தூக்கக் கோளாறுகள் என்றால் என்ன?
அமைதியற்ற தூக்கத்தால் ஏற்படும் மாற்றங்கள், ஒழுங்கற்ற தூக்க சுழற்சி அல்லது தூங்க இயலாமை ஆகியவை தூக்கக் கோளாறுகளாக வகைப்படுத்தப்படுகின்றன. தூக்கக் கோளாறுகளால் பகல் நேரத்தில் தூக்கம் வரும் மற்றும் இரவு நேர தூக்கம் புத்துணர்ச்சி இல்லாமல் இருக்கும்.இவை சில நேரங்களில் தீவிர அடிப்படையான மருத்துவ நிலையை குறிக்கலாம்.
முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் என்ன?
தூக்கக் கோளாறுகள் எதனால் ஏற்படுகிறது என்ற அடிப்படை காரணத்தை பொறுத்து பரவலான அறிகுறிகளைக் கொண்டுள்ளன; இந்த கோளாறால் ஏற்படும் சில பொதுவான அறிகுறிகளாவன:
- தூங்குவதில் சிரமம்.
- அடிக்கடி எழுந்திருப்பது, பிறகு மீண்டும் தூங்குவதில் சிரமம் ஏற்படுதல்.
- பகல் நேரத்தில் சோர்வு அல்லது தூக்கம்.
- கவலை.
- கவனம் செலுத்துவதில் குறைவு.
- எரிச்சலூட்டும் தன்மை.
- மன அழுத்தம்.
முக்கிய காரணங்கள் என்ன?
தூக்கக் கோளாறுகள் பல நோய்களால் ஏற்படலாம், அவற்றில் இவைகள் அடங்கும்:
- உளவியல் நிலைகள்.
- கவலை.
- மன அழுத்தம்.
- இருமுனையப் பிறழ்வு.
- ஒவ்வாமை நிலைமைகள்.
- ரினிடிஸ்- ஒவ்வாமை அல்லது தொற்று காரணமாக மூக்கில் நீர் வடிதல்.
- அடினாய்டுகள் - கழுத்தில் நிணநீர் திசுக்களின் வீக்கம்.
- ஒவ்வாமை இருமல்.
- சர்க்கரை நோய் அல்லது புரோஸ்டேட் பிரச்சினைகள் காரணமாக நாக்டியூரியா (அதிகமாக இரவு நேர சிறுநீர் கழித்தல், அதன் காரணமாக தூக்கமின்மை).
- வலி - கீல்வாதம், ஃபைப்ரோமியால்ஜியா போன்ற நோய்களால் ஏற்படும் நாள்பட்ட நோய் அல்லது கடுமையான வலி.
- தூக்கத்தில் மூச்சுத்திணறல் (லேசாக சுவாசிப்பது அல்லது தூக்கத்தின் போது சுவாசம் இடைவெளி விட்டு நிற்பதும் பின் தொடங்குவதுமாக இருக்கும்).
தூக்கக் கோளாறுகள் எவ்வாறு கண்டறிந்து சிகிச்சையளிக்கப்படுகிறது?
வழக்கமாக, நோயாளியின் ஒரு முழுமையான மருத்துவ பின்புலம் தூக்கக் கோளாறுகளின் அடிப்படைக் காரணத்தை சுட்டிக்காட்டுகிறது.உடல் பரிசோதனை, மற்றும் சில சோதனைகளின் அடிப்படையில் உடல் நோயை துல்லியமாக கண்டறிய உதவும். அச்சோதனைகள் பின்வருமாறு:
- இரத்தச் சர்க்கர மதிப்பீடு (சிபிசி), எரித்ரோசைட் வண்டல் விகிதம் (இஎஸ்ஆர்), சி-எதிர்வினை புரதம் (சிஆர்பி), குறிப்பிட்ட-புரோஸ்டேட் ஆண்டிஜென் (பிஎஸ்ஏ) (ஆண்களில்), இரத்த சர்க்கரை மதிப்பீடு போன்ற இரத்தப் பரிசோதனைகள் அடிப்படையில் உடல் வியாதிகளை கண்டறிய பயன்படுத்தப்படுகின்றன.
- இஇஜி(எலெக்ட்ரோஎன்செபலோகிராபி) மூளையின் மின் செயல்பாட்டை மதிப்பிடுவதற்கும் மூளை சம்பந்தப்பட்ட அலைகளை மதிப்பீடு செய்வதற்கும் உதவுகிறது.
- பாலிசோம்னோகிராஃபி (தூக்க ஆய்வு) உடல் செயல்பாடு, மூளை அலைகள் மற்றும் ஆக்ஸிஜன் அளவை தூக்கத்தின் போது மதிப்பீடு செய்வதில் உதவுகிறது.
அடிப்படை நோய்க்கு சிகிச்சையளித்து அறிகுறிகளை கண்டறிந்து அதை குணப்படுத்த உதவுகிறது.தூக்கக் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதில் சில மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகள் உள்ளன. அவைகள் பின்வருமாறு:
- மருந்துகள் - தூக்க மாத்திரைகள், பதட்டத்தை குறைக்கும் மாத்திரைகள், ஒவ்வாமையை எதிர்க்கும் மருந்துகள் போன்ற சில மருந்துகள் தூக்கத்தை தூண்டும்.
- ஆலோசனை - தூக்க சீர்குலைவுகள் குறிப்பாக உளவியல் மன அழுத்தம் அல்லது உளவியல் நோய் காரணமாக இருந்தால்ஆலோசனையுடன் தரப்படும் மருந்துகளும் உதவ முடியும்.
- வாழ்க்கை முறை மாற்றங்கள் - நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வது மற்றும் சர்க்கரை உட்கொள்வதைக் குறைப்பது போன்ற சில உணவு மாற்றங்கள் உதவும். படுக்கை நேரத்திற்கு முன் தண்ணீர் உட்கொள்வதை குறைத்தல் இது இரவில் சிறுநீர் கழிப்பதை கட்டுப்படுத்த உதவும். மாலை அல்லது இரவு நேரங்களில் காஃபின் மற்றும் மது போன்ற உற்சாகத்தை தூண்டும் பானங்களை தவிர்ப்பது பயனுள்ளதாக இருக்கும்.