ரேபிஸ் - Rabies in Tamil

Dr. Ajay Mohan (AIIMS)MBBS

February 06, 2019

March 06, 2020

ரேபிஸ்
ரேபிஸ்

சுருக்கம்

ரேபீஸ் என்பது, பொதுவாக தொற்றுள்ள விலங்குகளின் உமிழ்வில் இருக்கும் ஒரு வைரஸ் காரணமாக பரவுகிறது. ராபீசின் பல நோய்-கடத்திகள் உள்ளன, மிகவும் பொதுவானவை நாய்கள் மற்றும் வௌவால்கள். ஒரு கடியினால் அல்லது தொற்றுள்ள மிருகத்தின் உமிழ் நீர், திறந்த காயத்துடன் தொடர்பு கொள்ளும்போது இது பரவும். ஒருமுறை பரவிவிட்டது என்றால், வைரஸ் உடலில் தன்னை இருத்திகொண்டு நரம்பு மண்டலத்தை தாக்கி, கோமாவை ஏற்படுத்தி இறுதியில் சிகிச்சை அளிக்காமல் இருந்தால் மரணம் கூட ஏற்படலாம். இரண்டு வகையான ராபிள்கள் உள்ளன - சீற்றம் மற்றும் முடக்கம். ரேபீஸின் பிரதான அறிகுறிகள் – ஒளி பயம், வலி உணர்வு ​​மற்றும் தசைப்பிடிப்பு, எச்சில் வழியுதல்(உயர்-உமிழ்நீர்) மற்றும் நீர் பயம் ஆகியவை. நோய் அதிகமானால், பக்கவாதம் மற்றும் கோமா பொதுவாக ஏற்படும். ரேபீசுக்கு சிகிச்சையாக  தோற்று  பகுதியை முழுமையாக சுத்தம் செய்து, சில வாரங்களுக்கு போதிய எதிர்ப்பு ரேபீஸ் தடுப்பூசி இடுவதாகும்.சரியான சமயத்தில் ரேபீஸுக்கு சிகிச்சை அளிக்காவிட்டால் சிக்கல்கள் எழும். சிலர் வலிப்பு, மூச்சுத் திணறுதல் மற்றும் மூளை வீக்கம் ஆகியவற்றை அனுபவிக்கலாம்.ரேபீஸ் முழுமையாக சிகிச்சையளிக்கக்கூடியது. சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்பட்டால், ரேபீஸ் தாக்கப்பட்ட நபர் ஆரோக்கியமான மற்றும் சாதாரண வாழ்க்கை வாழலாம்.

ரேபிஸ் அறிகுறிகள் என்ன - Symptoms of Rabies in Tamil

ரேபீஸ் என்பது ஒரு வளர்வீரியகூடிய நோய், நோய் தாக்கம் கூடும்போது, அறிகுறிகள் தீவிரமாகி வருகின்றன. இதன் அறிகுறிகள் தோற்று ஏற்பட்ட சமயத்தை பொறுத்து மாறுபடும். ரேபீசு அறிகுறிகளை வளர 30 முதல் 60 நாட்களுக்கு எடுக்கும். ரீபீஸ் நோய்த்தொற்று அறிகுறிகளின் வெவ்வேறு கட்டங்களில் பின்வருமாறு:

  • அடைகாப்பு
    அடைகாக்கும் கட்டத்தில் தொற்று ஏற்பட்ட ஆரம்ப நாட்களில், காயத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சில உணர்வுகள் அல்லது வலி இருக்கலாம். இது, அரிப்பு போன்ற சில அசௌகரியங்களுடனும் சேர்ந்து நோயின் முதல் அறிகுறியாகும், ஆனால் இது பொதுவாக கவனத்தை அதிகம்  ஈர்த்திறாது
  • ப்ரோட்ரோமல்
    சில நேரங்களில் குமட்டல், நடுக்கம், குளிர், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருக்கலாம். இந்த நிலையில் மற்ற அறிகுறிகளுடன் இணைந்து தசை வலி மற்றும் எரிச்சலூட்டும் உணர்வு தோன்றும். இந்த அறிகுறிகள் பெரும்பாலும் சாதாரண வைரஸ் நோய்த்தொற்றுகள் அல்லது காய்ச்சல் என்று  தவறாக புரிந்து கொள்ளப்படுகின்றன.
  • கடுமையான நரம்பியல் பாதிப்பு காலம்
    காலப்போக்கில், அறிகுறிகள் மிகவும் கடுமையாகி, அதிக காய்ச்சல், தன்நிலைஇழத்தல், மற்றும் ஆக்ரோஷம் ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன. இந்த கட்டத்தில் வலிப்புத்தாக்கங்கள் பொதுவானவை. வெட்டி எழுக்குதல், பகுதி பக்கவாதம், ஒளி பயம், விரைவான சுவாசம் (ஹைபர்வென்டிலைசேஷன்), மற்றும் எச்சில் வழியுதல் (ஹைபெர்சல்வேஷன் ) ஆகியவையும் இதன் அறிகுறிகளாகும்.
  • இறுதி கட்டம்
    ராபீஸ்-தொற்திருநாள்  நீரில் வெளிப்படும் போது பதட்டம்  மற்றும் பீதி தாக்குதல்களை சந்திக்கலாம். இது பொதுவாக ஹைட்ரோபொபியா அல்லது நீர் அச்சம் என அறியப்படும். இந்த கட்டத்தில், அனைத்து முக்கிய உறுப்புகளும் மெதுவாக செயலிழந்து போகும், பாதிக்கப்பட்ட நபருக்கு உயிரோடிரு-ப்பதற்காக, சுவாசிப்புதுணை மற்றும் மருந்துகள் தேவைப்படும். இறுதியில், நபர் கோமா நிலையில் சென்று தசை இயக்கம் இழந்து, சுவாசிப்பதும் பாதிக்கப்படுகிறது. இது ஒரு குறுகிய கால கட்டம் பொதுவாக ஒரு சில நாட்களில் நபர் இறந்து விடுவார்
myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Kesh Art Hair Oil by using 100% original and pure herbs of Ayurveda. This Ayurvedic medicine has been recommended by our doctors to more than 1 lakh people for multiple hair problems (hair fall, gray hair, and dandruff) with good results.
Bhringraj Hair Oil
₹546  ₹850  35% OFF
BUY NOW

ரேபிஸ் சிகிச்சை - Treatment of Rabies in Tamil

சிகிச்சையின் திட்டம் நபரை கடித்த நேரம்,கடித்த விலங்கு மற்றும் அறிகுறிகளை பொருத்தது. அதன் வகுக்கப்பட்ட செயல்முறை கீழ்க்கண்டவை:

  • ஒரு மருத்து சோப்பை கொண்டு காயம் பட்ட இடத்தை குறைந்தது 15 நிமிடங்களுக்கு சுத்தமாக கழுவி தொற்றுநீக்க வேண்டும். தோலில் மேற்கொண்டு துளைவுகள் இருந்தால் சோப்பு தண்ணீர் உபயோகித்து கழுக வேண்டும். அத்தியாவசியமின்றி காயத்திற்கு தைய்யல் இட கூடாது.  
  • அடுத்ததாக ஒரு டெட்டனஸ் அல்லது/மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் ஊசி இடவேண்டும்
  • ஆரம்பக்கட்ட  நிலையை சமாளித்த பிறகு தடுப்பூசி இடவேண்டும். வீட்டுவிலங்கினால் கடிபட்டு; எந்த அறிகுறிகளும் இல்லாமல் இருந்தால், அந்த நபர் மற்றும் விலங்கை மருத்துவர் சில நாட்களுக்கு தீவிர கண்காணிப்பில் வைப்பார். வீட்டுவிலங்கை கண்காணிக்க முடியவில்லை என்றால் சுற்றுவட்டாரத்தில் ரேபீஸ் இருக்கிறதா என்று பரிசோதிக்கப்படும். பரிசோதனையில் எதாவது விலங்கிடம் ரேபீஸின் அறிகுறிகள் தென்பட்டால் அதை மயக்கமாக்கி முழுமையாக சோதனை செயப்படும். எந்த ரேபீஸ் அறிகுறிகளும் இல்லை என்றால் தடுப்பூசி அவசியம் இல்லை.   
  • விலங்கினால் கடிக்கப்பட்ட நபரின் மீது சந்தேகம் இருந்தால், உடனடியாக மருத்துவர் தடுப்பூசி இட்டு சிகிச்சையை துடங்குவார். ரேபீஸ் எதிர்ப்பிகளை இம்முநோக்லோபின் ஊசி மூலம் செலுத்தி, நோயை எதிர்த்து ரேபீஸ் வைரஸ் உடம்பில் தங்குவதை தடுக்கமுடியும் .இதுபோல் 5 ஊசிகள் இரண்டு வாரத்திற்குள் இடவேண்டும். சில மருத்துவர்கள் கடித்த மிருகத்தை  கண்காணிக்க முடியவில்லை என்றால், பாதுகாபிர்க்காக மீண்டும் அதேபோல் ஒரு சுற்று ஊசிகள் இட பரிந்துரை-க்கலாம். வனவிலங்கினால் கடிக்கப்பட்டால் உடனடியாக இந்த சிகிச்சையை தான் துடங்குவார்கள்    
  • தடுப்பிற்கு மீறி அறிகுறிகள் பரவி விட்டன என்றால், வலிப்பை தடுக்க மருந்துகள் குடுக்கப்படும். தசை தளர்ப்பான்கள் மற்றும் மருந்துகள் வலி நிவாரணிகளுடன் பரிந்துரைக்கப்படும்
  • சிகிச்சை காலத்தில் நோயின் அறிகுறிகள் கூடுகிறதா என்று  தீவிரமகா கண்காணக்க வேண்டும். ஏதேனும் அறிகுறிகள்  தோன்றினால் உடனே மருத்துவரை உடனே அணுக வேண்டும்

வாழ்க்கைமுறை மேலாண்மை

நோய் சரியான சமயத்தில் கண்டறியப்பட்டால், ரேபீஸை சமாளித்து , திறம்பட சிகிச்சையளிக்க முடியும். அதனால் பாதிக்கப்பட்டவரால் முற்றிலும் சாதாரணமான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியும். சில சமயங்களில், ரேபீஸ் சிகிச்சையில் சில நாட்களுக்கு பக்க விளைவுகள் இருக்கலாம். இந்த பக்க விளைவுகள் - வலி, குமட்டல், வயிற்றுப் புண்கள் மற்றும் தலைவலி ஆகியவை. இந்த பக்க விளைவுகள் சிறிது காலத்தில் சரியாகிவிட வேண்டும். எனினும், பாதிக்கப்பட்டர்  மறுநிகழ்வுக்கு எதிராக பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். ரேபீஸ் வைரஸ் வெளிப்பாடு சில வாழ்க்கை முறை தேர்வுகளில்- உதாரணமாக உயிரினத்திற்கு அருகாமையில் உள்ள வாழ்க்கை முறையிலிருந்து வந்தால், எதிர்காலத்தில் மேலும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். வசிக்கும் பகுதியில் இதுபோல் நிகழ்ந்திருந்தால், அனைத்து விலங்குகளும் சோதிக்கப்பட வேண்டும், உள்ளூர் குடிமக்கள்க்கு எச்சரிக்கை செய்ய வேண்டும்



மேற்கோள்கள்

  1. Rozario Menezes. Rabies in India. CMAJ. 2008 Feb 26; 178(5): 564–566. PMID: 18299543
  2. Sudarshan MK. Assessing burden of rabies in India. WHO sponsored national multi-centric rabies survey (May 2004). Assoc Prev Control Rabies India J 2004; 6: 44-5
  3. BMJ 2014;349:g5083 [Internet]; Concerns about prevention and control of animal bites in India
  4. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Rabies
  5. World Health Organization [Internet]. Geneva (SUI): World Health Organization; Rabies
  6. World Health Organization [Internet]. Geneva (SUI): World Health Organization; Rabies
  7. Rupprecht CE. Rhabdoviruses: Rabies virus. In: Baron S, editor. Medical Microbiology. 4th edition. Galveston (TX): University of Texas Medical Branch at Galveston; 1996. Chapter 61
  8. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Compendium of Animal Rabies Prevention and Control, 2003*