உள்நாக்கு அழற்சி (டான்சில் அழற்சி) என்றால் என்ன?
தொண்டை சதையில் (தொண்டையின் பின்புறத்தின் இரு பக்கத்திலும் உள்ள சுரப்பிகள்) ஏற்படும் நோய்த்தொற்று, உள்நாக்கு அழற்சி என்று குறிப்பிடப்படுகிறது. இந்த தொண்டை சதை, நிணநீர் மண்டலத்தின் ஒரு பகுதியாகும், இது நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைக் நிர்வகிப்பதற்கான பொறுப்பினை வகிக்கிறது. நிணநீர் சுரப்பிகளில் ஏற்படும் வீக்கம் இந்த உள்நாக்கு அழற்சியின் அறிகுறிகளுக்கு வழிவகுக்கிறது. இந்த தொற்றுநோயினால் ஏற்படும் பாதிப்பு குழந்தைகளில் பொதுவாக காணப்படுகிறது ஆனால் இது பெரியவர்களையும் பாதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
உள்நாக்கு அழற்சியினால் ஏற்படும் அறிகுறிகள் பின்வருமாறு:
- தொண்டை புண்.
- கழுத்து வலி.
- உணவை விழுங்கும் போது வலி.
- காய்ச்சல்.
- தொண்டைச்சதையில் வீக்கம்.
- கெட்ட சுவாசம்.
- தொண்டைச்சதை மீதி மஞ்சள் அல்லது வெள்ளை பூச்சு.
- தலைவலி.
இந்த உள்நாக்கு அழற்சியினால் ஏற்படும் அறிகுறிகள் பெரும்பாலும் வலி மிகுந்ததாக இருக்கும் மற்றும் அதிக அசௌகரியத்திற்கு வழிவகுக்கலாம். இளம் குழந்தைகள் குமட்டல் மற்றும் வயிற்று வலி போன்ற பிற அறிகுறிகளை எதிர்கொள்ளலாம்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
உள்நாக்கு அழற்சி என்பது சளியை தொடர்ந்து ஏற்படும் ஒரு வைரல் மற்றும் பாக்டீரியல் தொற்று ஆகும். எனவே, மூக்கு ஒழுகுதல், இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற சளிக்கு தோன்றும் பொதுவான அறிகுறிகள் மோசமடைந்தால் அது மெதுவாக உள்நாக்கு அழற்சி நோய்க்கான அறிகுறிகளாக மாறுகிறது.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
உள்நாக்கு அழற்சிக்கு எதிரான நோய்த்தடுப்பு முறை சாத்தியமற்றது, எனவே, இந்நோயினை எளிதாக தடுக்க இயலாது. ஒருவரின் இந்நோயினால் அவர் வாழ்நாளில் ஒருமுறைக்கும் மேலாக பாதிக்கப்படலாம்.
அறிகுறிகளை பரிசோதனை செய்வதன் மூலம் உள்நாக்கு அழற்சி நோயைக் கண்டறியலாம் மற்றும் தொண்டையில் ஸ்வாப் செய்து ஆய்வக சோதனையில் ஆராய்வதன் மூலம் இந்த நோய் ஏற்படுவதற்கு காரணமான உயிரினத்தை அடையாளம் காண முடியும்.
பாக்டீரியா காரணமாக இந்த உள்நாக்கு அழற்சி நோய் ஏற்பட்டிருந்தால், இதற்கு ஆண்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக்கொள்வது மிகச் சிறந்த சிகிச்சை முறையாகும். வைரஸ் காரணமாக ஏற்பட்டிருந்தால், இந்நோயினை ஏற்படுத்தும் காரணிகளை அகற்ற மருந்துகள் உதவாது. இந்நோயினால் ஏற்படும் அறிகுறிகளை குறைக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் பின்வருமாறு:
- காய்ச்சலைக் குறைப்பதற்காக பராசெட்டமால்.
- அதிக ஓய்வு எடுத்து கொள்ளுதல்.
- போதுமான திரவங்களை உட்கொள்வது.
- மென்மையான உணவுகளை சாப்பிடுதல்.
- உப்பு நீரில் வாய் கொப்பளித்தல்.
- வலி நிவாரண மருந்துகளைப் பயன்படுத்துதல் (மருத்துவரின் ஆலோசனை பெற்ற பின்னர்).