சுருக்கம்
கண்களைச் சுற்றியுள்ள திசுக்களில் திரவம் திரண்ட வரும்போது கண்கள் அல்லது கண் இமைகளில் வீக்கம் அடைகின்றது. குறிப்பாக வீக்கமானது உங்களது கண்ணிமைகளின் கீழே அல்லது மேலே உள்ள பகுதிகளில் ஒரு விதமான அசௌகரியத்தை ஏற்படுத்தும். இது பொதுவாக 24 மணி நேரத்திற்குள் தானகவே மறைந்துவிடும். கண்களை சுற்றி வீக்கம் இருக்கும் போது, கண் இமைகள் மற்றும் கண்களை சுற்றியுள்ள திசுக்களில் பாதிப்பு ஏற்படும். வீக்கம் உள்ள கண்களுடன் தொடர்புடைய, சில நிலைகள், கருப்பு கண்,வெண்படல ம், கண் ஒவ்வாமைகள், கண்களில் புரையோடுதல் மற்றும் கருவிழி புண் ஆகியவை ஆகும். காயம் அல்லது தொற்று போன்ற காரணம் இல்லை என்றால், வீங்கிய கண்களை தண்ணீரில் கழுவிய பிறகு அது மறைந்துவிடும் அல்லது ஒரு நனைத்த குளிர்ந்த துணியை கண் மீது பயன்படுத்தலாம். ஒவ்வாமை காரணமாக கண்களில் வீக்கம் ஏற்பட்டால் உங்களது கான்டாக்ட் லென்ஸ்களை அகற்றவும் மற்றும் ஒவ்வாமை எதிர்ப்பு சொட்டு மருந்துகளைப் பயன்படுத்தலாம். கண் வீக்கமானது 24 முதல் 48 மணி நேரம் வரை நீடித்து இருந்து அதனுடன் கண் (கள்) வலி, தெளிவற்ற மற்றும் குறைந்த பார்வை உள்ளிட்ட அறிகுறிகள் தொடர்ந்தால், உடனடியாக உங்கள் கண் மருத்துவரை சந்திக்க வேண்டும்.