வைரஸ் காய்ச்சல் என்றால் என்ன?
காய்ச்சல் என்பது உடலின் வெப்பநிலை சராசரி அளவைவிட அதிகமாக இருக்கும் நோயின் அறிகுறியாகும். பொதுவாக உடலில் நுழைந்துள்ள அந்நிய உயிரினத்தை எதிர்த்து உடல் போராடுகிறது என்பதைத்தான் காய்ச்சல் குறிக்கிறது. அந்த உயிரினம் வைரஸாக இருக்கும் போது அது வைரஸ் காய்ச்சல் எனப்படும். நிறைய வைரஸ் தொற்று நோய்கள் காய்ச்சலை உண்டாக்கலாம், எடுத்துக்காட்டு சளி, டெங்கு மற்றும் சுவாச தொற்று.
நோயின் தொடர்புடைய முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
ஒருவர் வைரஸ் காய்ச்சலுடன் பின்வரும் அறிகுறிகளை அனுபவிக்கலாம்:
- உடல் வலி.
- பலவீனம்.
- பசியின்மை.
- உடல் எடை குறைவது.
- அயர்ச்சி.
- குமட்டல்.
- வாந்தி எடுத்தல்.
- தடித்தல்.
- தலைவலி.
- குளிர்தல்.
- நடுங்குதல்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
காய்ச்சலை ஏற்படுவதற்குரிய பொதுவான வைரஸ் தொற்றுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
- டெங்கு காய்ச்சல்.
- சுவாச ஒத்திசை வைரஸ் தொற்று.
- எச் ஐ வி தொற்று .
- மத்திய காது தொற்று.
- பன்றி காய்ச்சல்.
- சின்னம்மை.
- தட்டம்மை.
- தோல்நோய் அழற்சி.
- கல்லீரல் அழற்சி.
- குளிர் நடுக்கம்.
வைரஸால் மாசுபடுத்தப்பட்ட உணவை உட்கொள்ளுவதால் உணவு நஞ்சேற்றம் ஏற்பட்டு வைரஸ் காய்ச்சல் உண்டாகலாம். நோய்த்தொற்றுடைய நபரிடமிருந்து மூக்கு வழி வெளியேறும் அசுத்தமான தொற்று நீர்துளிகளை காற்றின் மூலம் சுவாசிப்பது மூலமாக வைரஸ் காய்ச்சல் ஏற்படுவதுதான் வைரஸ் நோய்கள் பரவுவதற்கான முக்கிய காரணி. கொசுக்கள் போன்ற பூச்சிகளும் டெங்கு போன்ற வைரஸ் பரவுவதற்கான காரணிகளாக உள்ளன.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
மருத்துவர் அதிகரித்த உடல் வெப்பநிலை மற்றும் வைரஸ் காய்ச்சலின் மற்ற அறிகுறிகளை கண்டறிய உடல் பரிசோதனைகள் செய்வார். பிறகு, வைரஸ் ஆன்டிபாடிகள் (பல்வேறு வைரஸ் தொற்றுக்களுக்கு காரணமான ஆன்டிபாடிகள்) இருப்பதை உறுதிசெய்ய இரத்த பரிசோதனை செய்து காய்ச்சலின் சரியான காரணம் கண்டறிவார். அல்ட்ராசவுண்ட் மற்றும் மார்பு எக்ஸ்-ரே போன்ற இமேஜிங் சோதனைகளுடன் கூடிய மற்ற குறிப்பிட்ட சோதனைகளும் வைரஸை கண்டறிய உதவலாம்.
வைரஸ் காய்ச்சலின் காரணத்தை பொறுத்து அதற்கான சரியான சிகிச்சை மாறுபடும். மருத்துவர் பின்வரும் பொது சிகிச்சைகள் பரிந்துரைக்கலாம்:
- வலியை குறைக்க வலி நிவாரணி.
- காய்ச்சலை குறைக்க காய்ச்சல் போக்கும் மருந்து.
- வைரஸ் தொற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க வைரஸ் எதிர்ப்பு மருந்துகள்.
பின்வரும் வாழ்க்கைமுறை மேலாண்மை நடவடிக்கைகளை வைரஸ் காய்ச்சலைத் தடுக்கவும் சிகிச்சையளிக்கவும் உதவும்:
- மன அழுத்தத்தை குறைத்தல்.
- ஆரோக்கியமான மற்றும் சீரான உணவு உட்கொள்ளுதல்.
- முறையான உடற்பயிற்சி செய்தல்.
- போதுமான ஓய்வெடுத்தல்.
- நிறைய நீர் பருகுதல்.