முடக்கு வாதம் - Rheumatoid Arthritis in Tamil

Dr. Nadheer K M (AIIMS)MBBS

May 12, 2019

March 06, 2020

முடக்கு வாதம்
முடக்கு வாதம்

முடக்கு வாதம் என்றால் என்ன?

முடக்குவாதம் (ஆர்.ஏ) என்பது மூட்டுகள் மற்றும் அதனை சுற்றி வீக்கம் அல்லது புடைப்பு, மூட்டுகளில் வலி மற்றும் பிற அறிகுறிகளால் வகைப்படுத்தப்படும் ஒரு நிலை ஆகும்.இது ஒரு தன்னுடல் தாக்குநோய் ஆகும், இதில் நோயெதிர்ப்பு அமைப்பு வெளியில் இருந்து வந்த கிருமி என்று நினைத்து உடலின் ஆரோக்கியமான திசுக்களை தவறாகத் தாக்குவதாகும்.

சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் குருத்தெலும்புக்கு சேதம் ஏற்படலாம்.குருத்தெலும்பு என்பது மூட்டுகள் மற்றும் எலும்புகளை மூடி இருக்கும் ஒரு திசு ஆகும்.மேலும், குருத்தெலும்பு இழப்பு மூட்டுகளுக்கு இடையே இடைவெளி ஏற்பட வழிவகுக்கிறது.மொத்தத்தில், இந்நிலை மிகவும் வலி மிகுந்தது ஆனால் இதை மருந்துகளால் கட்டுப்படுத்த முடியும்.

கைகள், கால்கள், முழங்கைகள், முழங்கால்கள், மணிகட்டுகள் மற்றும் கணுக்கால்களின் மூட்டுகளை முடக்குவாதம் பாதிக்கிறது.இந்த நிலை இதயம் அல்லது சுவாச அமைப்பு மூலம் பரவுகிறது, இந்த காரணத்தினால் இது உடலின் ஓர் உறுப்பு சார்ந்த நோய் (ஸிஸ்டெமிக் டிசீஸ்) என்று குறிப்பிடப்படுகிறது.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

இந்த நிலையில் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:

  • காலையில் இருக்கும் விறைப்பு நாள் முழுவதும் தொடர்ச்சியான மூடு இயக்கத்துடன் இருப்பது.
  • களைப்பு.
  • இரத்த சோகை.
  • மூட்டுகளில் வலி இருப்பது.
  • உலர்ந்த கண்கள் மற்றும் வாய்.
  • முழங்கைகள், கைகள், முழங்கால்கள் மற்றும் பிற மூட்டுகளில் உறுதியான கட்டிகள் இருப்பது.
  • மூட்டுகள் சிவந்து மற்றும் வீங்கி இருப்பது.
  • மார்பு வலி.
  • காய்ச்சல் மற்றும் எடை இழப்பு.

வலி மிகுந்த நிலையில் ஒரே நேரத்தில் இரண்டு கைகளையும் அல்லது கால்களையும் பாதிக்கிறது.இது 30 வயதினருக்கு பிறகு உள்ள எந்த நபருக்கும் வரலாம் மற்றும் ஆண்கள் விட பெண்களை அதிகம் பாதிக்கிறது.சில நேரங்களில், விரிவடைதல், அதாவது, அழற்சியுடன் கூடிய வலி மற்றும் சோர்வு எதிர்பாராத விதத்தில் ஏற்படலாம் மற்றும் நிலையை மோசமடையச் செய்யலாம்.

அதன் முக்கிய காரணங்கள் என்ன?

இந்த நிலைமை ஏற்படுவதற்கு சரியான காரணங்கள் தெரியவில்லை என்றாலும், பின்வரும் காரணிகள் இந்த நிலைக்கு முன்னுதாரணமாக கருதப்படுகிறது:

  • மரபணு பிறழ்வுகள்.
  • தந்தை குடும்பத்தில் ஆர்.ஏ நோயின் பின்னணி இருப்பது.
  • நோய்த்தொற்றுகள்.
  • ஹார்மோன் மாற்றங்கள்.
  • உணர்ச்சிவயப்பட்ட இடர்பாடு.
  • புகை பிடிப்பது.
  • மாசுகளினால் பாதிப்புக்குள்ளாதல்.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?

மேலே குறிப்பிட்ட அறிகுறிகளைக் கண்டறிவதன் மூலம் நோய் கண்டறியப்படுகிறது.மேலும், உடல் பரிசோதனை, எக்ஸ்-கதிர்கள் சோதனை மற்றும் இரத்த பரிசோதனைகள் ஆகியவை இந்த நிலை இருப்பதை உறுதிப்படுத்தும்.ஆரம்ப நோயறிதல் மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டால் சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சிகிச்சை:

சிகிச்சையின் வழிகாட்டுதல்களில் முன்கூட்டிய மற்றும் எதிர்வினை சிகிச்சைகள் இரண்டும் அடங்கும்:

  • வலி நிவாரணிகள் அல்லது வலிநீக்கி மருந்துகள்.
  • இபுரூஃபன் போன்ற ஸ்டீராய்டுகள் இல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள்.
  • ப்ரிட்னிசோலோன் போன்ற கார்டிகோஸ்டீராய்டுகள்.
  • மெத்தோட்ரெக்சேட் போன்ற நோய்களை மாற்றும் முடக்குவாத எதிர்ப்பு மருந்துகள்.
  • உயிரியல் மருந்துகளான இன்ஃப்ளிக்ஸிமாப் போன்றவை.
  • உடற்பயிற்சிகள், வலிமை தரும் பயிற்சி மற்றும் தாய் சீ போன்றவைகள்.
  • வலியை  கட்டுப்படுத்த மற்றும் மூட்டுகளில் இயக்கத்தை பாதுகாக்க இயன்மருத்துவம் (பிசியோதெரபி).
  • வலி மற்றும் அழுத்தத்தை நிவர்த்தி செய்ய பொருட்கள்.
  • ஓய்வு.
  • ஆரோக்கியமான உணவு உண்பது மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களை உணவில் சேர்ப்பது.
  • மசாஜ், அக்குபஞ்சர் மற்றும் பிற சிகிச்சைகள்.



மேற்கோள்கள்

  1. National Institutes of Health; [Internet]. U.S. National Library of Medicine. Rheumatoid arthritis.
  2. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Rheumatoid Arthritis (RA).
  3. National Health Service [Internet]. UK; Symptoms.
  4. Rheumatology Research Foundation [Internet]. Georgia: American College of Rheumatology. Rheumatoid Arthritis.
  5. Better health channel. Department of Health and Human Services [internet]. State government of Victoria; Rheumatoid Arthritis.

முடக்கு வாதம் க்கான மருந்துகள்

Medicines listed below are available for முடக்கு வாதம். Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.