தோல் நிறமி இழத்தல் (வெண் புள்ளிகள்) என்றால் என்ன?
தோல் நிறமி இழத்தல் (வெண் புள்ளிகள்) என்பது சருமத்தின் மெலனின் நிறமிகள் இழக்கப்பட்டு வெள்ளையாக மாறும் ஒரு மரபியல் சார்ந்த நிலைமையாகும். இது ஒரு தொற்றும் தன்மையடைய நிலை அல்ல. உடலில் குறிப்பிட்ட சில இடங்களில் அல்லது உடல் முழுவதிலுமே பரந்து காணப்படலாம். அரிதான உலகளாவிய வகை ஒன்று உள்ளது, இதில் முழு உடலில் இருந்து மெலனின் நிறமி மறைந்துவிடும். உலகளவில், தோல் நிறமி இழத்தல் மக்கள் தொகையில் 1% -4% - ஐ பாதிக்கிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
இதன் தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:
இது உச்சந்தலையின் முடி நிறம், கண் இமைகள் மற்றும் புருவங்கள், மற்றும் ஆண்களில் தாடி போன்ற மற்ற பாகங்கள் பாதிக்கிறது. இது கண்கள் மற்றும் உதடுகள் போன்ற உடலின் மற்ற பாகங்களின் நிறத்தையும் பாதிக்கக்கூடும்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
பெரும்பாலும், இந்த நிலை பெறப்பட்ட ஒன்றாகும். ஆனால், சில நேரங்களில் பரம்பரையாகவும் ஏற்படலாம். சருமத்தில் இத்தகைய எதிர்வினையைத் தூண்டக்கூடிய அங்கீகாரமற்ற சுற்றுச்சூழல் காரணிகளும் உள்ளன. இந்த நிலை குடும்பத்தில் உள்ள சகோதரர்கள் அல்லது சகோதரிகளிடமிருந்து 6%-மும் உறவினர்களிடமிருந்து 25% -30%-மும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இது பெரும்பாலும் தன்னுடல் தாக்கு நோய்கள் உள்ளவர்களிடத்தில் காணப்படுகிறது. இது அவர்களுடைய குழந்தைகளுக்கும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
உங்கள் மருத்துவர் உடல் ரீதியாக பரிசோதித்து நிலைமையை ஆராய்ந்து பார்த்து உங்கள் அறிகுறிகளைப் பற்றி கேட்பார். இந்த நிலை சார்ந்த குடும்ப அல்லது கடந்தகால வரலாறு பற்றி கேட்டறிவார். பின்வரும் ஆய்வக சோதனைகள் மேற்கொள்ளப்படலாம்:
- முழுமையான குருதி எண்ணிக்கை.
- தைராய்டு சோதனைகள்.
- பிற தன்னுடல் தாக்கு நிலைகளை கண்டறிய பிறபொருளெதிரி சோதனைகள்.
- ஃபோலேட் அல்லது வைட்டமின் பி 12 சோதனை.
- வைட்டமின் டி அளவுகள்.
சில மருந்துகள், ஒளிக்கதிர் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை ஆகியவை சிகிச்சை முறைகளில் அடங்குகிறது. பாதிக்கப்பட்டவரின் சருமத்தில் உள்ள திட்டுக்களின் நிறத்தை சரும நிறத்துடன் பொருத்த நுண்நிறமேற்றம் செய்யப்படலாம். சருமத்தை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க சன்சன்ஸ்க்ரீன்கள் போன்ற சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கும் பொருட்களை பயன்படுத்துவது நல்லது. சுய-மதிப்பு குறைவதன் காரணமாக சில நோயாளிகளில் மன சோர்வு ஏற்படக்கூடும். சரியான ஆலோசனை மற்றும் ஆதரவு குழுக்கள் மன அழுத்தம் மற்றும் மன சோர்வு அத்தியாயங்களை சமாளிக்க உதவும்.