சிறுநீர்க்குழாய் நோய்க்குறி(யூரித்ரல் சிண்ட்ரோம்) என்றால் என்ன?
உடலில் இருந்து சிறுநீரை வெளியேற்றுவதற்கு உதவுக்கூடிய குழாயே யூரித்ரா எனப்படுகிறது .நோய்த்தொற்று இன்றி யூரித்ராவில் ஏற்படக்கூடிய அழற்சி அல்லது எரிச்சலே யூரித்ரல் சிண்ட்ரோம் எனப்படுகிறது. இது சிம்ப்டோமெட்டிக் அபாக்டீரியுரியா எனவும் அழைக்கப்படுகிறது. இது எந்த நோய்த்தொற்றுடனும் தொடர்புடையது அல்ல. அனைத்து வயதிற்குட்பட்டோரும் இந்த நோயியல் நிலையினால் எளிதில் பாதிக்கப்படக்கூடும், ஆனால் இது பெரும்பாலும் பெண்களிடத்திலேயே ஏற்படுகின்றது.
இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?
இதன் அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் யுரேத்ரிடிஸின் அறிகுறிகளை மிகவும் ஒத்ததாக இருக்கக்கூடும். இந்த இரண்டு நோய்களும் யூரித்ராவில் எரிச்சலை ஏற்படுத்தக்கூடியது. யுரேத்ரிடிஸ் என்பது பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றின் காரணமாக ஏற்படக்கூடியது ஆனால் சிறுநீர்க்குழாய் நோய்க்குறிக்கான காரணம் மிக தெளிவாக புலப்படவில்லை. சில பொதுவான அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் பின்வருமாறு:
- சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் வலி.
- அடிக்கடி சிறுநீர் கழித்தல்.
- அடிவயிற்றில் ஏற்படும் வலி.
- சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல்.
- சிறுநீர் கழிப்பதற்கு ஏற்படும் அவசரம்.
- க்ரோயினில் ஏற்படும் வீக்கம்.
- உடலுறவின் போது ஏற்படும் வலி.
குறிப்பாக ஆண்களிடத்தில் ஏற்படும் சில அறிகுறிகள் பின்வருமாறு:
- வீங்கிய விந்தகம்.
- விந்துடன் வெளிப்படும் இரத்தம்.
- ஆண்குறியில் ஏற்படும் வெளியேற்றம்.
- விந்து வெளிப்படுதலின் போது ஏற்படும் வலி.
இதன் முக்கிய காரணங்கள் யாவை?
இந்நிலைக்கான தெளிவான சான்றுகள் இல்லாததால் இதன் உண்மையான காரணங்கள் இன்னும் சரியாக புலப்படவில்லை. ஆனால் சில சாத்தியமான காரணங்கள் பின்வருமாறு:
- யூரித்ரல் காயம்.
- கீமோதெரபி.
- ரேடியேஷன்.
- காஃபின்.
- வாசனை திரவியங்கள், சோப்புகள், சானிட்டரி நாப்கின்கள் போன்ற வாசனை பொருட்கள்.
- ஸ்பெர்மிசிடல் ஜெல்லீஸ்.
- பாலியல் செயல்பாடு.
- பைக் சவாரி.
- உதரவிதானம் மற்றும் டேம்பன் பயன்படுத்துதல்.
- வைரல் அல்லது பாக்டீரியல் தொற்று.
இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?
இடுப்பு பகுதியில் ஏற்படும் சாத்தியமான அறிகுறிகளை பரிசோதிக்க மருத்துவர் உடல் பரிசோதனையை மேற்கொள்வார். நோயாளியின் மருத்துவ வரலாறுகள் சேகரிக்கப்படுகிறது. மேற்கொள்ளப்படும் சில சோதனைகள் பின்வருமாறு:
- சிறுநீர் மாதிரி பரிசோதனைகள் மற்றும் யூரித்ரல் ஸ்வாப் சோதனைகள்.
- இடுப்பு பகுதிக்கான அல்ட்ராசவுண்ட்.
- யுரேத்ராவினுள் மெலிதான குழாயுடன் கேமெராவை செருகுவதன் மூலம் எடுக்கப்படும் யூரிட்ரோஸ்கோபி.
- பாலியல் தொடர்பு மூலம் பரிமாற்றமாகும் நோய்களுக்கான சோதனைகள் (எஸ் டி டி கள்).
இந்நிலையை கண்டறிந்த பின், நோயாளிக்கு பல்வேறு முறைகளில் சிகிச்சை அளிக்கப்படுகின்றன:
- அறுவைசிகிச்சை - யூரித்ராவின் குழாயில் ஒடுங்கிய நிலை ஏற்படும் போது அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. மேலும் சிறுநீர் குழாயில் இருக்கும் தடையை நீக்கவும் உதவுகிறது.
- வாசனையுள்ள சோப்புகள், நீண்ட பைக் சவாரி போன்றவைகளை தவிர்ப்பது போன்ற சில வாழ்க்கை முறை மாற்றங்கள் அவசியம்.
- அல்லாத ஸ்டீராய்டல் எதிர்ப்பு அழற்சி மருந்துகள் போன்ற முறையான மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றது.
- உடல் நிலையின் விரைவான முன்னேற்றத்திற்கும் இந்நிலை மீண்டும் ஏற்படுவதை தடுப்பதற்கும் முக்கியத்துவம் வாய்ந்தது தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் சுகாதார பராமரிப்பு ஆகும்.