மென்மையான திசு சதைப்புற்று என்றால் என்ன?
மென்மையான திசு சர்கோமா என்பது உடலின் உள்ள இணைப்பு திசுக்களை பாதிக்கும் ஒரு அரிதான புற்றுநோய்களின் வகையை குறிப்பதற்காக பயன்படுத்தப்படும் ஒரு சொற்பதமாகும். பாதிக்கப்பட்ட மென்மையான திசு மற்றும் இடத்தினை பொறுத்து பல வகையான மென்மையான திசு சதைப்புற்றுகள் ஏற்படுகின்றன.
உடலில் உள்ள இந்த இணைப்பு திசுக்கள் இரத்த நாளங்கள், தசைகள், கொழுப்புகள், தசைநாண்கள், தசைநார்கள், ஆழமான சரும திசுக்கள், மற்றும் நரம்புகள் போன்றவற்றை உள்ளடக்கியதாகும்.
இந்த இணைப்பு திசு புற்றுகள் (புற்றுநோய் கட்டி ) கைகள், கால்கள்,தலை மற்றும் கழுத்து பகுதியில் ஏற்படலாம்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
- இந்நோயின் அறிகுறிகள் படிப்படியாக ஏற்படுவதால், இந்நோயினால் பாதிக்கப்பட்டவர் நோயின் ஆரம்ப கட்டத்தில் எந்த வித அறிகுறியுமின்றி இருக்கலாம்.
- இந்த நோயின் விளைவாக ஏற்படும் கட்டிகள் வளர்ச்சியடையும் போது, இந்த கட்டிகள் மேல் வந்து மோதுவதால் அது வலியை ஏற்படுத்தக் கூடும்.
- இந்த பாதிப்பு நெஞ்சுப் பகுதி, நுரையீரலுக்கு அருகில் இருந்தால், இந்நோயினால் பாதிக்கப்பட்ட நபருக்கு சுவாசித்தலில் சிரமம் இருக்கும்.
- அடிவயிற்று பகுதியில் காணப்படும் மென்மையான சதைப்புற்று திசு வயிற்று வலி மற்றும் தசை பிடிப்புகளை ஏற்படுத்தலாம்.
- இரத்த வாந்தி, பசியின்மை,பலவீனம் மற்றும் காய்ச்சல் போன்றவை இந்த மென்மையான திசு சதைப்புற்று நோயின் பொதுவான அறிகுறிகளாகும்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
- இந்த இணைப்பு திசு புற்று நோய் ஏற்பட குறிப்பிட்ட காரணம் ஏதும் இல்லை.
- இவை பெரும்பாலும் மரபணு காரணமாக ஏற்படலாம் அல்லது பரம்பரையில் இந்நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவரின் காரணமாக குடும்பத்தில் மற்ற நபர்களுக்கும் ஏற்படலாம்.
- வேறு வகையான ஏதெனும் புற்று நோய்க்காக கதிர்வீச்சு சிகிச்சையில் ஈடுபட்டிருக்கும் ஒருவருக்கு இந்த கதிர் வீச்சு சிகிச்சையினால் ஏற்படும் எதிர்மறையான விளைவுகள் கூட இந்த இணைப்பு திசு புற்று நோயை உருவாக்கலாம்.
- ஆர்செனிக் மற்றும் மூலிகைப் பூச்சிக்கொல்லி போன்ற இரசாயனங்களின் வெளிப்பாடு கூட இந்த மென்மையான திசு சதைப்புற்றுகளை வளர்ப்பதற்கான ஆபத்து காரணியை அதிகரிக்கிறது.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
- இந்த இணைப்பு சதை புற்று நோயினை கண்டறியமேற்கொள்ளப்படும் பொதுவான ஆய்வுகளவான கணினி வரைவி (சி டி ), எக்ஸ் கதிர் சோதனை , காந்த அதிர்வு விம்பங்கள் (எம்.ஆர்.ஐ) மற்றும் அல்ட்ராசவுண்ட் சோதனை ஆகியவை அடங்கும்.
- திசு பரிசோதனை, இந்த முறையில் புற்றுநோய்க் கட்டியின் திசு மாதிரி பரிசோதனை செய்யப்படுவதன் மூலம் புற்று நோயின் இயல்பினை உறுதி செய்ய உதவும்.
சிகிச்சை முறை:
- இந்த புற்றுநோய்க்கட்டி சிகிச்சை முறையானது அறுவை சிகிச்சை மூலம் புற்று நோய் கட்டிகளை அகற்றுதல் போன்றவற்றை உள்ளடக்கியதாகும். இந்த அறுவை சிகிச்சையின் போது இந்த கட்டியை சுற்றி உள்ள ஆரோக்கியமான திசுக்களின் ஒரு பகுதி கூட அகற்றப்படலாம்.
- சில நேரங்களில், சர்கோமா நோய் கைகாலுறுப்புகளில் ஏற்பட்டிருந்தால் இருந்தால், உறுப்பு நீக்கத்தினால் ஏற்படும் ஆபத்தினை கடக்க இந்த அறுவை சிகிச்சை முறை தவிர்க்க பட வேண்டும்.
- அறுவை சிகிச்சையின் மூலம் கட்டி அகற்றப்படுவதற்கு முன் கட்டியின் அளவை குறைக்க ரேடியோ கதிர்வீச்சு சிகிச்சை முறை பயன்படுத்தப்படும்.
- மூட்டு பிரச்சனை, வீக்கம் போன்ற பல பக்க விளைவுகளை இந்த கதிர் வீச்சு சிகிச்சை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது.
- கீமோதெரபி மருந்துகள் நரம்பு வழி செலுத்தப்படுதல் அல்லது மாத்திரைகள் இந்த சர்க்கோமா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படலாம்.
- சார்கோமாவின் வகை, புற்று நோய் கட்டியின் அளவு,நோயாளியின் ஒட்டு மொத்த நிலையினை பொறுத்து இந்நோய்க்கான இறுதி கட்ட சிகிச்சை முறை மருத்துவரால் தீர்மானிக்கப்படும்.