வைட்டமின் கே குறைபாடு என்றால் என்ன?
வைட்டமின் கே கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின், அதாவது மனித உடலில் இது உறிஞ்சப்படுவதற்கு கொழுப்பு தேவைப்படுகிறது.வைட்டமின் கே இரண்டு வடிவங்களில் உள்ளது, அதாவது, தாவரங்களின் மூலமாக கிடைக்கும் வைட்டமின் கே1 (ஃபில்லோகுவினோன்) மற்றும் குடலில் இருந்து இயற்கையாகவே கிடைக்கும் வைட்டமின் கே2 (மெனாகுவினோன்) ஆகும். ஃபில்லோகுவினோன்களே வைட்டமின் கே-ன் முக்கிய உணவு ஆதாரமாக உள்ளன.இது கீரை, ப்ரோக்கோலி மற்றும் முட்டைக்கோஸ் போன்ற பச்சை காய்கறிகளில் காணப்படுகிறது. மெனாகுவினோன் பொதுவாக சில விலங்குகளில் இருந்து பெறப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் நொதித்தலுக்கு உட்பட்ட உணவுகளில் காணப்படுகிறது.அவை நொதித்தலுக்கு காரணமான பாக்டீரியாக்களால் தயாரிக்கப்படுகின்றன. இது பெரும்பாலான மனிதர்களில் மனித குடலில் போதுமான அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.
வைட்டமின் கே இரத்தப்போக்கை கட்டுப்படுத்தக்கூடிய முக்கியமான புரதங்களை உடலில் உற்பத்தி செய்கிறது.வைட்டமின் கே குறைபாடு என்பது உடலில் இரத்தப்போக்கு ஏற்படும் அபாயத்திற்கு வழிவகுக்கும் இது போன்ற முக்கியமான புரதங்களின் உற்பத்தி செய்ய முடியாத நிலையே ஆகும்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
குறைபாடு இருப்பதைக் குறிக்கும் தாக்கங்களும் அறிகுறிகளும் பின்வருமாறு:
- அதிகபடியான இரத்தப்போக்கு.
- எளிதாக சிராய்ப்பு ஏற்படுதல்.
- நகப்படுகைளில் இரத்தப்போக்கு.
- உணவுப்பாதையில் ஏதாவது இடத்தில் இரத்தப்போக்கு இருத்தல்.
- வெளிர்மை மற்றும் பலவீனம்.
- இருண்ட நிற மலம் அல்லது இரத்தம் கலந்த மலம்.
- சிறுநீருடன் இரத்தம் கலந்திருத்தல்.
- எலும்பு பலவீனமடைதல்.
- தடிப்புகள்.
- விரைவான இதய துடிப்பு.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
வைட்டமின் கே குறைபாடு எந்த வயதிலும் ஏற்படலாம், ஆனால் புதிதாக பிறந்த கைக் குழந்தைகளில் இக்குறைபாடு ஏற்படுவதற்கான ஆபத்து அதிகம் உள்ளது. வைட்டமின் கே குறைபாடு ஏற்படுவதறகான பிற காரணங்கள் பின்வருமாறு
- ஊட்டச்சத்துக் குறைபாடு.
- கல்லீரல் நோய்.
- போதுமான அளவில் உணவு உட்கொள்ளாமை.
- கொழுப்பு அகத்துறிஞ்சாமை.
- நோய்த்தொற்றுகள் மற்றும் இரத்தஉறைவு தடுப்பிக்கு சிகிச்சையளிக்க கொடுக்கப்படும் மருந்துகள்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
நோயாளியின் மருத்துவ பின்புலம் வைட்டமின் கே குறைபாட்டின் சாத்தியத்தை அடையாளம் காண அறியப்படுகிறது.இரத்தக்கசிவு ஏற்படும் நேரத்தை அடையாளம் காண இரத்த உறைவு சோதனை மேற்கொள்ளப்படுகிறது. வைட்டமின் கே குறைபாடுகளின் விளைவுகளை மதிப்பிடுவதற்கான புரோத்திராம்பின் நேரம் சோதனை, இரத்தப்போக்கு நேரம், உறைவு நேரம் மற்றும் செயல்படுத்தப்பட்ட பகுதியளவு புரோத்திராம்பின் நேரம் சோதனை ஆகிய பிற சோதனைகள் செய்யப்படுகின்றன.
இதற்கான சிகிச்சை முறைகள் பின்வருமாறு
- வாய்வழியாக அல்லது ஊசி மூலமாக உட்செலுத்தக்கூடிய வைட்டமின் கே குறைநிரப்புகள்.
- கீரை போன்ற பச்சை இலை காய்கறிகள், கடுகு, முட்டைக்கோஸ், மற்றும் ப்ரோக்கோலி போன்ற வைட்டமின் கே நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொள்ளுதல்.