வயிற்றுப் புண்களுக்கு சிகிச்சை மிகவும் நல்ல பலனளிக்கிறது மற்றும் இரண்டு மாத காலத்தில் குணமடையத் துவங்குகிறது. புண்ணின் காரணத்தைப் பொறுத்து சிகிச்சை அமைகிறது. என்.எஸ்.ஏ.ஐ.டிக்கள் போன்ற மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்துவதன் காரணமாக புண்கள் உருவானால், அந்த மருந்தை நிறுத்துவது ஆலோசிக்கப்படுகிறது. உங்கள் மருத்துவர் உங்கள் நிலையை மதிப்பீடு செய்து, அளவைக் குறைக்கலாம் அல்லது மாற்று மருந்துகளைப் பரிந்துரைக்கலாம். மருந்துகளில் அடங்கியவை:
- புரோட்டான் பம்ப் தடுப்பிகள்
வழக்கமாக, புரோட்டான் பம்ப் தடுப்பிகள் (பி.பி.ஐ.) எனப்படும் ஒரு மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. இந்த மருந்து வயிற்றில் அமிலங்களின் உற்பத்தியைக் குறைத்து, புண்கள் இயற்கையாக குணமாக அனுமதிக்கிறது. வழக்கமாக, பி.பி.ஐக்கள் 4 முதல் 8 மாதங்களுக்குப் பரிந்துரைக்கப்படுகின்றன. பொதுவாகப் பயன்படுத்தப்படும் பி.பி.ஐக்களில், ஒமிப்ரஸோல், பேண்டப்ரஸோல் மற்றும் லான்சாப்ரஸோல் ஆகியவை அடங்கும்.
- நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள்
வயிற்றுப் புண்ணுக்கு, ஒரு நுண்ணுயிரி நோய்த்தொற்று காரணமாக இருந்தால், அந்த நுண்ணுயிரைக் கொல்வதற்காக, நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளோடு, சில நேரங்களில், பி.பி.ஐக்களும் கூட பரிந்துரைக்கப்படலாம். ஒரு முறை நுண்ணுயிரிகள் கொல்லப்பட்ட பிறகு, அந்தப் புண் குணமாகிறது மற்றும் வழக்கமாகத் திரும்ப வருவதில்லை. வழக்கமாக, ஒரு வாரத்திற்கு தினசரி இரண்டு முறை எடுத்துக் கொள்ளத் தேவைப்படும், இரண்டு அல்லது மூன்று அளவுகள் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் பரிந்துரைக்கப்படுகிறது. நுண்ணுயிர் நோய்த்தொற்று மற்றும் என்.எஸ்.ஏ.ஐ.டிக்களின் கூட்டுச் சேர்க்கையின் காரணமாக, வயிற்றுப் புண்கள் உருவாகும் பொழுது, சிகிச்சையும், பி.பி.ஐக்கள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளின் ஒரு கூட்டுச் சேர்க்கையாக இருக்கிறது.
- எச்2 ஏற்பி எதிர் வினையூக்கிகள்
எச்2 ஏற்பி எதிர் வினையூக்கிகள் என்பவை, உங்கள் வயிற்றினால் உற்பத்தி செய்யப்படும் அமில அளவை கட்டுப்படுத்தும் தடுப்பிகள் ஆகும். மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் எச்2 ஏற்பி எதிர் வினையூக்கிகளில் ரானிடிட்டைன் ஒன்றாகும்.
- அமில எதிர்ப்பு மருந்துகள் மற்றும் ஆல்கினேட்டுகள்
அமில எதிர்ப்பு மருந்துகள், வயிற்று அமிலங்களை திறமையாக சமன்படுத்துவதன் மூலம், வயிற்றுப் புண்களின் அறிகுறிகளுக்கு எதிராக குறுகிய-கால நிவாரணத்தை வழங்கும் வகையில் செயல்படுகிறது. சில அமில எதிர்ப்பு மருந்துகள், ஆல்கினேட் எனப்படும் ஒரு மருந்தைக் கொண்டிருக்கின்றன. இவை, வயிற்றின் உட்சுவரில், நிவாரணத்தை வழங்க உதவுகிற, ஒரு பாதுகாப்பு மேற்பூச்சை உருவாக்குகின்றன. அமில எதிர்ப்பு மருந்துகள், ஒருவர் அறிகுறிகளை உணரும் பொழுதோ அல்லது அறிகுறிகள் தோன்றும் என எதிர்பார்க்கப்படும், தூங்கும் நேரம் அல்லது உணவுக்குப் பிறகு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். ஆனாலும், ஆல்கினேட்களைக் கொண்ட அமில எதிர்ப்பு மருந்துகள், வழக்கமாக உணவுக்கு முன்பு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
உங்கள் மருத்துவரை ஆலோசிக்காமல் எந்த மருந்துகளையும் ஆரம்பிக்கவோ அல்லது நிறுத்தவோ கூடாது. மறைந்திருக்கும் காரணத்தைக் கண்டறிய உங்கள் மருத்துவரை ஆலோசியுங்கள், மற்றும் அவர்/அவளின் பரிந்துரை இல்லாமல், எந்த ஒரு மருந்தையும் எடுத்துக் கொள்வது அல்லது நிறுத்துவது, ஆபத்தான பின்விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அனைத்து வயிற்றுப் புண்களில் 90%, எச். பைலோரி நுண்ணுயிரியால் ஏற்படும் ஒரு நோய்த்தொற்றின் விளைவாகும். இது போன்ற நோய்த்தொற்றுகள், பரிந்துரைக்கப்பட்ட கால அளவிற்கு, வழக்கமாக இரண்டு வாரங்கள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம் எளிதாக குணமாகின்றன.
வாழ்க்கைமுறை மேலாண்மை
வயிற்றுப் புண்கள், குறிப்பிட்ட வாழ்க்கைமுறை காரணிகள் மற்றும் காரமான உணவுகள், மன உளைச்சல் மற்றும் மது அருந்துதல் போன்ற உணவுப் பழக்கங்களின் காரணமாக ஏற்படுவதாக முன்னர் நம்பப்பட்டது. இன்று, எவ்வாறாயினும், காரமான உணவுகள் மற்றும் கவலை, புண்கள் உருவாகக் காரணமில்லை என அறியப்பட்டாலும், அவை அறிகுறிகளை மோசமாக்க முனைகின்றன.
வயிற்றுப் புண்கள் உருவாவது மற்றும் தடுப்பதில் உணவு மற்றும் ஊட்டச்சத்தின் பங்கு பற்றிய ஆராய்ச்சிகள் உறுதி செய்யப்படாமல் இருக்கிறது, மேலும் ஆராய்ச்சியாளர்கள் இந்த இரண்டுக்குமிடையே எந்த ஒரு தொடர்பையும் கணடறியவில்லை.
பால் அருந்துவது, மிகவும் பொதுவான அறிகுறி சார்ந்த வீட்டு நிவாரணங்களில் ஒன்றாகும். இருந்தாலும், பால் அருந்துவது மட்டுமே, நோயிலிருந்து நிவாரணம் அளிப்பதில் பயன்படாது.
கூடுதலாக, மது அருந்துதலும், புகைபிடித்தலும் வயிற்றுப் புண்கள் உருவாவதோடு தொடர்புடையதாக இருப்பதால், அவை தவிர்க்கப்பட வேண்டும்.