ப்ரீக்ளாம்ப்ஷியா மற்றும் எக்லம்பிஷியா என்றால் என்ன?
ப்ரீக்ளாம்ப்ஷியா என்பது கர்ப்பகாலத்தின் போது சில பெண்களுக்கு இரத்த அழுத்தம் அதிகரிக்கும் ஒரு நிலையாகும். வழக்கமாக இரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சினைகள் இல்லாத பெண்களிடம் இந்த நிலை பொதுவானது. 200 பெண்களில் ஒருவருக்கு ப்ரீக்ளாம்ப்ஷியா பாதிப்பை ஏற்படுத்தும் எக்லம்பிஷியா என்றழைக்கப்படும் ஒரு மிகக் கடுமையான நிலை, உயர் இரத்த அழுத்தம் காரணமாக பெண்களுக்கு வலிப்புத்தாக்கங்கள் உண்டாகின்றது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
அறிகுறிகள் நிலைமையைப் பொறுத்து மற்றும் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு வேறுபடுகின்றன. எனினும், விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளவை அடங்கும்:
- ப்ரீக்ளாம்ப்ஷியா: உடலில் திரவத்தை தக்கவைப்பதால் உடல் எடை அதிகரிப்பு, தலைவலி, மாறுபட்ட பார்வை, குமட்டல், அடிவயிற்று வலி மற்றும் சிறுநீர் வெளியீடு குறைதல் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.
- எக்லம்பிஷியா: முகம் மற்றும் கைகளில் வீக்கம், மங்கலான பார்வை, தன்னிலையிழத்தல், தவறிய பார்வைகளின் தருணங்கள், மற்றும் நினைவு இழப்பு ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.
நோய்தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
ப்ரீக்ளாம்ப்ஷியாவின் சரியான காரணத்தை கணிக்க கடினமாக உள்ளது, இருப்பினும், போதிய உணவின்மை அல்லது பற்றாக்குறை, கருப்பைக்கு இரத்த ஓட்டம் இல்லாமை அல்லது இரத்த ஓட்டம் குறைதல் அல்லது சில மரபணு காரணங்கள் ஆகிய நிலைகள் இந்த நோய்க்கு பங்களிக்கலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ப்ரீக்ளாம்ப்ஷியாவைப் பொறுத்த வரையில், வெளிப்படையான உயர் இரத்த அழுத்தத்தை தவிர, நஞ்சுக்கொடி அல்லது உயர்ந்த புரத அளவுகளில் ஏற்படும் அசாதாரண நிலைகள், இந்த நிலைக்கு வழிவகுக்கிறது என்று மருத்துவர்கள் நம்புகிறார்கள்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
ப்ரீக்ளாம்ப்ஷியா மற்றும் எக்லம்பிஷியாவைக் கண்டறிவதில், மருத்துவர்கள் முதலில் இரத்த அழுத்த அளவை சரிபார்த்து, ஒரு கால அளவிற்கு அவற்றை கண்காணிக்கிறார்கள். ரத்த எண்ணிக்கை, ரத்த நுண்தட்டுகள் உறையும் காலம் மற்றும் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயல்பாடு ஆகிவற்றை கண்டறிய சில இரத்த மாதிரிகள் எடுக்கப்படுகிறது. கூடுதலாக, சிறுநீர் புரத அளவுகள் பரிசோதிக்கப்படலாம் மற்றும் கிரியேட்டினைன் பரிசோதனையும் செய்யப்படலாம்.
குழந்தையை பெற்றெடுப்பது என்பது குழந்தையின் வளர்ச்சி மற்றும் தாயின் நிலையை பொருத்தது என்றாலும், இது எக்லம்பிஷியா மற்றும் ப்ரீக்ளாம்ப்ஷியாவிற்கான சிறந்த சிகிச்சை ஆகும். நிலைமை மிதமானதாக இருக்கும் சந்தர்ப்பங்களில், மருத்துவர்கள் படுக்கை ஓய்வு, நேரத்தை அழுத்தத்திற்கான வழக்கமான ரத்தப் பரிசோதனைகள் ஆகியவற்றை பரிந்துரைக்கிறார். சில சிக்கலான சந்தர்ப்பங்களில், கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கக்கூடும். அந்த பெண்ணிற்கு எக்லம்பிஷியா இருந்தால், வலிப்புத்தாக்கங்களைத் தடுப்பதற்காக டாக்டர்கள் வலிப்பு எதிர்ப்பு மருந்துகளை பரிந்துரைக்கின்றனர். பிரசவம் ஆகி 6 வாரங்களுக்குள் ப்ரீக்ளாம்ப்ஷியா அல்லது எக்லம்பிஷியாவின் எல்லா அறிகுறிகளும் மறைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.