அடி வயிற்றின் உட்பகுதியைச் சுற்றி இருக்கும் சவ்வின் சுழற்சி / பெரிட்டோனிட்டிஸ் என்றால் என்ன?
பெரிட்டோனிட்டிஸ் என்பது பெரிடோனியத்தில் ஏற்படும் வீக்கமாகும்,வயிற்றின் உட்புற புறணியில் ஒரு திசு உருவாகி அவை வயிற்று பகுதியில் உள்ள பாகங்களை பாதுகாக்கிறது.பெரிட்டோனிட்டிஸ் நோயானது பொதுவாக மற்றும் ஆபத்தினை விளைவிக்கும் ஒரு நோயாகும்,இது பாக்டீரியா தொற்றினாலோ,அறுவை சிகிச்சை சார்ந்த பிரச்னைகளினாலோ அல்லது பெரிடோனியால் டையலிசிஸ் காரணமாகவோ ஏற்படலாம்.பெரிட்டோனிட்டிஸ் நோய் பிரச்சனைக்கு உடனடி சிகிச்சை முறை அவசியமாகும்.இந்நோய் தக்க சமயத்தில் சிகிச்சை அளிக்கப்படவில்லை எனில், மேலும் மோசமடையலாம்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
இந்நோய் ஏற்படுவதற்கான தாக்கங்கள் மற்றும் காரணங்கள் பின்வருமாறு:
- அடிவயிற்றில் வீக்கம் மற்றும் மென்மையாக காணப்படுதல்.
- அடிவயிற்று பகுதியில் கூர்மையான வலி.
- காய்ச்சல் மற்றும் குளிர்தல்.
- பசியின்மை.
- அதிகமாக தாகம் எடுத்தல்.
- குமட்டல் மற்றும் வாந்தி.
- வாயு வெளியேற்ற இயலாமை மற்றும் மலம் கழிக்க இயலாமை.
- அடிவயிற்று பகுதியில் வீக்கம்.
- தன்னிலையிழத்தல்.
- ஓய்வின்மை.
- அதிர்ச்சி.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
பெரிட்டோனிட்டிஸ் நோய் ஏற்படுவதற்கான மிக பொதுவான காரணமாவது கடுமையான பாக்டீரியா தொற்று ஆகும்.இது முதல் நிலை (எந்த ஒரு அடிப்படை நோய் தொற்றின் காரணம் இல்லாமல்) மற்றும் இரண்டாம் நிலை பெரிட்டோனிட்டிஸ் நோயாக இருக்கலாம், இந்நோய் தொற்று வேறு சில உறுப்புகள் மற்றும் பாகங்களிலிருந்து பரவுகிறது.எனினும், பெரிட்டோனிட்டிஸ் நோய் ஏற்படுவதற்கு வேறு பல காரணங்களும் இருக்கலாம்.பெரிட்டோனிட்டிஸ் நோய் ஏற்படுவதற்கான வேறு பல காரணங்கள் பின்வருமாறு:
- அடிவயிற்று பகுதியில் இரணம் அல்லது காயம்.
- பெரிடோனினல் டையாலிசிஸ்- பெரிடோனினல் திரவ டையாலிசிஸ், ஒரு இயந்திரத்தைப் பயன்படுத்தி ஏற்கனவே இருக்கும் திரவம் வடிகட்டப்படுகிறது.
- அடிவயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை செய்தல்.
- குடல் வால் அழற்சி.
- வயிற்று புண்.
- குரோன் நோய் - ஒரு வகையான குடல் நோய் அழற்சி.
- கணையம் அல்லது இடுப்பெலும்பு பகுதியில் வீக்கம்.
- பித்தப்பை அல்லது குடற்பகுதியில் நோய்த் தொற்று.
- டையாலிசிஸ் செய்த பின்னர் பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்படுதல்.
- உணவு குழாயின் பயன்பாடு.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
மேற்குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் ஏதெனும் இருப்பின் நீங்கள் உடனடியாக உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டும்.நோயாளியின் மருத்துவ அறிக்கையை பொறுத்து நோயறிதல் மதிப்பீடு துவங்கப்படும்.பெரிட்டோனிட்டிஸ் நோய் ஏற்படுவதற்கான காரணத்தை கண்டறிய செய்யப்படும் சோதனைகள் பின்வருமாறு:
- அடிவயிற்றில் பகுதியில் பரிசோதனை செய்தல்.
- இரத்தப் பரிசோதனை.
- பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட பெரிடோனியத்தின் இரத்த தன்மையை அறிய இரத்த வளர்சோதனை.
- அடிவயிற்று பகுதியில் உள்ள திரவங்களின் பகுப்பாய்வு.
- நீங்கள் பெரிட்டோனியல் டையாலிசிஸ் செய்து இருந்தால், டையாலிசிஸ் கழிவு பகுப்பாய்வு.
- அல்ட்ராசவுண்ட் இமேஜிங்.
- பெரிட்டோனியத்தில் ஏதேனும் துளைகள் இருந்தால் கண்டறிய சி.டி ஸ்கேன்ஸ் மற்றும் எக்ஸ் கதிர்கள்.
- லேப்ரோஸ்கோபி - இந்நோய் ஏற்படுவதற்கான காரணத்தை கண்டறிய அடிவயிற்று பகுதியின் உள்ளே ஒரு கேமரா பொருத்தப்பட்ட குழாய் பயன்படுத்துதல்.
இந்த தொற்றுநோய் உடலின் பல உறுப்புகளுக்கு பரவி அந்த உறுப்பின் செயலிழப்புக்கு வழிவகுக்கும் என்பதால் பெரிட்டோனிட்டிஸ் நோய்க்கு உடனடி சிகிச்சை முறை அவசியம்.பெரிட்டோனிட்டிஸ் நோய்க்கான சிகிச்சை புலனுணர்வு வகை பின்வருமாறு:
- மருந்து: ஆண்டிபயாடிக்குகள், எதிர்ப்பு பூஞ்சை மருந்துகள்.
- அடிவயிற்று பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட திசுவை அகற்ற அறுவை சிகிச்சை முறை.
- உள் அடிவயிற்று பகுதியில் ஏற்பட்டுள்ள வீக்கம் மற்றும் தொற்றினை நீக்க உள்-அடிவயிற்று பகுதியை கழுவுதல்.
- சில நோயாளிகளுக்கு மீண்டும் வயிற்று பகுதியில் அறுவைச்சிகிச்சை செய்ய வேண்டிவரலாம் (திறந்த அறுவை சிகிச்சை முறை).அடி வயிற்றின் உட்பகுதியில் இடப்படும் புதிய கீறலின் வழியாக உட்பகுதியில் நிகழும் அசாதாரணங்களை கண்டறியலாம்.
இந்நோய்க்கு சிகிச்சையளிக்கப்படாமல் விட்டுவிட்டால், இந்த பெரிட்டோனிட்டிஸ் நோய் தொற்று இரத்தத்தில் பரவி செப்டிசெமியா (இரத்தத்திற்கு தொற்றுநோய் பரவுதல்) மற்றும் அதிர்ச்சி போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம்.மேலும் இது அடிவயிற்று பகுதியில் சீழ் கட்டி உருவாக்கம் மற்றும் திசு அழிதலுக்கு வழிவகுக்கலாம்.இதனால் மரணம் ஏற்படலாம்.எனவே பெரிட்டோனிட்டிஸ் நோயினால் ஏற்படும் தாக்கங்கள் மற்றும் அறிகுறிகளை தவிர்க்காமல் உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகவும்.