உர்டிகாரியா பிக்மெண்டோசா (ஊதா நிற தோல் தடிப்பு) என்றால் என்ன?

உர்டிகாரியா பிக்மெண்டோசா என்பது தோலில் ஏற்படக்கூடிய கோளாறாகும், இந்நிலை கடுமையான அரிப்பு மற்றும் தோலில் ஏற்படும் டார்க் பேட்ச்களை கொண்டு வகைப்படுத்தப்படுகின்றது. தோல், தேய்க்கப்படும் போது, படை நோயை வளரச்செய்யும் இயல்பை கொண்டது, இது சிகப்பு கட்டிகளாக எழுச்சியடையக் கூடியது இது குழந்தைகளில் பொதுவாக காணப்படுவது போல, ​​பெரியவர்களிடத்திலும் காணப்படலாம்.

இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?

இந்நிலைக்கான அறிகுறிகள் ஒருவருக்கொருவர் வேறுபடக்கூடியது என்றாலும், தோலில் ஏற்படும் பழுப்பு நிற பேட்ச்சே இதன் முக்கிய அறிகுறியாகக் கருதப்படுகிறது.இதன் உயர்நிலையில் ஹிஸ்டமின் ஏற்படுவதால், உடலில் இருக்கும் தூண்டுதல் காரணிகள் பேட்ச்களை சிவப்பு தடிப்புகளாகவோ அல்லது கட்டிகளாகவோ மாற்றுகிறது (டார்யர் அடையாளம்). குழந்தைகளிடத்தில் தோலில் ஏற்பட்ட அரிப்பிற்கு பிறகு திரவம்-நிறைந்த கொப்புளங்கள் காணப்படுகிறது. மேலும் முகத்தில் ஏற்பட்டிருக்கும் சிவப்புத்தன்மை விரைவாக முன்னேற்றமடைவதை காணலாம்.

கடுமையான வழக்குகளில் ஏற்படும் அறிகுறிகள் பின்வருமாறு

இதன் முக்கிய காரணங்கள் யாவை?

உர்டிகாரியா பிக்மெண்டோசாவை ஏற்படுத்தும் முக்கிய காரணி சருமத்தில் இருக்கும் மிகுதியான அழற்சி உடைய அணுக்கள் ஆகும்(மாஸ்ட் செல்கள் - உங்கள் உடலை பாதிக்கும் தொற்றுகளுடன் சண்டையிட நோயெதிர்ப்பு மண்டலத்தில் இருக்கும் செல்கள் ஹிஸ்டமினை உருவாக்கி வெளியிடுகிறது). ஹிஸ்டமினின் பாதிப்பால் திசுக்களில் வீக்கம் மற்றும் அழற்சி ஏற்படுகிறது. ஹிஸ்டமின் பின்வரும் காரணிகளால் தூண்டப்படலாம்:

  • உடற்பயிற்சி.
  • சூரியன் அல்லது குளிர் கால நிலையின் வெளிப்பாடு.
  • அதிக காரமான உணவு அல்லது சூடான திரவங்கள் அல்லது மது போன்றவற்றை உட்கொள்வதனாலும் இந்நிலை ஏற்படலாம்.
  • தோலை தேய்த்தல்.
  • நோய்த்தொற்றுகள்.
  • இந்நிலை ஏற்படுத்தும் மருந்துகளுள் அடங்குபவை அல்லாத ஸ்டெராய்டல் எதிர்ப்பு அழற்சி மருந்துகள் (ஆஸ்பிரின்), மயக்க மருந்துகள், ஆல்கஹால்.

இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?

மருத்துவர் சருமத்தில் முழுமையான பரிசோதனையை மேற்கொள்வதோடு, டார்யரின் அறிகுறி இருக்கின்றதா என்றும் பரிசோதிப்பார். இந்த பரிசோதனை பின்வரும் சோதனைகளின் மூலம் செய்யப்படும்:

  • இரத்த பரிசோதனைகள்.
  • முழுமையான இரத்த  எண்ணிக்கைகள்.
  • இரத்த டிரிப்டேஸ் அளவுகள் (மாஸ்ட் செல்களில் இடம் பெற்றிருக்கும் என்ஸைம்கள்).
  • சிறுநீர் ஹிஸ்டமின்.
  • மாஸ்ட் செல்கள் எண்ணிக்கையை சரிபார்க்க தோல் திசுப்பரிசோதனை.

சிறுநீர்ப்பை பிக்மெண்டோசா பராமரிப்பிற்கு பின்வரும் சிகிச்சை முறையை பயன்படுத்தலாம்:

  • அரிப்பு மற்றும் சிவந்துபோதல் தன்மையிலிருந்து நிவாரணம் பெற மருத்துவரின் பரிந்துரைப்படி ஆன்டிஹிஸ்டமினிக் மருந்துகளை பயன்படுத்தலாம்.
  • தோல் மீது கார்டிகோஸ்டீராய்டுகளுக்கான மேற்பூச்சின் பயன்பாடு.
  • மாஸ்ட் செல்களை உறுதிப்படுத்துவதற்காக வாய்வழியாக டிஸ்சோடியும் க்ரோமோக்ளைக்கேட் நிர்வகித்தல், இது இறுதியில் ஹிஸ்டமின் வெளியீட்டை குறைக்கவும் உதவுகிறது.
  • லைட் அல்லது லேசர் தெரபி.

Medicines listed below are available for உர்டிகாரியா பிக்மெண்டோசா (ஊதாநிற தோல் தடிப்பு). Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.

OTC Medicine NamePack SizePrice (Rs.)
Fm 24 Tablet10 Tablet in 1 Strip194.03
Cetcip Tablet (10)10 Tablet in 1 Strip17.58
Cetgel Capsule10 Capsule in 1 Strip26.46
Unjha Raktashodhak Tonic 450ml450 ml Liquid in 1 Bottle240.0
Cheston Cold Tablet10 Tablet in 1 Strip44.41
Alerid Tablet10 Tablet in 1 Strip19.47
Okacet Tablet10 Tablet in 1 Strip19.95
Baidyanath Vyadhiharan Rasayana2.5 gm Ras Rasayan in 1 Bottle139.4
SBL Astacus fluviatilis Dilution 6 CH30 ml Dilution in 1 Bottle86.1
Schwabe Astacus fluviatilis Dilution 30 CH30 ml Dilution in 1 Bottle72.25
Read more...
Read on app