கர்ப்ப காலத்தில் ஆர்ஹெச் உணர்திறன் என்றால் என்ன?

ரீசஸ் அல்லது ஆர்ஹெச் காரணி என்பது இரத்த சிவப்பு அணுக்களில் ஆன்டிஜென் இருப்பதை குறிப்பதாகும்.இந்த ஆன்டிஜென் இரத்தத்தில் இருப்பதால் அது இரத்த பிரிவை ஆர்ஹெச் நேர்மறை என்பதை குறிப்பிடுகிறது.ஆர்ஹெச் காரணி இல்லாத தனிநபர்கள் ஆர்ஹெச் எதிர்மறையாக கருதப்படுகிறார்கள்.ஆர்ஹெச் - நேர்மறை இரத்தத்துடன் ஆர்ஹெச் - எதிர்மறை இரத்தம் கலக்கும் போது, இது வலிமையான நோயெதிர்ப்பு அமைப்பு எதிர்வினைக்கு விளைகிறது, இது உடலில் ஆர்ஹெச் ஆன்டிஜெனுக்கு எதிரான ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது.இந்த ஆன்டிபாடிகள் இரத்த சிவப்பணுக்களை அழிக்கக்கூடும், இதனால் ஆர்ஹெச் உணர்திறன் ஏற்படுகிறது. இந்த நிலையில் தாயின் முதல் கர்ப்பத்தில் எந்த விளைவும் ஏற்படுவதில்லை.இந்த நிலை ஆர்ஹெச்  எதிர்மறையான தாய்க்கு ஆர்ஹெச் - நேர்மறையான குழந்தை பிறந்தால் இது கர்ப்ப காலத்தில் ஆர்ஹெச் உணர்திறன் எனஅறியப்படுகிறது.

முக்கிய அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் என்ன?

முதல் கர்ப்பத்தின் போது, இது எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாது.40 வாரங்களுக்கும் மேலாக கர்ப்பம் நீடிக்கும்போது, தாயின் நஞ்சுக்கொடி (நஞ்சுக்கொடி திடீரென) வெளிவருதல் ஏற்படலாம், ஆனால் இது மிக அரிதாகவே ஏற்படுகிறது.அப்படி ஏற்படும்பொழுது அது மிக அதிக ரத்தப் போக்கை ஏற்படுத்தும்.

எனினும், இரண்டாவது கர்ப்பத்தின் போது, குழந்தைக்கு மீண்டும் ஆர்ஹெச் நேர்மறையாக இருக்கும்பட்சத்தில், பிறந்த குழந்தை மஞ்சள் காமாலை, அனீமியா, மரணம் வரை கூட ஏற்படலாம் மற்றும் தொடர்ச்சியான கருக்கலைப்பு (எரித்ரோபிளாஸ்டோசிஸ் ஃபியூடலிஸ்  நிலை என்று சொல்லப்படுகிற) ஏற்படும்.இது சிசுவின் ஆர்ஹெச் நேர்மறை கொண்ட  இரத்த சிவப்பணுக்களை தாயின் உடலில் உள்ள ஆன்டிபாடிகள் எதிர்ப்பதனாலே ஆகும்.

முக்கிய காரணங்கள் என்ன?

தாய்க்கு ஆர்ஹெச்- எதிர்மறை இரத்தப் பிரிவும், வளரும் கருவுக்கு ஆர்ஹெச்- நேர்மறை  இரத்தப் பிரிவும் முதல் கர்ப்பத்தில் இருந்தால், பிறக்கும் குழந்தையின் மற்றும் தாயின் இரத்தமும் கலப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது, இது குழந்தை பிறப்பின்போது தாயின் இரத்தில் ஆர்ஹெச் -ஆன்டிஜனை வெளிப்படுத்த வழிவகுக்கிறது.இருப்பினும், இரண்டாவது கர்ப்பத்தின் போது, இந்த சூழ்நிலையில் மீண்டும் மீண்டும் வந்தால், தாயின் உடலில் ஏற்கனவே ஆர்ஹெச் காரணி ஆன்டிஜெனுக்கு எதிரான ஆன்டிபாடிகள் இருப்பதால் வளரும் கருவின் சிவப்பு இரத்த அணுக்களை தாயின் உடலில் ஆன்டிபாடிகள் எதிர்ப்பதால் கருச்சிதைவு அல்லது கருக்கலைப்புக்கு வழிவகுக்கிறது.

இது எப்படி கண்டறியப்படுகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது?

ஆர்ஹெச் காரணியுடைய பெண் மற்றும் அவரது வாழ்க்கைத்துணைக்கு போதுமான மருத்துவ மதிப்பீடுகள் செய்யப்படுகிறது.பெண் ஆர்ஹெச்- காரணிக்கு எதிர்மறை மற்றும் அவள் வாழ்க்கைதுணை ஆர்ஹெச்- நேர்மறை கொண்டிருந்தால், ஆர்ஹெச்- இணக்கத்தன்மை சோதனைகள் செய்யப்படுகின்றன.

தாயின் இரத்தத்தில் உள்ள ஆர்ஹெச் காரணிக்கு எதிரான ஆன்டிபாடிகள் இருப்பதைப் பற்றிய அறிய நேரடி கூம்ப்ஸ் சோதனை உதவி அளிக்கிறது.நேர்மறை  கூம்ப்ஸ் சோதனை  முடிவு ஆர்ஹெச்  ஒவ்வாமையைக் குறிக்கிறது.

அதிகப்படியான இரத்தப்போக்கு இருக்கும் பட்சத்தில், வழக்கமாக ஆர்ஹெச் ஒவ்வாமைக்கான சிகிச்சையானது பிறந்த குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.குறைவான  இரத்த இழப்பிற்கு கர்ப்பத்தின் கடைசி மும்மாதங்களில் அல்லது 28 வாரத்தில் மறு மதிப்பீடு தேவைப்படலாம்.

இரத்த சோகை (இரத்த இழப்பு) கடுமையானதாகவோ அல்லது மோசமாகவோ இருந்தால், ஆரம்பகால பிரசவம் தேவைப்படலாம், மேலும் இரத்தமாற்ற சிகிச்சையும் தேவைப்படலாம்.

Medicines listed below are available for கர்ப்பத்தின் போது ஏற்படும் ஆர்.ஹெச் மிகு உணர்வு: அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Rh Sensitization During Pregnancy in Tamil. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.

OTC Medicine NamePack SizePrice (Rs.)
Rhoclone 150 Injection1 Injection in 1 Packet1823.5
Rhogam 50 Injection1 Injection in 1 Packet2730.0
Rhoclone 300 Injection1 Injection in 1 Packet2339.2
Sammy 400 Tablet10 Tablet in 1 Strip336.7
Partobulin Injection1 Injection in 1 Packet2310.0
Rhogam 300 Injection 15 Ml1 Injection in 1 Packet2439.9
AntiD 300mcg/ml Injection1 Injection in 1 Vial4333.85
Micrhogam UF Injection1 Injection in 1 Packet2681.2
Matergam P Injection1 Injection in 1 Packet2807.5
Rhogam UF Injection1 Injection in 1 Packet2562.5

Related Articles

Read more...
Read on app