அமைதியற்ற கால்கள் நோய்க்குறி என்றால் என்ன?
அமைதியற்ற கால்கள் நோய்க்குறி என்பது நரம்பு மண்டலத்துடன் தொடர்புடைய ஒரு நோய் ஆகும், மேலும் இது தொடர்ந்து கால்களை நகர்த்த வலுவாக கட்டாயப்படுத்துதல் போன்றவற்றால் வகைப்படுத்தப்படுகிறது.இது தொடை, காலின் பின் பகுதி, பாதம் மற்றும் அரிதாக முகம், கைகள் மற்றும் மார்பு போன்ற பகுதிகளில் ஊர்ந்து செல்லுதல் அல்லது ஊடுருவல் போன்ற விரும்பத்தகாத கிளர்ச்சிகளை ஏற்படுத்துகின்றன.இந்த அறிகுறிகள் பொதுவாக மாலை மற்றும் இரவு நேரத்தில் மிகவும் மோசமடைகிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
இந்நோயினால் ஏற்படும் அறிகுறிகள் வெறுப்பு உண்டாக்குவதாக இயக்கலாம், மேலும் இவை லேசானதாக அல்லது மிதமானதாக இருக்கலாம்.மற்றும் அரிதாக அல்லது தினசரி காணப்படலாம்.அவை பின்வருமாறு:
- வலியுடன் கூடிய பிடிப்பு,அரிப்பு, தொய்வு, ஊர்ந்து செல்லுதல், கூச்ச உணர்வு, எரிச்சல், தொந்தரவு உணர்வு போன்ற உணர்வுகள் காலில் ஏற்படுதல் ( குறிப்பாக காலின் பின் பகுதியில்).
- கால்களில் உள்ள இரத்த நாளங்கள் மட்கிய நீரில் நிரப்பப்பட்டிருப்பதைப் போல உணர்தல்.
- வெகு நேரம் உட்கார்ந்து இருப்பதில் சிரமம்.
- தூக்கத்தின் இடையே உடல் உறுப்புகளை அசைத்தல் (பி.எல்.எம்.எஸ்), இது சிறிய மீண்டும் மீண்டும் கட்டுப்படுத்தமுடியாத அளவு ஏற்படும் அசைவு, அல்லது இரவில் தூங்கும் போது துடித்தல் போன்ற அறிகுறிகளால் வகைப்படுத்தப்படுகிறது.இவை 20 வினாடிகளிலிருந்து 40 வினாடிகளுக்குள் தோன்றலாம்.
- விழித்திருக்கும் போது மற்றும் ஓய்வெடுக்கும் போது கூட அனிச்சையாக நிகழும் கால் அசைவுகள்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
இந்நோய் ஏற்பட முக்கிய காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை மற்றும் இது பரம்பரை நோய் அல்லது குறிப்பிட்ட மரபணு குறைபாடுகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என கருதப்படுகிறது.இந்நோயுடன் தொடர்புடைய சில காரணங்கள் பின்வருமாறு:
- குறைந்த அளவிலான டோபமைனின் வேதி பொருள், இது தசைகளின் செயல்பாடு மற்றும் இயக்கங்களை கட்டுப்படுத்த தேவைப்படும் ஒரு நரம்பியல் கடத்தியாகும்.
- இரும்பு சத்து குறைபாடு, இரத்த சோகை, நீண்டகால சிறுநீரக நோய், நீரிழிவு அல்லது கர்ப்பம் போன்ற அடிப்படை நிலைகளின் காரணமாக ஏற்படுகிறது.
- குறிப்பிட்ட மருந்துகள், புகைபிடித்தல், காஃபின், மதுப்பழக்கம், உடல் பருமன், மன அழுத்தம் மற்றும் உடற்பயிற்சி செய்யாமை போன்றவற்றின் தூண்டுதல்களால் ஏற்படுகிறது.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
அறிகுறிகளின் விரிவான அறிக்கையை எடுத்துக் கொண்டபின், நோயின் தீவிரம், அறிகுறிகள் ஏற்பட்ட நேரம், அவைகள் எவ்வாறு குணமடைகிறது, மற்றவர்களுக்கிடையில் உள்ள விரும்பத்தகாத மற்றும் மன அழுத்தமுள்ள அறிகுறிகளின் காரணமாக தூக்கமின்மை போன்றவற்றை பற்றி முழுமையான மதிப்பீடு செய்யப்படுகிறது.இதனை தொடர்ந்து ஒரு முழுமையான உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறதது.மேலும் இதனை தொடர்ந்து கீழ் கொடுக்கப்பட்டுள்ள பரிசோதனைகள் செய்யப்படும்:
- இரத்த சோகை, சிறுநீரக பிரச்சினைகள் மற்றும் நீரிழிவு நோய் இருப்பதை அறிய செய்யப்படும் இரத்த பரிசோதனை.
- நீங்கள் படுக்கையில் உடல் பாகங்களில் எந்த வித அசைவும் இல்லாமல் படுத்திருக்கும் போது நிகழும் அனிச்சையான இயக்கங்களை கண்காணிக்க செய்யப்படும் முடக்கநிலை சோதனை போன்ற தூக்க சோதனைகள்.
- சுவாசம் விகிதம், மூளை அலைகள் மற்றும் தூக்கத்தின் போது ஏற்படும் இதயத் துடிப்பு ஆகியவற்றைக் கண்காணிக்கும் பாலிசோம்னோகிராம் சோதனை.
அமைதியற்ற கால்கள் நோய்க்குறியின் நிர்வகிப்பு முறைகள் பின்வருமாறு:
- லேசான பாதிப்பு உள்ள நிலையில், வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை கொண்டு வருவதன் மூலம் இந்நோய் நிர்வகிக்க படலாம்.அவை பின்வருமாறு:
- மேற்கூறப்பட்டுள்ள தூண்டுதல்களை தவிர்ப்பது.
- நல்ல தூக்க பழக்கங்கள்.
- தினசரி உடற்பயிற்சி.
- ஒரு அத்தியாத்தின் போது செய்யப்படும் சிகிச்சை முறைகள் பின்வருமாறு:
- கால்களில் மசாஜ் செய்தல், சூடான அல்லது குளிர்ந்த பொதி பயன்படுத்துதல் அல்லது சூடான நீரில் குளித்தல்.
- வாசித்தல் போன்ற மனதை திசைதிருப்பக்கூடிய செயல்பாட்டில் ஈடுபடுதல்.
- ஓய்வெடுத்தல் அல்லது நீடித்த உடற்பயிற்சிகளை செய்தல்.
- மருந்துகள் பயன்பாட்டுடன் கூடிய சிகிச்சை முறைகள் பின்வருமாறு:
- ரோபினிரோல், பிரமிபெக்ஸோல் அல்லது ரோட்டிகோடின் சரும தடிப்பு உள்ளிட்ட டோபமைன் அகோனிஸ்ட்டுகள்.
- வலியிலிருந்து நிவாரணம் தரும் மருந்துகளான கோடென், காபபென்டின் மற்றும் பிரேக்பாலின் போன்ற மருந்துகள்.
- டெமாசெபாம் மற்றும் லோப்ராசோலம் போன்ற மருந்துகள் தூக்க சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்க பயன்படுத்தப்படுகின்றன.
- இரும்புச்சத்து குறைபாடு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டிருந்தால், இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளுவதன் மூலம் இந்த குறைபாட்டினை தீர்க்க முடியும்.இந்நோய் கர்ப்பம் காரணமாக ஏற்பட்டிருந்தால் அது தானாகவே குணமடையும்.