ஊசிப்புழு தொற்று என்றால் என்ன?
ஊசிப்புழுக்கள் மனித பெருங்குடல் அல்லது மலக்குடலில் வாழக்கூடிய ஒட்டுண்ணிகள் ஆகும். இவை நூல் புழுக்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. மருத்துவ சொல்முறையில், ஊசிப்புழுத் தொற்று, என்டிரோபியாசிஸ் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த புழுக்கள் உயிர் வாழ மற்றும் இனப்பெருக்கம் செய்ய மனித உடலை பயன்படுத்துகின்றன. ஆனால் இவை மற்ற விலங்கினங்களை பாதிப்பதில்லை. ஊசிப்புழு தொற்றினால் ஒருவர் பாதிக்கப்பட்டால், இந்த புழுக்கள் குடலில் முதிர்ச்சியடைந்து பின்னர் இனப்பெருக்கம் செய்வதற்காக மலவாய் பகுதியில் முட்டைகளை இடுகின்றன.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
ஊசிப்புழு தொற்றுடன் தொடர்புடைய பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:
- மலவாய் அரிப்பு.
- அரிப்பு காரணமாக தூங்குவதில் தொந்தரவுகள்.
- மிதமான சோர்வு.
- பசியின்மை.
- தொடர்ச்சியாக வரும் வயிற்று வலி.
- எடை இழப்பு.
- எரிச்சலான மனநிலை.
நோய்தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
ஊசிப்புழு முட்டைகளை தொடுவதன் மூலம் இப்புழு பரவுகிறது, இது மிகவும் சிறியதாக உள்ளதால் கண் பார்வைக்கு தென்படுவதில்லை. சுகாதாரக் குறைவு காரணமாக, பாதிக்கப்பட்ட நபரின் மலவாய் பகுதியில் இருந்து முட்டைகள் வேறு மேற்பரப்பில் பரவலாம், இதை மற்றவர்கள் தொட்டால் அவர்களுக்கு இப்புழு பரவுகிறது. இந்த தொடர்புக்குப் பிறகு வாயில் விரல்களை வைத்து முட்டைகளை உட்கொள்வதால் தொற்று ஏற்படுகிறது.
பாதிக்கப்பட்ட நபரின் தனிப்பட்ட பொருட்களில் ஊசிப்புழு முட்டைகள் காணப்படலாம்.
சில அரிய சந்தர்ப்பங்களில், ஊசிப்புழு முட்டைகளால் பாதிக்கப்பட்ட காற்றை சுவாசிக்கும் போது கூட இந்த முட்டைகள் ஒருவருடைய உடலுக்குள் நுழையலாம்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
சில சந்தர்ப்பங்களில், பாதிக்கப்பட்ட நபரின் உள்ளாடைகளில் ஊசிப்புழுக்களை எளிதாக காணலாம். இரவு நேரங்களில் உள்ளாடைகளிலோ, கழிப்பறைகளிலோ ஊசிப்புழுக்களை கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால் பெண் புழுக்கள் இச்சமயத்தில் தான் முட்டைகளை இடுகின்றன. ஊசிப்புழுக்கள் வெள்ளையாகவும், நூல் போன்ற தோற்றமும் உடையன.
நுண்ணோக்கியின் கீழ் பரிசோதிப்பதற்காக மருத்துவர் மலவாய் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு ஈரமான ஸ்வாபை (திசு மாதிரியை சேகரித்தல்) பயன்படுத்தலாம்.
மலவாய் பகுதியில் இருந்து மாதிரி சேகரிக்க தெளிவான டேப்பைப் பயன்படுத்தும் டேப் டெஸ்ட் செய்யப்படுகிறது. நுண்ணோக்கியின் கீழ் ஊசிப்புழு முட்டைகளை கண்டறிய இச்சோதனை உதவுகிறது.
ஊசிப்புழுக்களை அகற்றுவதற்க்கான சிகிச்சையில் பல மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மருந்துகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு வேலை செய்கின்றன:
- புழுக்கள் உயிர்வாழ்வதற்கு தேவையான குளுக்கோஸை உறிஞ்சும் திறனை தடுப்பது.
- ஊசிப்புழுக்களை ஆற்றலறச்செய்வது.
தொற்று பரவுவதை தடுக்க, உங்கள் கைகளை சுத்தமாக வைத்திருந்து முறையான சுகாதாரத்தை பராமரிக்கவும்.