கழுத்துச் சுளுக்கு வாதம் என்றால் என்ன?

கழுத்துச் சுளுக்கு வாத நோய் என்பது தலையை திருப்பவோ அல்லது தொடர்ந்து ஒரு பக்கமாக சுற்றவோ, கழுத்து தசைகள் சுருங்கும் ஒரு நிலை ஆகும். அறிகுறிகள் திடீரென தோன்றும்போது, அது கடுமையான கழுத்துச் சுளுக்கு வாத நோய் (டார்டிகோலிஸ்) என்று அழைக்கப்படுகிறது.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

கழுத்துச் சுளுக்கு வாத நோயின் அறிகுறிகள் பின்வருமாறு:

  • கழுத்தில் இருக்கம் ஏற்படுதல்.
  • கழுத்தை மற்றொரு பக்கத்திற்கு சுழற்ற இயலாமை.
  • பாதிக்கப்படாத பக்கத்திற்கு தலையை திருப்ப.
  • தலை நடுக்கம்.
  • முயற்சிக்கும் போது தீவிரமான அல்லது கூர்மையான வலி ஏற்படுதல்.
  • கழுத்து தசைகளில் வீக்கம்.
  • தலைவலி.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

பின்வருவன கழுத்துச் சுளுக்கு வாத நோய் ஏற்படுவதற்கான காரணங்களாக இருக்கலாம்:

  • தவறான தோற்றப்பாங்கில் தூங்குவது.
  • ஒரு தோள் மீது கனமான எடையைக் கொண்டு செல்லும் போது.
  • கழுத்து தசைகள் வெளிப்படையாக குளிர்விக்கப்படுவது.

பின்வருவன நாள்பட்ட கழுத்துச் சுளுக்கு வாத நோய் ஏற்படுவதற்கான காரணமாக இருக்கலாம்:

  • மரபணு நிலைமைகள்.
  • முதுகெலும்பு அல்லது நரம்பு மண்டலத்தில் உள்ள சிக்கல்கள்.
  • கழுத்து காயம்.
  • கழுத்து தசைகளில் இரத்த ஓட்டத்தில் பிரச்சினைகள்.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?

கழுத்துச் சுளுக்கு வாத நோயைக் கண்டறிவதற்கு மருத்துவர் பொதுவாக ஒரு உடல் பரிசோதனையை நடத்துகிறார். மருத்துவர் தலையை சுழற்றும்படி, முன்னோக்கி அல்லது பின்னோக்கி சாய்ந்து, கழுத்தை நீட்டச்சொல்லி கேட்கலாம்.

மருத்துவர் பின்வரும் சோதனைகளை நடத்தலாம்:

  • எக்ஸ்-கதிர்கள் சோதனை.
  • சி.டி ஸ்கேன்.
  • இரத்த பரிசோதனைகள் (அறிகுறிகளை ஏற்படுத்தும் பிற நோய்களை கண்டறிய செய்யப்படுகிறது).

பிறந்ததிலிருந்து கழுத்துச் சுளுக்கு வாத நோய் இருப்பின், டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் குறுகிய கழுத்து தசையை நீளமாகவும் மற்றும் ஒழுங்காக நிலைநிறுத்தவும் செய்யலாம்.

கடுமையான கழுத்துச் சுளுக்கு வாத நோய்க்கு பின்வரும் சிகிச்சைகள் அளிக்கப்படலாம்:

  • வெப்பத்தை பயன்படுத்துதல்.
  • நீட்சி பயிற்சிகள்.
  • கழுத்தை ஆதரிக்க கழுத்து பிரேஸ் பயன்படுத்துதல்.
  • வலி நிவாரண மருந்துகளைப் பயன்படுத்துதல்.
  • அறுவை சிகிச்சை (முதுகுவலியின் போது).

கடுமையான கழுத்துச் சுளுக்கு வாத நோயின் அறிகுறிகள் ஏற்பட்டால், சிறிய அளவில் வீட்டில் சிகிச்சை அளிப்பது மற்றும் வலி நிவாரண மருந்துகள் அளிப்பதன் மூலம் அறிகுறிகள் மறைந்துவிடும். எனினும், வலி மோசமாகிவிட்டால், உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும்.

எதிர்காலத்தில் வரக்குடிய வலியை தடுக்க, நீட்டிப்பு  பயிற்சிகளை தொடர்வது மற்றும் நல்ல தோற்ற பாங்கை கடை பிடிப்பது போன்ற தடுப்பு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படலாம்.

Medicines listed below are available for கழுத்துச் சுளுக்கு வாதம். Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.

OTC Medicine NamePack SizePrice (Rs.)
Sri Sri Tattva Narayana Taila100 ml Oil in 1 Bottle130.5
Read more...
Read on app