சுருக்கம்
நிமோனியா என்பது நுரையீரல்களின் ஏற்படும் ஒரு தொற்றுநோயாகும். இது அல்வியோளி என்றழைக்கப்படும் நுரையீரல்களில் உள்ள சிறிய காற்றுப்பைகளில் சேரும் திரவம் அல்லது சீழினால் உண்டாகும் ஒரு நோய்த்தொற்று ஆகும். இது ஒன்று அல்லது இரண்டு நுரையீரல்களையும் பாதிக்கலாம். பாக்டீரியா, பூஞ்சை, வைரஸ் மற்றும் பிற ஒரு சில பொதுவான தொற்றுநோய்கள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை காரணங்களால் நிமோனியா ஏற்படலாம். இதன் அறிகுறிகள் இருமல், குளிர் காய்ச்சல், மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஆகியன. இந்த அறிகுறிகள் லேசான, மிதமான அல்லது கடுமையானதக இருக்கலாம். நோய்த்தொற்றின் தீவிரம் தொற்றுநோயை ஏற்படுத்தும் நுண்ணுயிரி, மொத்த உடல் நலம், பாதிக்கப்பட்ட நபரின் வயது போன்ற பல காரணிகளால் நிர்ணயிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட நபரின் மருத்துவ வரலாறு, ஆய்வக சோதனைகள் மற்றும் பிற நோய் கண்டறிதல் மற்றும் இமேஜிங் சோதனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் நிமோனியா பாதிப்பை கண்டறியலாம்.
இந்த நோய்க்கான சிகிச்சையானது நிமோனியா எந்தவகை தொற்றினால் ஏற்பட்டுள்ளது என்பதை பொறுத்தது. ஒரு வைரஸ் தொற்று காரணமாக நிமோனியா ஏற்படுகிறது என்றால், எந்த குறிப்பிட்ட சிகிச்சையும் அளிக்க தேவையில்லை மேலும் உடல்நலம் பொதுவாக தானாகவே சரியாகிவிடும். ஒரு பாக்டீரியா தொற்று காரணமாக நிமோனியா ஏற்படுகிறது என்றால், நுண்ணுயிர் எதிர்ப்பிகள்(ஆன்டி பயாட்டிக்ஸ்) பயன்படுத்தப்படுகின்றன. நிமோனியாவுக்கு பெரும்பாலும் வீட்டு வைத்தியம் செய்யலாம் அல்லது ஒரு மருத்துவரின் ஆலோசனை படி சிகிச்சை பெறலாம், கடுமையான நோய்தொற்று இருந்தால் நோயாளியை மருத்துவமனையில் அனுமதிக்கலாம். இந்த நோயினால் நுரையீரல் புண்கள் (சீழ் உருவாக்கம்), சுவாச செயலிழப்பு அல்லது செபிசிஸ் (இரத்த தொற்று) போன்ற சிக்கல்கள் ஏற்படலாம். இது பல உறுப்புகளின் செயலிழப்புக்கு வழிவகுக்கும். பொதுவாக ஆரோக்கியமான உடல்நலம் உள்ளவர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டால், உடனடி சிகிச்சை மற்றும் பராமரிப்பினை ஆரம்பித்தால் அவர்கள் விரைவாக இந்த நோயிலிருந்து மீண்டுவிடுகின்றனர். இருப்பினும், ஐந்து வயதிற்கும் குறைவான வயதுடைய குழந்தைகளுக்கு மற்றும் 65 வயதுக்கும் மேற்பட்ட வயதுடையவர்களுக்கு, நிமோனியா மிகவும் தீவிரமாக இருக்கிறது. நாள்பட்ட நோய்கள், குறிப்பாக சிறுநீரகங்கள், நுரையீரல் அல்லது இதயத்தில் பாதிப்பு உள்ளவர்கள், பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு கொண்டவர்கள் ஆகியோருக்கு நிமோனியா கடுமையானதாக இருக்கும்.