சுருக்கம்
யோனி ஈஸ்ட் தொற்று, பெரும்பாலான பெண்களை, அவர்களின் வாழ்நாளில் எப்போதாவது ஒரு நேரமாவது பாதிக்கிற, ஒரு நோய் தொற்று ஆகும். கெட்டியான வெள்ளைப்படுதல் மற்றும் எரிச்சலுடன் கூடிய யோனி, மற்றும் யோனித்துவாரத்தில் எரிச்சல் உணர்வு மற்றும் அரிப்பு ஆகியவை, ஒரு யோனி ஈஸ்ட் தொற்றுள்ள பெண்களிடம் காணப்படுகிறது. யோனி ஈஸ்ட் தொற்று என்பது, யோனியில் ஏற்படுகிற, ஈஸ்ட் எனப்படும் ஒரு வகை பூஞ்சையின் அதீத வளர்ச்சியாகும். இது பூஞ்சைத் தொற்று எனவும் அறியப்படுகிறது. இது ஒரு பால்வினை நோய் தொற்று இல்லை, ஆனால், பாலுறுப்புத் தொடுகை மூலம் வாய் வழியாக, ஒரு பெண்ணால் பூஞ்சையைப் பரப்ப முடியும்.
யோனி ஈஸ்ட் தொற்றுக்கான சிகிச்சை, நோய் தொற்றின் கடுமையின் பரவலைப் பொறுத்து இருக்கிறது. ஒரு சிக்கலான நோய் தொற்று நீண்ட நாள் நீடித்திருப்பதோடு, அதனால் நீண்ட-கால சிகிச்சை தேவைப்படுகிற அதே வேளையில், ஒரு சிக்கலில்லாத நோய் தொற்று மிதமான மற்றும் நடுத்தரமான அறிகுறிகளைக் கொண்டிருக்கும். பெண்கள், இந்த வகை நோய் தொற்றுகளுக்கு சுய-சிகிச்சையளிக்க, மருந்துக்கடையில் வாங்கும் மருந்துகளை விரும்பித் தேர்ந்தெடுக்கிறார்கள். பாலியல் நடவடிக்கைகளில் அதிகம் ஈடுபடுவது, கட்டுப்பாடற்ற நிரிழிவைக் கொண்டிருப்பது மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளைப் பயன்படுத்துவது ஆகியவை, ஒரு யோனி ஈஸ்ட் தொற்றை ஏற்படுத்தும் அபாயத்தை அதிகரிக்கும் காரணிகளில் சில ஆகும். அசௌகரியம், யோனி ஈஸ்ட் தொற்றுகளோடு, இணைந்திருக்கும் அடிக்கடியான பெரிய சிக்கலாகும். பெரும்பாலான பெண்களுக்கு, முறையான சிகிச்சையினால், நோய் தொற்றின் அறிகுறிகள் மறைகின்றன.