புகைபிடித்தலுக்கு அடிமையாதல் என்றால் என்ன?
புகைபிடித்தலுக்கு அடிமையாதல் என்பது நீண்ட காலத்திற்கு தொடர்ந்து புகைபிடிப்பதனால் உடல் புகைபிடிப்பதை சார்ந்து இருப்பதாகும். வாழ்க்கையில் இளம் வயதின் ஆரம்பத்தில் புகைபிடிக்கும் ஒரு நபர் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாக அதிக வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சி கூறுகிறது.புகைப்பிடிப்பவர்களில் 6% மட்டுமே வெற்றிகரமாக புகைபிடிப்பதை விட்டுவிட முடிகின்றது என்று தெரிய வருகின்றது.
புகைப்பிடிப்பவர்களுக்கு புகைப்பிடிப்பது ஆரம்பத்தில் அமைதியைத் தருகிறது என்று உணர்ந்தாலும், இது இருமல், நுரையீரல் தொற்றுக்கள், புற்றுநோய் மற்றும் இறப்பு போன்ற பல உடல்நல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். எந்தவொரு பழக்கத்திற்கும் அடிமைப்பட்டிருந்தாலும், ஒரு நபர் புகைபிடிப்பதைத் நிறுத்த முயற்சிக்கும்போது பின்வரும் அறிகுறிகள் காணப்படலாம்:
- அசாதாரண சோகம்.
- கோபம் அல்லது எரிச்சலாக உணர்தல்.
- கவனம் செலுத்த இயலாமை.
- இதய துடிப்பு குறைந்து போதல்.
- பசி அதிகரித்தல் மற்றும் எடை அதிகரிப்பு.
- இன்சோம்னியா (தூக்கமின்மை).
அதன் முக்கிய காரணங்கள் என்ன?
புகை பழக்கம் பெரும்பாலும் மனம் மற்றும் உணர்ச்சித் தடுமாற்றத்துடன் தொடர்புடையது.சிலர் மன அழுத்தத்தை தடுக்க புகைப்பிடிக்க ஆரம்பிக்கலாம்; மற்றவர்கள் நண்பர்களின் வற்புறுத்தலின் காரணமாக அதை பிடிக்கலாம்.புகைப்பழக்கத்தை தொடங்கிவிட்டால், உடல் நிகோடினுக்கு அடிமையாகி, அதிக அளவில் அதை எதிர்பார்க்கின்றது, இது அதிகரித்த புகைபிடிப்பிற்கு வழிவகுக்கிறது.எனவே, ஒருவர் உடல் ரீதியாகவும் மற்றும் உணர்ச்சி ரீதியாகவும் சார்ந்து, முடிவில் அதற்கு அடிமையாகி விடுகிறார்.
இது எப்படி நோயறியப்படுகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது?
புகைபிடித்தலுக்கு அடிமையாதலுக்கு மருத்துவர் நோயாளியின் பின்னணி மற்றும் அறிகுறிகள் ஆகியவற்றை கேட்டறிந்து நோயறியப்படுகிறது.இரத்த பரிசோதனைகள் செய்யப்படலாம் மற்றும் நிகோடின் அளவுகள் அளவிடப்படலாம்.சிறுநீர், உமிழ்நீர் மற்றும் முடிகளின் மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்படலாம்.
சிகிச்சை
அடிமையாகும் பழக்கத்தை நிறுத்த பல்வேறு எப்.டி.ஏ-அங்கீகரித்த சிகிச்சைகள் கிடைக்கின்றன.மேலும் மெல்லும் கோந்துகள் அல்லது வில்லைகள் போன்ற நிகோடின் மாற்று சிகிச்சைகள் பொதுவாக சிகரெட்டுகளை சார்ந்திருப்பதை நிறுத்த மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன.
நடத்தை சிகிச்சை போன்ற சில மருந்துகள் அல்லாத சிகிச்சை முறைகளும் மருந்து சிகிச்சையுடன் புகைபிடிப்பதை தவிர்க்க உதவுகின்றன.ஒருவர் தன்னை ஒரு வேலையில் மும்முரமாக வைத்திருப்பது பழக்கத்தை முறித்துக் கொள்ளவும், புகைப்பிடிப்பதைத் தடுக்கவும் உதவலாம்.ஆலோசனை ஒருவருக்கு நல்ல முறையில் மன அழுத்தத்தை சமாளிக்க உதவுகிறது.