சிரை இரத்த உறைவு என்றால் என்ன?
உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதி, அநேகமாக கால்களில், சிரை வீக்கத்தினால் ஏற்படும் குருதியுறை, சிரை இரத்த உறைவு என்னும் நிலை ஆகும். இந்த குறுதியுறையினால் அப்பகுதிக்கு இரத்த ஓட்டம் குறைந்து பிற்காலத்தில் பல பின்னல் கோளாறுகளுக்கு காரணமாகிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
குருதியுறை ஏற்பட்டு உடல் பகுதிகளுக்கு இரத்த ஓட்டம் குறைவதால், பாதிக்கப்பட்ட பகுதியில் வீக்கம் உருவாகிறது. சிரை இரத்த உறைவின் மற்ற அறிகுறிகள் பின்வருமாறு:
- வீக்கத்தைச் சுற்றி வலி.
- பாதிக்கப்பட்ட பகுதியில் மட்டும் வெப்பம் அதிகரிக்கிறது.
- வீங்கிய இடம் மென்மையாகவும் சிவந்தும் காணப்படுகிறது.
- தோல் வறண்டு இருக்கும் மற்றும் அப்பகுதிக்கு குறைந்த அளவில் சிரைக்குருதி செல்வதால் சிரங்கு ஏற்படலாம்.
நோய் தாக்குதலுக்கான முக்கியக் காரணங்கள் என்ன?
குருதியுறை உண்டாக பல காரணங்கள் உள்ளன. நீண்ட நேரம் படுக்கை ஓய்வில் இருந்தாலோ அல்லது ஒரே நிலையில் நீண்ட நேரம் அமர்ந்திருந்தாலோ குருதியுறை உண்டாகலாம். இந்நிலையை உண்டாக்கும் மற்ற காரணிகள் பின்வருமாறு:
- செயற்கை இதய மின்னியக்கி வைத்திருத்தல்.
- புற்றுநோய்.
- உடல் பருமன்.
- கருத்தரித்தல்.
- கருத்தடை மாத்திரைகளை உட்கொள்ளுதல்.
- இடுப்பு, இடுப்புக்கூடு அல்லது கால்களில் முறிவு அல்லது அறுவைச் சிகிச்சை.
- புடைசிரைகள் (திருகிய அல்லது புடைத்த நாளங்கள்).
- சிரை இரத்த உறைவின் குடும்ப வரலாறு.
இது எவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது?
விரிவான வரலாறு மற்றும் உடல் பரிசோதனை மூலம் சிரை இரத்த உறைவு நோயை எளிதாகக் கண்டறியலாம், எனினும் குருதியுறை இருப்பதை உறுதி செய்ய மருத்துவர் கேளாஒளி/அல்ட்ராசவுண்ட், சி.டி ஸ்கேன் அல்லது எம்.ஆர்.ஐ ஸ்கேன் ஆகியவற்றை பரிந்துரைக்கலாம். குருதியுறைவின் இடத்தையும், பரப்பையும் துல்லியமாக கண்டறிய டாப்ளர் முறையை பரிந்துரைப்பார்.
இந்நிலை மேம்போக்கானதாக இருக்கும் நிலையில், மருத்துவர்கள் மருந்துகள் மற்றும் சுலபமான நிவாரண வழிகளை பரிந்துரைப்பார். அவற்றில் பின்வருவன அடங்கும்:
- அழற்சி எதிர்ப்பு மருந்துகள்.
- ஆதரவான அரைக்காலுறைகளை அணிதல்.
- பாதிக்கப்பட்ட இடத்தின் மேல் வெப்பம் பயன்படுத்துதல்.
- பாதிக்கப்பட்ட பாகத்துக்கு ஓய்வு கொடுத்தல். கால் பாதிக்கப்பட்டிருந்தால் அதனை நீட்டியும் உயர் இடத்திலும் வைத்திருக்க வேண்டும்.
எனினும் உயர்நிலை மற்றும் ஆழமான சிறை இரத்த உறைவு நோய் இருப்பின், குருதி மெலிவூட்டியைப் பரிந்துரைப்பார் மற்றும், மீண்டும் இரத்த ஓட்டத்தை கொண்டுவர பாதிக்கப்பட்ட சிரைப்பகுதியை அறுவைச் சிகிச்சை மூலம் நீக்குவர்.