பிட்ரிரியாசிஸ் ரப்ரா பிலீரிஸ் என்றால் என்ன?

பிட்ரிரியாசிஸ் ரப்ரா பிலீரிஸ் (பி ஆர் பி) என்பது குழுவாக ஏற்படும் அரிதான சரும கோளாறாகும், இந்நிலையில் சருமத்தில் அழற்சி மற்றும் சிவப்பு நிற பேட்சஸ் செதில்களாக தோன்றக்கூடும். பி.ஆர்.பி நோயானது முழு உடலையோ அல்லது உடலின் சில குறிப்பிட்ட பகுதிகளான பாதங்களின் அடிப்பாகம், முழங்கைகள், முழங்கால்கள் மற்றும் உள்ளங்கைகள் போன்றவைகளிலோ பாதிப்பை ஏற்படுத்தலாம். இந்நிலையில் பொதுவாக உள்ளங்கை மற்றும் பாதங்களின் தோல்கள் பாதிக்கப்படுவதால் அவை தடித்து காணப்படும். சில நேரங்களில், இந்நிலையானது சொரியாசிஸ் என தவறாக கண்டறியப்படுகிறது. அனைத்து வயதுக்குட்பட்ட, ஆண்கள் மற்றும் பெண்களும், மற்ற இனங்களும் இந்நோயினால் பாதிக்கப்படலாம். பி.ஆர்.பி நோயின் வகைகள் பின்வருமாறு:

  • கிளாசிக்கல் அடல்ட் ஆன்செட்.
  • கிளாசிக்கல் இளம்பருவ ஆன்செட்.
  • இயல்பற்ற அடல்ட் ஆன்செட்.
  • இயல்பற்ற இளம்பருவ ஆன்செட்.
  • மட்டுப்படுத்தப்பட்ட இளம் பருவம்.
  • எச்.ஐ.வி-தொடர்புடையது.

இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?

பி.ஆர்.பி நோயின் அறிகுறிகளானது காலப்போக்கில் முன்னேறி நகங்கள், தோல், கண்கள் மற்றும் சளிச்சவ்வுகள் போன்றவைகளில் பாதிப்பேற்படுத்கின்றன. அதன் அறிகுறிகளுள் அடங்குபவை பின்வருமாறு:

  • உள்ளங்கை மற்றும் பாதங்களின் அடிப்பாகத்தில் இருக்கும் தோல் தடித்திருத்தல்.
  • நகங்கள் நிறமிழந்து, தடித்து மற்றும் உதிர்ந்து காணப்படுதல்.
  • கண்களில் வறட்சி ஏற்படுதல்.
  • முடி மெலிதடைதல்.
  • தூக்கமின்மை.
  • தொடர்ந்திருக்கும் வலி.
  • அரிப்பு.
  • வாய் பகுதியில் ஏற்படும் எரிச்சல்.

இது கடுமையான நிலையில்லை என்றாலும், பிஆர்பி வழக்கமான பழக்கவழக்கங்களில் பாதிப்பேற்படுத்தக்கூடியது.

.நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

பி.ஆர்.பி யின் பெரும்பாலான வழக்குகளில், அதற்கான காரணங்கள் அறியப்படுவதில்லை. சில காரணங்களுள் அடங்குபவை பின்வருமாறு:

  • சுற்றுச்சூழல் காரணிகளோடு தொடர்புடைய அறியப்படாத மரபணு காரணி.
  • மரபணு பிறழ்வுகள்.
  • அசாதாரண நோயெதிர்ப்பு எதிர்வினை.

இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?

இந்நிலைக்கான கண்டறிதல் பொதுவாக, உடலியல் பரிசோதனை மூலமே செய்யப்படுகிறது, அதாவது சருமத்தில் ஏதேனும் காயம் ஏற்பட்டிருக்கிறதா என நேரடி பரிசோதனை செய்யக்கூடும். பி.ஆர்.பி நோய்க்கான கண்டறிதலை உறுதி செய்ய, பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து சருமத்தின் மாதிரி சேகரிக்கப்பட்டு, திசுப்பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது, இந்த பரிசோதனை பி.ஆர்.பி போன்று இருக்கும் எந்த தோல் நிலைகளையும் வெளிப்படுத்தகூடியது.

சுகாதார பராமரிப்பு வழங்குநர் பொதுவாக பரிந்துரைக்கும் சிகிச்சை முறைகள் பின்வருமாறு:

  • யூரியா, ரெட்டினாய்டுகள், லாக்டிக் அமிலம் மற்றும் ஸ்டீராய்டுகள் போன்ற சருமத்திற்கான க்ரீம்கள்.
  • சருமத்தில் இருக்கும் வறட்சி மற்றும் வெடிப்புகளை குணப்படுத்த எமிலியண்ட் க்ரீம் போன்ற மாய்சுரைசிங் செயல்பாடுகளை செய்யக்கூடிய சரும கிரீம்கள் பரித்துரைக்கப்படுகின்றது.
  • ஐசோட்ரீடினோயின், மெத்தோட்ரெக்ஸேட் அல்லது அசிட்ரேடின் போன்றவைகளை கொண்ட வாய்வழி மாத்திரைகள்.
  • லைட் தெரபி என்பது பாதிக்கப்பட்ட சரும பகுதிகளில் அல்ட்ராவைலெட் லைட்டின் ஒளி கதிர்களை சரியாக வெளிப்படுத்துதல் மூலம் நிவாரணம் பெறச்செய்யும் சிகிச்சை முறை ஆகும்.
  • ஆராய்ச்சியின் கீழ் இருக்கும் நோயெதிர்ப்பு அமைப்பை மாற்றக்கூடிய மருந்துகள் பயனுள்ளவையாக இருக்கலாம்.
Read more...
Read on app