடு சோதனைகள்.
இதற்கான சிகிச்சையில், அறுவை சிகிச்சை, வேதிச்சிகிச்சை (கீமோதெரபி), மற்றும் கதிரியக்க சிகிச்சை ஆகியவை அடங்கும். அறுவை சிகிச்சையின் பங்கு இக்கட்டானது, ஏனெனில் கட்டிகள் உடைவதற்கு வாய்ப்புகள் இருக்கலாம். வயிற்று உள்ளுறை வழியாக முழுமையாக சிறுநீரகத்தை அகற்றல் முறை மூலம் சிறுநீரகத்தை அகற்றும் அறுவை சிகிச்சையே ஒருபக்க சிறுநீரக கட்டிக்கான சிறந்த அறுவை சிகிச்சை முறை ஆகும். சிறுநீரகத்தை பகுதி அளவு அகற்றுதல் அல்லது வெட்டியெடுத்தல் பல சந்தர்ப்பங்களில் மேற்கொள்ளப்படுகிறது. அகற்றுதல் முடிந்தவுடன் மீட்பு விரைவாக நடைபெறுகிறது. ஒரே சிறுநீரகத்தின் மீதான சுமை தொடர்பான சிக்கல்களைத் தடுக்க சிறுநீர் பிரித்தல் தேவைப்படலாம்.