வலிப்பு என்றால் என்ன?
கால்-கை வலிப்பு அல்லது வலிப்பு நோய் என்றும் குறிப்பிடப்படும் வலிப்புத்தாக்கங்கள் என்பது மூளையின் திடீர், பல அசாதாரண மின் வெளியேற்றுங்கள் காரணமாக ஏற்படும் உடல்ரீதியான கண்டுபிடிப்புகள் (நரம்புச் சீர்கேடு) மற்றும் நடத்தை மாற்றங்களின் வெளிப்பாடே ஆகும்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
வலிப்புத்தாக்கங்கள் பகுதியளவு அல்லது குவியத் தொடக்க வலிப்புத்தாக்கங்கள் மற்றும் பரவிய வலிப்புத்தாக்கங்கள்) என் இரு வகைப்படும்:
இவை பின்வரும் அறிகுறிகளால் பண்பிடப்படுகின்றன: குவியத் தொடக்க வலிப்புத்தாக்கங்கள் மூளையின் ஒரு பகுதியிலிருந்து தொடங்குகிறது.இதனோடு தொடர்புடைய அறிகுறிகள் பின்வருமாறு:
- உடலின் ஏதாவது ஒரு பகுதியின் திடீர் அசைவு.
- சுயநினைவு மாற்றங்கள், இதன் விளைவாக மீண்டும் மீண்டும் ஒரே அசைவுகள் மற்றும் செயல்களைச் செய்தல்.
- சூசனை அல்லாத முன்னுணர்வை அனுபவிக்கலாம்.
- நிஜமற்ற ஒன்றை கேட்டல், நுகர்தல், சுவைத்தல்.
பரவிய வலிப்புத்தாக்கங்களுடன் தொடர்புடைய அறிகுறிகள் பின்வருமாறு:
- வலிப்புத்தாக்குதல் (அப்சென்ஸ் வலிப்பு): இது குழந்தைகளிடத்தில் பொதுவாக காணப்படுகிறது.இதில் அவர்கள் கவனம் செலுத்தாமல் ஒரே இடத்தில் முறைத்துப் பார்க்கலாம் அல்லது சில நுட்பமான உடல் இயக்கங்களுடன் தன்னைச் சுற்றி என்ன நிகழ்கிறது என்ற விழிப்புணர்வை இழக்கக்கூடும்.
- டோனிக் வலிப்புத்தாக்கங்கள்: தசைகளின் விறைப்பு காரணமாக நோயாளி கீழே விழக்கூடும்.இதில் முது, கைகள் மற்றும் கால்களின் தசைகள் பாதிப்படைவது பொதுவானதாகும்.
- க்ளோனிக் வலிப்புத்தாக்கங்கள்: வெட்டி வெட்டி இழுக்கும் தசை இயக்கங்கள், இது மிகப் பொதுவாக முகம், கழுத்து மற்றும் கைகளின் தசைகளை பாதிக்கிறது.
- டோனிக்-க்ளோனிக் வலிப்புத்தாக்கங்கள்: இதில் டோனிக் வலிப்புத்தாக்கங்கள் மற்றும் க்ளோனிக் வலிப்புத்தாக்கங்களின் அறிகுறிகளை ஒருவர் அனுபவிக்கக்கூடும்.
- மயோக்ளோனிக் வலிப்புத்தாக்கங்கள்: தசை இழுப்பதுடன் சேர்ந்து சிறு வெட்டி இழுக்கும் அசைவுகள் இருக்கலாம்
- டோனிக் அல்லாத வலிப்புத்தாக்கங்கள்: தசை கட்டுப்பாடு இழப்பு காரணமாக ஒருவர் நிலை குலைந்து கீழே விழக்கூடும்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
பெரும்பாலான நரம்பியல் நிலைமைகளைப் போலவே, வலிப்புத்தாக்கங்களின் தெளிவான காரணமும் புலப்படவில்லை. இருப்பினும், இந்த நிலைக்கு எபிலிப்சி மிகவும் பொதுவான காரணியாக உள்ளது.
இதற்கான பிற காரணங்கள் பின்வருமாறு:
- மரபணு காரணிகள்: வலிப்புத்தாக்கங்கள் நிகழ்வதில் மரபணு பிறழ்வுகள் அல்லது பரம்பரை ரீதியாக இதனை பெறுதலே முக்கிய பங்கு வகிக்கிறது.
- மூளை கட்டிகள், தலையில் ஏற்படும் பெரும் அதிர்ச்சி, நரம்பியல் வளர்ச்சி நிலைகள், மூளை அழற்சி அல்லது ஆல்சைமர் நோய்.
- நோய்த்தொற்றுகள்.
- எச்.ஐ.வி நோய்த்தொற்று.
- மது மற்றும் போதை மருந்துகளின் தவறான பயன்பாடு.
- தூக்கமின்மை, காய்ச்சல்.
- மனஅழுத்தம் நீக்கிகள், சிறு நீரிறக்க ஊக்கிகள் மற்றும் வலி நிவாரணிகள் போன்ற சில மருந்துகள்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
முழுமையான மருத்துவ பின்புலங்களை அறிவதுடன் பல விசாரணைகளை மேற்கொள்ளுதல் வலிப்புத்தாக்கங்களை கண்டறிவதில் உதவி புரிகின்றன.
- நோய்த்தொற்றுகள், மரபணு கோளாறு, ஹார்மோன் அல்லது எலக்ட்ரோலைட் (மின்பகுபொருள்) சமநிலை இன்மையை கண்டறிய இரத்த பரிசோதனைகள்.
- இடுப்பு துளையீடு சோதனை.
- மூளைமின்அலைவரைவுகள்.
- நரம்பியல் செயல்பாடு சோதனைகள்.
- காந்த அதிர்வு விம்பங்கள் (எம்.ஆர்.ஐ).
- பாஸிட்ரான் எமிஷன் டோமோகிராபி (பி.இ.டி) ஸ்கேன்.
வலிப்புத்தாக்கங்கள் சில நேரங்களில் ஒரு முறை நிகழ்வாக இருக்கலாம். இதற்கு எந்த சிகிச்சையும் தேவைப்படுவதில்லை.
வலிப்புத்தாக்கங்கள் மீண்டும் மீண்டும் நிகழ்ந்தால், மருத்துவர் வலிப்படக்கி மருந்துகளை பரிந்துரை செய்யக்கூடும்.சில சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.அதிக கொழுப்பு, குறைந்த கார்போஹைட்ரேட், கீற்றோவாக்க (கீட்டோஜெனிக்) உணவு போன்ற உணவு திட்டத்தின் மாறுதல்கள் வலிப்பிற்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.