சுருக்கம்
கால்களில் வீக்கம் என்பது எடிமா என்று அழைக்கப்படும், கால்களில் அதிகப்படியான திரவத்தின் சேகரிப்பால்(நீர் கோர்த்துக் கொள்ளுதல்) இது ஏற்படுகிறது. குறிப்பாக வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு வலி இல்லாத கால் மற்றும் கணுக்கால்களில் ஏற்படும் வீக்கம் ஒரு பொதுவான பிரச்சினையாகும், வீக்கம் ஒரு ஆபத்தான நோய் அல்ல, ஆனால் அது வேறு ஒரு அடிப்படை நோய்க்கான ஒரு முக்கிய அறிகுறியாக இருக்க முடியும். இந்த வீக்கத்தை ஏற்படுத்தும் நோயை பொறுத்து மற்ற தொடர்புடைய அறிகுறிகளும் இருக்கக்கூடும். இந்த வீக்கத்தை ஏற்படுத்தும் தொடர்புடைய நோயை முழுமையான இரத்தம், கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாட்டுச் சோதனை, மற்றும் இமேஜிங் ஆய்வுகள் போன்ற ஆய்வக ஆராய்ச்சிகளின் உதவியுடன் கண்டறியலாம். வீக்கத்திற்கான சிகிச்சையில் உடற்பயிற்சி, எடை குறைப்பு, வீக்கத்தை உண்டாக்கும் அடிப்படை நோய்க்கான மருந்துகள், உணவு மாற்றங்கள், போன்றவை அடங்கும்.