டாக்ஸோகரியாஸிஸ் என்றால் என்ன?
டாக்ஸோகரியாஸிஸ் ஒரு அரிதான நோய்த்தொற்றைக் குறிக்கிறது, இது ரவுண்ட்-புழுக்கள் என்று அழைக்கப்படும் ஒட்டுண்ணிகள் காரணமாக ஏற்படுகிறது. பூனைகள் மற்றும் நாய்கள் போன்ற விலங்குகளில் இந்த ஒட்டுண்ணிகள் மிகவும் பொதுவாக காணப்படுகின்றன.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
டாக்ஸோகரியாஸிஸ் நோயின் பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:
ஒரு சில சந்தர்ப்பங்களில், ஒட்டுண்ணிகளின் கூட்டுப்புழுக்கள் கல்லீரல், நுரையீரல் அல்லது கண்களை பாதிக்கலாம். அப்போது பின்வருவனவற்றை போன்ற கடுமையான அறிகுறிகள் தோன்றலாம்:
- வலிப்புத்தாக்கங்கள்.
- பார்வை கோளாறுகள்.
- கண்ணில் வலி.
- சுவாசிப்பதில் சிரமம்.
- தோல் வடுக்கள்.
- சோர்வு.
பெரும்பாலான நபர்களில், சில மாதங்களுக்குள் ஒட்டுண்ணிகள் இறந்து போவதால் இந்த நோய்த்தொற்று எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்தாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
நாய்கள் மற்றும் பூனைகள் போன்ற விலங்குகளின் செரிமான பகுதியில் வாழும் ஒட்டுண்ணியான ரவுண்ட்-புழுக்களால் டாக்ஸோகரியாஸிஸ் ஏற்படுகிறது. இந்த ஒட்டுண்ணிகளின் முட்டை, பாதிக்கப்பட்ட மிருகங்களின் மலத்தின் மூலமாக மண்ணிற்குள் நுழைகிறது. அசுத்தமான மண், உணவு அல்லது தண்ணீர் மனித உடலில் நுழையும் போது, இந்த முட்டைகளும் நுழைந்து, தொற்றுநோய்க்கு வழிவகுக்கிறது.
குழந்தைகள் மண்ணில் மற்றும் செல்லப்பிராணிகளுடன் விளையாடுவதால் இந்த தொற்று இவர்களிடம் மிகவும் அதிகமாக இருக்கும். இந்த தொற்றுநோய் மனிதர்களால் பரவுவதில்லை.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
இந்த நோய்த்தொற்று பெரும்பாலும் உடல்ரீதியான அறிகுறிகள் மூலமும் பின்னர் இரத்த பரிசோதனைகளின் உதவியுடனும் கண்டறியப்படுகிறது.
நோய்த்தொற்று சங்கடமான அறிகுறிகளை உருவாக்கும் போது மட்டுமே, சிகிச்சை தேவைப்படுகிறது.
உடலில் ஒட்டுண்ணி லார்வாவைக் கொல்வதற்கான மருந்துகளே டாக்ஸோகரியாஸிஸ் நோயின் பொதுவான சிகிச்சையாக உள்ளது. இந்த மருந்துகளோடு, கடுமையான தொற்றின் காரணமாக ஏற்படும் வீக்கத்தை குறைக்க ஸ்டீராய்டு மருந்துகள் வழங்கப்படலாம். ஒட்டுண்ணியை அகற்றுவதற்கான பொதுவான மருந்து அல்பெண்டசோல் ஆகும்.
இந்த தொற்றைத் தடுக்க செல்லப்பிராணிகள தொட்டபின் அல்லது மண்ணில் வேலை செய்த பிறகு கைகளை சூடான தண்ணீர் மற்றும் சோப்பு ஆகியவையில் சுத்தம் செய்ய வேண்டும். அடிக்கடி வாயில் கைகளை வைப்பதை குழந்தைகள் தவிர்க்க வேண்டும்.