வெஜென்னரின் கிரானுலோமடோசிஸ் - Wegener's Granulomatosis in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

May 14, 2019

March 06, 2020

வெஜென்னரின் கிரானுலோமடோசிஸ்
வெஜென்னரின் கிரானுலோமடோசிஸ்

வெஜென்னெரின் கிரானுலோமாடோசிஸ் என்றால் என்ன?

வெஜென்னெரின் கிரானுலோமாடோசிஸ் என்பது நாள அழற்சியின் (இரத்த நாளங்களின் வீக்கம்) ஒரு தனித்துவமான வடிவமாகும்.இது நடுத்தர வயதில் உள்ள இரு பாலினர்களையும் பாதிக்கிறது.இது குழந்தைகளை மிக அரிதாகவே பாதிக்கிறது.இது பெரும்பாலும் மூச்சுமேற்சுவடு, நுரையீரல், மற்றும் சிறுநீரகங்கள் ஆகியவற்றை பாதிக்கும் ஒரு தன்னுடல் தாக்கு நோய் ஆகும்.இந்த நிலைமையினால் பாதிக்கப்படையும் பிற உறுப்புகளில் மூட்டுகள், கண்கள், தோல், மற்றும் மத்திய நரம்பு மண்டலம் (மூளை மற்றும் முதுகுத் தண்டு) ஆகியவை அடங்கும்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

இதன் மருத்துவ தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

இந்த நிலை ஏற்படுவதற்கான சரியான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.இருப்பினும், சில காரணிகள் இந்த நிலை ஏற்படுவதற்கான ஆபத்தை அதிகரிப்பதாக கருதப்படுகிறது.நியூட்ரோஃபிலிக் புரதக்கூறுகள் என்ற பொருட்களுக்கு எதிராக இலக்கு வைக்கப்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பிகள் அடிக்கடி உயர்ந்த அளவில் இருத்தல் காரணமாகவே வெஜென்னெரின் கிரானுலோமாடோசிஸ் ஏற்படுகிறது.இந்த புரதக்கூறுகள் ஒரு வகை புரதங்களே ஆகும்.இந்த கோளாறின் வளர்ச்சிக்கு மரபியலும் ஒரு பங்கு வகிப்பதாக எண்ணப்படுகிறது.சில நோய்த் தொற்றுகளும் இந்த நிலையை ஏற்படுத்தும் என்று சந்தேகிக்கப்படுகிறது.ஆனால் குறிப்பிட்ட நோய்த் தொற்று முகவர்கள் இன்னும் அறியப்படவில்லை.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

இதன் நோய் கண்டறிதல் மதிப்பீட்டில் மார்பக எக்ஸ்-கதிர்கள் சோதனை, நுரையீரல், மூச்சுமேற்சுவடு மற்றும் சிறுநீரகங்களின் திசுப் பரிசோதனை, ஆகியவையுடன் நுரையீரல் ஊடு சோதிப்பு அடங்கும்.சிறுநீரில் புரதங்கள் இருப்பதை கண்டறிய சிறுநீர் பரிசோதனை உதவுகிறது.முழுமையான குருதி எண்ணிக்கை (சி.பி.சி) இரத்த சோகையை கண்டறிய பயன்படுகிறது.சீரம் எலக்ட்ரோலைட்டுகளின் பகுப்பாய்வு குறைந்த சோடியம் அளவை தீர்மானிக்க செய்யப்படுகிறது.வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கை மற்றும் இரத்தத் தட்டுகளின் அளவு பரிசோதனையுடன் (இரத்தத்தில் உள்ள அணுக்கள்) உயர்ந்த சிவப்பணு படியும் அளவு (ஈ.எஸ்.ஆர்) ஆகியவை அடிக்கடி செய்யக்கூடிய ஆனால் குறிப்பிடப்படாத ஆய்வக கண்டுபிடிப்புகள் ஆகும்.

இதன் ஆரம்ப கட்ட சிகிச்சையில் ஸைக்லஃபாஸ்ஃபமைட்கள் மற்றும் குளூக்கோகார்ட்டிகாய்டுகள் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. ஸைக்லஃபாஸ்ஃபமைட்கள் மற்றும் பிரேட்னிசொலோன் ஆகியவற்றின் கலவை சிறந்த சிகிச்சையளிக்க உதவுவதோடு, நோயை குணமடையச் செய்கிறது.எனினும், இதன் பயன்பாட்டினால் கடுமையான பக்க விளைவுகள் ஏற்படலாம்.மீத்தோடிரெக்சேட்டு மற்றும் பிரேட்னிசொலோன் ஆகியவற்றின் கலவையானது, பிற உயிருக்கு ஆபத்தான அச்சுறுத்தும் நிலைமைகள் இல்லாத தனிநபர்களில் பயன்படுத்தப்படுகிறது. சிகிச்சையின் ஆரம்ப கட்டங்களில் இயக்க ஊக்கி மருந்துகள் பயனுள்ளதாக இருக்கின்றன.இருப்பினும், இயக்க ஊக்கி மருந்துகளின் அளவு படிப்படியாகக் குறைக்கப்பட வேண்டும். ஏனெனில், இது பராமரிப்பு சிகிச்சையில் குறிப்பிட்ட பங்குவகிப்பதில்லை. தொடர்புடைய பக்க விளைவுகளுக்கு எதிராக பல மருந்துகள் நோய் வராமல் தடுப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றன. இந்த மருந்துகளில் புரோட்டான் பம்ப் தடுப்பான்கள், கால்சியம் குறைநிரப்புகள், சல்பாமெதாக்ஸ்ஜோல் மற்றும் டிரிமெத்தோபிரிம் ஆகியவை அடங்கும்.



மேற்கோள்கள்

  1. Johns Hopkins Vasculitis Center [Internet]; Granulomatosis with Polyangiitis.
  2. Yi ES,Colby TV. Wegener's granulomatosis. Semin Diagn Pathol. 2001 Feb;18(1):34-46. PMID 11296992
  3. Nichole Graves. Wegener granulomatosis. Proc (Bayl Univ Med Cent). 2006 Oct; 19(4): 342–344. PMID: 17106496
  4. American Academy of Ophthalmology [internet] California, United States; Wegener granulomatosis.
  5. Lamprecht P,Gross WL. Wegener's granulomatosis. Herz. 2004 Feb;29(1):47-56. PMID: 14968341
  6. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Granulomatosis with Polyangiitis.
  7. Better health channel. Department of Health and Human Services [internet]. State government of Victoria; Granulomatosis with polyangiitis.