பார்கின்சன் நோய் என்றால் என்ன?
பார்கின்சன் நோய் என்பது ஒரு நரம்பியல் நிலை, இது படிப்படியாக முன்னேறி நியூரான்களை (நரம்பு செல்கள்) பாதிப்பதன் மூலம் மூளை சேதத்திற்கு வழிவகுக்கின்றது. இவை டோபமைன் என்று அழைக்கப்படும் நியூரோடிரான்ஸ்மிட்டர் மூலம் மூளை முழுவதும் குறியீடுகளை அனுப்புவதற்கான பொறுப்பினை கொண்டவை. சாதாரண நிலைமைகளில், டோபமைனின் உதவியைக் கொண்டே மென்மையான, சமமான தசை ஒருங்கிணைப்பு அடையப்படுகிறது. இந்த நியூரோடிரான்ஸ்மிட்டர் குறைபாட்டின் விளைவினாலேயே பார்கின்சனின் நோய்க்கான அறிகுறிகள் ஏற்படுகின்றது.
இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?
பார்கின்சன் நோயின் ஆரம்ப மற்றும் மிகவும் பொதுவான அறிகுறிகளுள் ஒன்று நடுக்கம், இது உடலின் ஒரு பகுதியிலோ, கைகள் அல்லது கால்களிலோ அல்லது தாடையில் கூட உணரப்படலாம். வழக்கமாக நடுக்கம் அல்லது அதிர்வு கைகள் சாதாரணமாக இருக்கும் போது கவனிக்கப்படுகிறது, இந்நிலையில் பொதுவாக கட்டைவிரலின் இயக்கம் குறியீட்டு விரலுக்கு எதிராக காணப்படுகிறது.
வழக்கமாக கவனிக்கப்படும் இரண்டாவது அறிகுறி தசை விறைப்பாக இருத்தல் ஆகும். இந்நிலையில் இயல்பான இயக்கங்களை முடக்கக்கூடிய கட்டுப்பாடற்ற தசை இறுக்கம் ஏற்படுகின்றது. இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எதாவது செயலை செய்யும்போது அவர்களின் இயல்பான வேகம் குறைந்து காணப்படுகிறது. அதாவது குளியல் அல்லது உணவருந்துதல் போன்ற எளிய செயல்களை செய்து முடிக்க வழக்கத்திற்கு மாறான நேரம் எடுத்துக்கொள்வார்கள்.
இந்நிலையின் இறுதி கட்டத்தில் ஏற்படும் அறிகுறிகளுள் அடங்குபவை, சமநிலை இழப்பு, மன அழுத்தம், முகத்தில் போலியான உணர்ச்சியின் வெளிப்பாடு மற்றும் சோர்வான தோற்றப்பாங்கு ஆகியவை ஆகும். பயம், உமிழ் நீர் சுரப்பு, தோல் பிரச்சினைகள், சிறுநீர் பிரச்சினைகள் மற்றும் பாலியல் செயலிழப்பு ஆகியவை ஒப்பீட்டளவில் அடிக்கடி ஏற்படாத அறிகுறிகளில் அடங்குபவையாகும். இந்த நடுக்கம், பேச்சு திறன் மற்றும் கையெழுத்து ஆகியவற்றில் அதிக பாதிப்பினை ஏற்படுத்தக்கூடியது.
இதன் முக்கிய காரணங்கள் யாவை?
இந்நிலைக்கான காரணத்தை கண்டறிவதற்கான ஆராய்ச்சி தொடர்ந்தாலும், இன்னும் அறியப்படாமலேயே இருக்கின்றது. மரபணு காரணிகள் மற்றும் சில சுற்றுச்சூழல் அங்கங்கள் பார்கின்சன் நோயிற்கான சாத்தியமான ஆபத்து காரணிகளாக நம்பப்படுகிறது.
மரபணு பிறழ்ச்சி பார்கின்சன் நோயை வளர்ப்பதற்கான ஆபத்து காரணியாக அடையாளம் காணப்படுகிறது, ஆனால் இவ்வாறு எளிதில் பாதிக்கப்படும் தன்மைக்கான சரியான காரணம் தெளிவாக புலப்படவில்லை.
விவசாயத்தில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகளின் வெளிப்பாடு என்பது இந்நோய் ஏற்பட சாத்தியமான சுற்றுச்சூழல் ஆபத்து காரணியாக இருக்கின்றது. சில ஆன்டிசைகோடிக் மருந்துகளை உட்கொள்பவர்கள் அல்லது மூளை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது கடந்த காலங்களில் தொடர்ந்து ஸ்ட்ரோக் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றவை இந்நோய் ஏற்படுவதற்கு சில அரிதான காரணங்களாக இருக்கின்றன.
இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?
பார்கின்சனின் நோய் கண்டறிதல் என்பது சிரமமானதாக இருக்கக்கூடும், ஏனெனில் இந்நிலையை உறுதி செய்வதற்கான குறிப்பிட்ட இரத்த பரிசோதனை அல்லது ஆய்வக பரிசோதனை என எந்த பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுவதில்லை. மேலும், இதற்கான அறிகுறிகள் பெரும்பாலும் எலும்பியல் குறைபாடுகள் அல்லது வைட்டமின் குறைபாடுகள் போன்ற மற்ற நிலைமைகளை பிரதிபலிக்கக்கூடியவைகளாக இருக்கின்றன.
எனவே,மருத்துவரிடம் கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்ட மருந்துகளின் வரலாற்றுடன் ஒரு விரிவான வரலாற்றை சரியாக விவரிக்க நேரிடும். சிடி ஸ்கேன் அல்லது எம்ஆர்ஐ ஸ்கேன் ஆகியவைகள் மூளையில் ஏற்பட்டுள்ள முழு பாதிப்பை காண எடுக்கப்படுகிறது. இந்நிலை குறிப்பிட்ட கால அவகாசத்தில் அறிகுறிகளை கண்காணிப்பதோடு நோயின் முன்னேற்றத்தை தொடர்ந்து சோதனை செய்வதற்கு தகுதிபெற்ற நரம்பியல் நிபுணருடன் ஆலோசனை செய்தல் அறிவுறுத்தப்படுகிறது.
சிகிச்சையைப் பொறுத்தவரை, டோபமைன் குறைபாட்டை ஈடுசெய்வதற்கு பலவகை சப்ளிமென்ட்கள் கிடைக்கின்றன. அவை பாதிக்கப்பட்ட மூளை பகுதிகளில் தூண்டுதலை ஏற்படுத்தி செயல்படச் செய்கின்றன. இருப்பினும், நீண்ட காலத்திற்கு இந்த மருந்துவகைகளை பயன்படுத்துகையில், பக்க விளைவுகள் ஏற்படலாம்.
இந்த அறிகுறிகளை மருந்துகளின் மூலம் கட்டுப்படுத்த முடியாமல் போகும்போது, அறுவை சிகிச்சை தேர்வு செய்யப்படுகிறது. எலக்ட்ரோடுகளை பொருத்துவதன் மூலம் மூளையின் செயல்பாடுகள் ஊக்குவிக்கப்படுகின்றது, இதையொட்டி நடுக்கத்திற்கு வழிவகுக்கும் தூண்டுதல்கள் தடுக்கப்படுகின்றது.
பார்கின்சன் நோய் என்பது முன்னேற்றமடையக் கூடிய கோளாறாகும். இந்நிலைக்கு திட்டவட்டமான நிவாரணம் அளிக்கக்கூடிய சிகிச்சை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை; இருப்பினும், இந்த நோயுடன் வாழக்குடியவர்களுக்கு மன நலம் மற்றும் உடல் செயல்பாடுகள் பராமரிக்கப்படுவதே நீண்ட-கால இலட்சியமாக கருதப்படுகின்றது.