வைட்டமின் பி 12 குறைபாடு என்றால் என்ன?
வைட்டமின் பி 12 என்பது சையனோகோபாலமின் எனவும் அழைக்கப்படுகிறது.உயிரணு வளர்சிதை மாற்றத்தில் குறிப்பாக டி.என்.ஏ தொகுப்பு மற்றும் ஆற்றல் உற்பத்தியில் இது ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.வைட்டமின் பி 12 வயிற்றில் இருந்து வெளியாகும் அகக் காரணி என்ற காரணியுடன் இணைந்த பிறகு சிறு குடலில் உறிஞ்சப்படுகிறது.வைட்டமின் பி 12 குறைபாட்டினால் அசாதாரண சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தி ஏற்படுகிறது.இது மெகாலோபிளாஸ்டிக் இரத்தசோகைக்கு வழிவகுக்குகிறது.இதனைத் தவிர்த்து, வைட்டமின் பி 12 குறைபாடு நரம்பு நரம்புக்கணத்தாக்குகளின் பரிமாற்றத்தை தடைசெய்து மயிர்க்கால்கள், முதுகுத் தண்டு போன்ற பல திசுக்களை பாதிக்கிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
இதன் ஆரம்ப கால அறிகுறிகள் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளன:
- சோர்வு.
- ஆற்றல் இழப்பு.
- மூச்சுவிடுவதில் சிரமம்.
- மயக்கமடைதல்.
- தலைவலி.
- வெளிறிய தோல்.
- நாக்கில் புண்.
- வாயில் புண்கள்.
- எரிச்சலூட்டும் தன்மை.
- எடை இழப்பு.
- பசியிழப்பு.
- கைகாலுறுப்புகளில் கூச்ச உணர்வு மற்றும் உணர்வின்மை.
- குறித்த காலத்திற்கு முன்னரே முடி சாம்பல் நிறமாக மாறுதல்.
இதன் கடுமையான அறிகுறிகள் பின்வருமாறு:
- அறிவுத்திறன் குறைதல்.
- இரத்த நாளங்களில் படலம் (பிளேக்) உருவாகுதல்.
- உடற்பருமன்.
- உயர் இரத்த அழுத்தம்.
- அதிக கொழுப்புச்ச்த்து.
- எலும்புப்புரை.
- பார்வை இழப்பு.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
இக்குறைபாடு ஏற்படுவதற்கான சில காரணங்கள் பின்வருமாறு:
- குடலில் பி 12 அகத்துறிஞ்சாமைக்கு வழிவகுக்கும் வாழழி சோகை என்ற தன்னுடல் தாக்கு நிலைமை.
- குடும்பத்தினரிடத்தில் ஏற்கனவே வாழழி சோகை இருத்தல்.
- மீன், முட்டை, இறைச்சி, மற்றும் காளான்கள் போன்ற வைட்டமின் பி 12 நிறைந்த உணவுகளை உட்கொள்ளாமை.
- இன்சுலின் மற்றும் அமிலத்தன்மைக்கான மருந்துகள் வயிற்றில் அகக் காரணியின் போதுமான அளவு உற்பத்தியை தடுக்கிறது.
- வயிறு அல்லது குடல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படுதல்.
- வயிற்று அழற்சிநோய் போன்ற குடல் சார்ந்த கடுமையான நோய்கள்.
- புற்றுநோய்.
- கருத்தரிப்பு.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
உடல் சார்ந்த அறிகுறிகளின் மதிப்பீடு மற்றும் நோய் சார்ந்த விரிவான வரலாற்றுடன் கூடிய பொது பரிசோதனை, இந்த நிலைமையை கண்டறிய உதவுகிறது.
இதற்கான இரத்த பரிசோதனைகளில் பின்வருவன அடங்கும்.
- ஹீமோகுளோபின் அளவுகள் - குறைந்த ஹீமோகுளோபின் அளவு இரத்த சோகை இருப்பதைக் குறிக்கிறது.
- வைட்டமின் பி 12 அளவுகள்.
- இரத்த சிவப்பணுக்களின் படம் - இரத்த உயிரணுக்களின் அளவு பெரிதாக இருந்தால், அது குறைபாடு இருப்பதைக் குறிக்கிறது.
- பி12 குறிக்காட்டிகளின் அளவீடு, அதாவது, சீரம் ஹோமோசிஸ்டீன் அல்லது மெத்தில் மலோனிக் அமிலம்.
- வாழழி சோகையை கண்டறிய சில்லிங் சோதனை.
சிகிச்சை முறைகளில் பின்வருவன அடங்கும்.
- வாய்வழியாக அல்லது ஊசி மூலமாக வைட்டமின் பி12 - ஐ கூடுதலாக சேர்த்தல்.
- வைட்டமின் பி 12 நிறைந்த உணவுகளை உங்கள் உணவுத் திட்டத்தில் சேர்த்துக்கொள்ளுதல்.