ஸ்பாஸ்மோடிக் டிஸ்போனியா (குரல்வளைக்குரிய டிஸ்போனியா) என்றால் என்ன?
லாரென்ஜியல் டிஸ்டோனியா என்றும் சொல்லப்படுகிற ஸ்பாஸ்மோடிக் டிஸ்போனியா என்பது நரம்பியல் சார்ந்த ஒரு கோளாறு ஆகும், இது குரல்வளை (குரல்வளை பெட்டி) தசைகளில் முறையில்லாத இயக்கத்தை ஏற்படுத்துகிறது. இது குரல் ஒலியை மாற்றி குரல்வளையில நெறி ஏற்பட்டது போன்ற ஒரு நிலையை தருகிறது. இந்நோயின் மூன்று வகையான நிலைகள் பின்வருமாறு:
- உள்ளிழுப்பு ஸ்பாஸ்மோடிக் டிஸ்போனியா, இந்த நிலையில் குரல் வளை நெருக்கமாகவும்,கடினமாகவும் இருப்பதால் இது ஒரு விகாரமான சத்தத்திற்கு வழிவகுக்கிறது.
- வெளிவாங்கி ஸ்பாஸ்மோடிக் டிஸ்போனியா இந்த நிலையில் குரல் வளை திறந்திருப்பதால் அது பலவீனமான மற்றும் அமைதியான சத்தத்தை ஏற்படுத்துகிறது.
- கலப்பு ஸ்பாஸ்மோடிக் டிஸ்போனியா, இந்த வகையில் குரல் வளை ஒழுங்கற்று திறந்தும் மற்றும் அடைத்தும் காணப்படுகிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
ஸ்பாஸ்மோடிக் டிஸ்போனியா என்பது யாரையும் பாதிக்கும் ஒரு அரிய வகை நோயாகும். இந்நோயினால் ஆண்களை விட பெண்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக, இந்த நோயானது லேசான அறிகுறிகளுடன் படிப்படியாக உருவாகிறது.
- உள்ளிழுப்பு ஸ்பாஸ்மோடிக் டிஸ்போனியா என்பது கழுத்தில் ஏற்படும் தசைப்பிடிப்புகள் காரணமாக மிகவும் சிரமப்பட்டும் அல்லது கழுத்தை நெரிப்பதும் போன்ற உணர்வோடு பேசும்படி இருப்பதாகும்.
- மறுபுறத்தில், இந்த உள்ளிழுப்பு ஸ்பாஸ்மோடிக் டிஸ்போனியாவின் காரணமாக குரல் பலவீனமாகவும், மூச்சதிர்வுடனும் ஒலிப்பது. அனால் சிரிக்கும் பொழுது, அழும் பொழுது அல்லது கத்தும் பொழுது, இந்த தசை பிடிப்புகள் காணப்படுவதில்லை.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
இந்த நோய் ஏற்படுவதற்கான சரியான காரணம் இன்னும் தெளிவாக இல்லை, ஆனால் அது மூளையின் அடித்தள நரம்பு செல் தொகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஏற்படும் இரசாயன மாற்றங்களின்படி நிகழ்வதாக நம்பப்படுகிறது. இது பசேல் கங்கிலியா என்று சொல்லப்படுகிற ஒரு வகை தள மூடிச்சுக்கள் மூளையில் ஆழமான உட்பகுதியில் நரம்பு செல்களின் பல தொகுதிகளை கொண்டிருக்கும். அவைகள் உடல் முழுவதும் உள்ள தசைகளின் இயக்கங்களை ஒருங்கிணைக்கின்றன. இந்த ஸ்பாஸ்மோடிக் டிஸ்போனியா மன அழுத்தம், குரல் பெட்டியில் ஏற்படும் காயம் அல்லது உடல்நிலையில் ஏற்படும் குறைபாடு காரணமாக தூண்டப்படலாம். மரபியல் காரணிகள் ஸ்பாஸ்மோடிக் டிஸ்போனியா நோய் ஏற்படுவதர்க்கான காரணத்தை ஏற்படுத்தும் அபாயத்தை அதிகரிக்கின்றன.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
இந்த ஸ்பாஸ்மோடிக் டிஸ்போனியாவின் அறிகுறிகள் மற்ற குரல் வளை கோளாறுகளின் அறிகுறிகளுடன் ஒத்ததாக இருப்பதால் இந்நோயினை கண்டறிவது மிகவும் கடினமானதாகும்.எனவே, பேச்சு நோய்க்குறியியல் நிபுணர், இ.என்.டி நிபுணர் மற்றும் ஸ்பாஸ்மோடிக் டிஸ்போனியாவின் நோய்க்குறியில் அனுபவம் வாய்ந்த நரம்பு நோய் மருத்துவ வல்லுநர் போன்ற ஒரு மருத்துவக்குழு இந்நோயினை கண்டறியும் ஒரு துல்லியமான ஆய்வுக்கு தேவைப்படுகிறது.
இ.என்.டி மருத்துவ வல்லுநர் விரிவான லாரென்ஜியல் பரிசோதனையை மேற்கொள்வார். பேச்சு நோயியல் நிபுணர் குரல் வளையின் தரத்தை மதிப்பிடுவதுடன், இந்த நிலைமையை மேலும் சிறப்பாக நிர்வகிக்க உதவுவதற்காக ஊக்குவிப்பு மற்றும் யோசனைகளை வழங்குவார். மன அழுத்தம் இந்நோயினால் ஏற்படும் அறிகுறிகளை மோசமாக்குகிறது என்பதால், மன அழுத்த மேலாண்மை அல்லது தளர்வு சிகிச்சை போன்ற சிகிச்சை முறைகள் ஏற்படும் அறிகுறிகளை சமாளிக்க உதவும்.
நரம்பியல் நோய் சார்ந்த நிபுணர் நோயாளியின் மற்ற இயக்கம் குறைபாடுகளை மதிப்பிடுகிறார் மற்றும் பொருத்தமான மருந்துகள் சிலவற்றை முயற்சி செய்ய சொல்லலாம். நோய் சார்ந்த பொட்டுலினும் போன்ற ஊசியை குரல் வளையில் செலுத்துவதால் அது இந்நோயினால் ஏற்படும் அறிகுறிகளிலிருந்து தற்காலிக நிவாரணம் அளிக்கிறது. பேச்சு சிகிச்சை முறையும் இந்நோயின் கீழ் சிகிச்சையளிக்கும் முறையின் ஒரு பகுதியாகும். இந்நோய்க்கு மேற்கொள்ளப்படும் வழக்கமான நடவடிக்கைகள் பயனற்றதாக இருக்கும்போது, அறுவைச் சிகிச்சை முறை பரிந்துரைக்கப்படலாம்.