வேனிற்கட்டி என்றால் என்ன?
சூரியனின் புறஊதா கதிர்களின் (UV) கதிர்வீச்சு அதிகமாக வெளிப்படும்போது, தோல் மேற்பரப்பில் சிவத்தல் மற்றும் வீக்கம் ஏற்படலாம். இது வேனிற்கட்டி நிலைக்கு வழிவகுக்கிறது. நீண்ட நேரம் சூரியனுக்கு கீழ் நிற்கும் நபர்களில் இது பொதுவாக காணப்படுகிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
- வேனிற்கட்டியின் முதல் அடையாளம் அரிப்பு மற்றும் சிவத்தல்.
- இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதியில் வலி, அசௌகரியம் மற்றும் எரிச்சல் ஆகியவை காணப்படும்.
- பெரும்பாலும், பாதிக்கப்பட்ட பகுதியில் கொப்புளங்கள் மற்றும் எடிமா (நீர் குவிதல் காரணமாக வீக்கம்) உருவாகலாம்.
- கொப்புளங்கள் மேலோட்டமானவை அல்லது தோலின் ஆழமான அடுக்குகளில் இருக்கலாம். அவற்றில் நீர் நிறைந்திருக்கும் மற்றும் பெரும்பாலும் வேதனையளிக்கும்.
- வேறு அறிகுறிகளில் காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை அடங்கும்.
நோய்தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
வேனிற்கட்டி முக்கியமாக புறஊதா கதிர்வீச்சுக்கு நீண்டநேரம் வெளிப்படும்போது ஏற்படுகிறது. சூரியனை தவிர, புற ஊதா (UV) கதிர்களின் மற்ற காரணங்கள் செயற்கை விளக்குகளாக இருக்கலாம்.
ஆபத்து காரணிகள் பின்வருமாறு:
- ஓசோன் அடுக்கு மெல்லிய அல்லது அருகில் இருக்கும் பகுதிகளில் வாசிக்கும் நபர்களுக்கு வேனிற்கட்டி ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது.
- நடுத்தர வயதினர்கள் மற்றும் இளம் பருவத்தினரோடு ஒப்பிடுகையில், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வேனிற்கட்டியினால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.
- வெள்ளை நிறத் தோல் உள்ளவர்களுக்கு வேனிற்கட்டி வர அதிக வாய்ப்பிருக்கிறது, ஏனெனில் அவர்களின் தோலில் மெலனின் பற்றாக்குறை காரணமாக சூரிய ஒளியின் தாக்கத்தை தாங்கும் திறன் குறைவாக உள்ளது.
- அரிதாக, மரபணுக்களின் நிலை ஒரு நபருக்கு வேனிற்கட்டி ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது. இந்த நிலை சிரோடெர்மா பிக்மென்டோசம் என்று அழைக்கப்படுகிறது.
- சல்ப்பா மருந்துகள், டிஃபென்ஹைட்ராமைன், ப்ரோமெதெசின், அமிர்ட்ரிப்ட்டிலின் போன்ற மருந்துகளால் வேனிற்கட்டி அதிகம் வர வாய்ப்பிருக்கிறது.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
- வேனிற்கட்டி என்பது மருத்துவரீதியாக கண்கூடாக பார்க்கும் நிலையில் உள்ளது, எனவே, நோயறிதல் முக்கியமாக ஒவ்வாமை, ஒளி ஒவ்வாமை நிலை மற்றும் ஒளியின் நச்சு எதிர்வினைகள் போன்ற பிற தோல் நிலைகளில் இருந்து வேறுபடுகின்றது.
- சூரியனுக்கு வெளிப்படுவதை நிறுத்திவிட்டால், பெரும்பாலான வேனிற்கட்டிகள் சில வாரங்களுக்குள் தானாகவே குணமாகும்.
- அழற்சி மற்றும் வலி நிவாரணம் செய்ய அழற்சி எதிர்ப்பு மருந்துகள் உதவுகின்றன. ஆஸ்பிரின் போன்ற மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம்.
- சிவத்தல் நிலையை குணப்படுத்த ஈரப்பதமாக்கும் கிரீம்கள், ஜெல் மற்றும் குளிர்ந்த நீரில் குளிப்பது போன்றவற்றை பரிந்துரைக்க வேண்டும்.
- வேனிற்கட்டி தோலில் இருக்கும் நிறைய நீரை ஈர்க்கும் அதனால் நோயாளி போதுமான நீரேற்றம் செய்ய வேண்டும்.