கீழிறங்காத விதைப்பை என்றால் என்ன?

ஒரு ஆண்குழந்தை பிறந்து ஆறு மாத காலம் ஆகியும் விதைகள், விதைப்பையை அடையாமல் இருக்கும் நிலை, கீழிறங்காத விதைப்பை என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலைப்பாடு கிரிப்டோற்சிடிசம் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஒன்று அல்லது இரண்டு விதைகளும் பிறக்கும் போதே இல்லாமல் இருக்கும். இந்த கீழிறங்காத விதைப்பை பிரச்சனை இளம் வயது சிறுவர்களிடம் பொதுவாக காணப்படுகிறது. ஒரு வயது சிறுவர்களில் 1 சதவிகிதம் பேர் மற்றும் குறைபிரசவத்தில் பிறந்த சிறுவர்களில் சுமார் 30 சதவிகிதம் பேர், குறைந்தபட்சம் ஒரு கீழிறங்காத விந்தகத்தை கொண்டுள்ளனர்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள விதைப்பையின் சிறிய அல்லது வளர்ச்சியடையாத தோற்றம் மட்டுமே ஒரு சிறுவனுக்கு இந்த கீழிறங்காத விதைப்பை இருப்பதற்கான ஒரே அறிகுறியாகும். சில நேரங்களில் விந்தக பையில் விரைகள் இல்லாதது உணரப்படுதல், வெற்று விந்தகப்பை என்று கூறப்படுகிறது. சில சிறுவர்களில்,இந்த கீழிறங்காத விதைப்பை திருகுவதால் இது வயிறு-தொடை இணைவிடத்தில் தீவிர வலியை ஏற்படுத்துகிறது.

நோய்தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

கீழிறங்காத விதைப்பை பிரச்சனை ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் பின்வருமாறு:

  • குறைமாதப் பிரசவம்.
  • பின் இழுக்கும் விரைகள் (விதைப்பை மற்றும் வயிறு-தொடை இணைவிடத்திற்கு இடையே விதை முன்னும் பின்னும் அசையும்).
  • அசாதாரண விரைகள்.
  • கருப்பையில் இருக்கும்போது, குழந்தையின் வளர்ச்சியில் ஏற்படும் பிரச்சனைகள்.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

மருத்துவர் விதைப்பையை பரிசோதனை செய்து, விதைப்பையில் ஒன்று அல்லது இரண்டு விதைகளும் இல்லை என்பதை உறுதி செய்வார். உடல் பரிசோதனையின் மூலம் இதனை கண்டறிவது சிரமாக இருந்தால், இமேஜிங் சோதனைகளான, சி.டி ஸ்கேன் அல்லது அல்ட்ராசவுண்ட் சோதனை போன்ற சோதனைகளை, காணாமல் போன விதையின் நிலையை அறிய மருத்துவர் பரிந்துரைக்கலாம்.

பெரும்பாலான நோயாளிகளில், இந்த கீழிறங்காத விதைப்பை, குழந்தையின் முதல் வயதின் போது விதைப்பையினுள் தானாகவே இறங்குகிறது. இந்த விதையானது இயல்பாக விதைப்பையினுள் இறங்கவில்லை எனில், பின்வரும் சிகிச்சை முறைகள் அளிக்கப்படலாம்:

  • ஹார்மோன் ஊசிகள்: டெஸ்டோஸ்டிரோன் அல்லது பீட்டா-மனித கருக்கோளகப் பாலினச் சுரப்பூக்கி (பி -எச்.சி.ஜி) போன்ற ஹார்மோன் ஊசிகள்
  • அறுவைசிகிச்சை: ஆர்க்கிபோக்ஸி என்பது ஒரு  அறுவைசிகிச்சை முறையாகும். இது விதைப்பைக்குள் விதையினை மீண்டும் கொண்டு வருகிறது. இந்த சோதனை மேற்கொள்வதன் மூலம்  மலட்டு தன்மை மற்றும் விரைகளில் சேதம் ஏற்படுதல் போன்ற எதிர்கால பிரச்சனைகளை தவிர்க்க முடிகிறது.
  • இந்த கீழிறங்காத விதைப்பை பிரச்சனை வாழ்க்கையின் பிற்காலத்தில் அறியப்பட்டால்,விதைப்பை அகற்றப்பட வேண்டியது அவசியமாகும். இந்த விதைகளில்  சாதாரண செயல்பாடு இல்லாத காரணத்தினாலும், மேலும் இது புற்றுநோயினை ஏற்படுத்தக்கூடிய ஆபத்து காரணிகளை கொண்டிருப்பதாலும் இந்த விதைப்பை நீக்கம் செய்யப்படுகிறது.

Dr. Anurag Kumar

Andrology
19 Years of Experience

Read more...
Read on app