சுவாச ஒத்திசை வைரஸ் (ஆர்.எஸ்.வி) நோய்த்தொற்று என்றால் என்ன?
ஆர்.எஸ்.வி என்பது பொதுவாக இரண்டு வயதிற்கும் குறைவான குழந்தைகளில் காணப்படும் ஒரு மிகவும் பரவக்கூடிய தொற்று நோய் ஆகும்.இது ஒரு சாதாரண சளி, நோய் போல ஒரு லேசான நோய் தொற்றாக தோன்றி, சில நோயாளிகளில் இது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி மரணத்திற்குக்கூட வழிவகுக்கலாம்.இரண்டு வயதுக்கு குறைவாக உள்ள குழந்தைகள் அல்லது குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளில் இந்த ஆர்.எஸ்.வி நோய்த்தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து அதிகமாக உள்ளது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
ஆர்.எஸ்.வி நோயின் பொதுவான அறிகுறிகள் சளியின் அறிகுறிகளை ஒத்ததாக இருக்கின்றன, ஆனால் குழந்தைகள் எதிர்கொள்ளும் அறிகுறிகள் பின்வருமாறு:
- மஞ்சள் அல்லது சாம்பல் நிற சளியுடன் கூடிய இருமல்.
- சுவாசிப்பதில் சிரமம்.
- நீர்ச்சத்துக் குறைவு.
- உணவு கொடுப்பதில் ஏற்படும் தயக்கம்.
- மந்தமான அல்லது செயலற்ற நிலை.
- எரிச்சலூட்டும் தன்மை.
- லேசான காய்ச்சல் மற்றும் தலைவலி.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
இந்த வைரஸ் தொற்றானது வாய், கண்கள் அல்லது காதுகள் வழியாக உடலினுள் நுழைகிறது.இந்த தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் நேரடி தொடர்பு கொள்வதன் வாயிலாக அல்லது மறைமுக தொடர்பான, தொற்றினால் பாதிக்கப்பட்ட நபரால் கையாளப்பட்ட ஒரு பொருளை குழந்தைகள் தொடுவதன் மூலம் இந்நோய் பரவுகிறது.இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட குழந்தையின் உடலில் பல வாரங்கள் வரை குடியிருக்கலாம் மற்றும் முதல் சில வாரங்களில் இது அதிகம் தொற்ற கூடிய ஒரு நோயாகும்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
ஆர்.எஸ்.வி நோய் தொற்றானது பொதுவாக ஒரு எளிய உடல் பரிசோதனை மற்றும் சுவாச பிரச்சனைகளை சோதனை செய்வதன் மூலம் கண்டறியப்படுகிறது.இதன் மற்ற பரிசோதனை முறைகள் பின்வருமாறு, இரத்த பரிசோதனைகள், மார்பக எக்ஸ்-கதிர் சோதனை அல்லது நாசி சுரப்பு சோதனை.
ஆர்.எஸ்.வி நோய்த்தொற்றுக்கான சிகிச்சை முறைகள் பொதுவாக வீட்டிலிலேயே நிர்வகிக்கக்கூடிய ஒன்றாகும்.எனினும் நோய் முற்றிய நிலையில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற நேரிடலாம்.காய்ச்சல் மருந்து , மூக்கடைப்பை சரிசெய்ய நாசி சொட்டு மருந்து மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்துகள் ஆகியவை பொதுவாக பரிந்துரைக்கப்படும் சிகிச்சை முறைகள் ஆகும்.வீட்டில், ஒரு ஈரப்பதமூட்டியை பயன்படுத்துதல் காற்றை ஈரமாக வைத்திருக்க, குறுகிய இடைவெளியில் குழந்தையை நீரேற்றமாக வைத்திருக்க மற்றும் முறையாக உணவு கொடுக்கவும் உதவுகிறது.ஒருவேளை குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால், ஐ.வி திரவங்கள் மற்றும் ஆக்ஸிஜன் போன்றவற்றை குழந்தை விரைவாக குணமடைவதற்காக மருத்துவர் பயன்படுத்தலாம்.