வலி நிவாரணிகளின் பக்க விளைவுகள் என்றால் என்ன?
வலி நிவாரணிகள் அல்லது வலி போக்கி மருந்துகள் போதை மருந்துகளை கொண்டிருக்கும்.உடல் வலியிலிருந்து விரைவான நிவாரணம் பெறுவதற்காக இவைகள் பொதுவாக பரிந்துரைக்கப்படுகின்றன. ஆஸ்பிரின், இப்யூபுரூஃபன், மற்றும் நாப்ராக்ஸன் ஆகியவை பொதுவான வலி நிவாரணிகளாகும். இவைகள் மருந்துக்கடைகளில் மிகவும் பொதுவாக கிடைக்கின்றன மற்றும் இவற்றை வாங்குவதற்கு மருந்துச்சீட்டும் தேவைப்படுவதில்லை. ஆனாலும், இந்த வலிநிவாரணிகளை அடிக்கடி எடுத்துக்கொள்வதும், நீண்ட காலத்திற்கு உபயோகபடுத்துவதும், பக்கவிளைவுகளை ஏற்படுத்தாமல் இருப்பதில்லை.
இந்த நோயின் அறிகுறிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய முக்கிய தாக்கங்கள் யாவை?
பரிந்துரைக்கப்பட்ட வலி நிவாரணிகளின் பயன்பாடு தொடர்பான பொதுவான பக்க விளைவுகள்:
- மலச்சிக்கல்.
- குமட்டல்.
- அயர்வு.
- சோம்பல்.
- அரிப்பு.
- தடித்தல் /தடிப்பு ஏற்படுதல்.
மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் இந்த மருந்துகளை உட்கொண்டவுடன் உடனடியாகக் ஏற்படுவதை காணலாம். சில நபர்களுக்கு, இம்மருந்துகள் விளைவைக் காட்டத் தொடங்கம் பொழுதே, அவர்களுக்கு பக்க விளைவுகளும் ஏற்படலாம். இருப்பினும், இந்த உடனடி பக்க விளைவுகள் எல்லாம் அடிக்கடி வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக்கொள்ளாத தனிநபர்களுக்கு மிகவும் பொதுவாக ஏற்படுகிறது.வலி நிவாரணி மருந்துகளை தொடர்ச்சியாக பயன்பாடுத்துவதால், குறைந்தளவில் இந்த அறிகுறிகள் எல்லாம் கண்கூடாக தெரிந்தாலும், கீழே கொடுக்கப்பட்டவைப் போன்ற மற்ற தீவிர அறிகுறிகளும் தோன்றலாம்:
- அடிமையாதல்:
வலி நிவாரணிகளைப் பயன்படுத்துவதால் வரும் மிகப்பெரிய ஆபத்து, அவைகளால் ஏற்படும் சீர்கேடு மற்றும் அவற்றிற்கு அடிமையாதல் போன்றவை ஆகும். வலி நிவாரணிகள் பொதுவாக உடனடி நிவாரணம் வழங்கும் மருந்துகளை கொண்டுள்ளன, அவை மைய நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை ஒரு குறிப்பிட்ட அளவிற்குக் குறைத்து, உற்சாகமான அனுபவத்தை அளிக்கின்றன. அடிக்கடி வலி நிவாரணிகளை பயன்படுத்தும் நபர்கள் இந்த விளைவுகளுக்கு அடிமையாகுவதோடு, தேவைப்படாத போதும் இந்த மருந்துகளை உபயோகப்படுத்தவும் தொடங்கலாம். - எதிர்ப்பின்மை/ சகிப்புத்தன்மையை
வலி நிவாரணிகளை அடிக்கடி பயன்படுத்துவது மருந்துகள் மீது அதிக சகிப்புத்தன்மையை ஏற்படுத்தும், அதாவது வலியிலிருந்து நிவாரணத்தை பெற அதே மருந்துகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம், அல்லது அதிக டோஸ் உள்ள மருந்துகளை நிவாரணம் பெறுவதற்காக பயன்படுத்தும் நிலை வரலாம். - ஹார்மோன் சமநிலையின்மை
வலி நிவாரணிகளின் அதிகப்படியான பயன்பாடு ஆண்களில் டெஸ்டோஸ்டிரோன் குறைபாட்டை ஏற்படத்தலாம் மற்றும் பெண்களில் ஈஸ்ட்ரோஜன் அளவை குறைக்கலாம். இதனால் உஷ்ண தாக்கம், ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைகள் மற்றும் குறைந்த பாலுணர்ச்சி உந்துதல் (லிபிடோ) போன்ற பிற பிரச்சினைகளும் ஏற்படலாம்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
உடனடியாக நிவாரணம் பெறும் பொருட்டு கடுமையான வலியால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இந்த மருந்துகள் பொதுவாக பரிந்துரைக்கப்படுகின்றன. இருப்பினும், வலியைக் குறைப்பதற்காக புற்றுநோய் போன்ற இறுதிக்கட்ட நோய்களை உடைய நோயாளிகளுக்கு சக்திவாய்ந்த மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம். இந்த மருந்துகள் நரம்பு மண்டலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி மரத்துப்போக செய்வதினால் இதுப்போன்ற பக்க விளைவுகள் ஏற்படுகின்றன.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
மருத்துவ வரலாறு, உடல் பரிசோதனை மற்றும் இரத்த பரிசோதனைகள் ஆகியவற்றின் மூலம் இரத்த ஓட்டத்தில் உள்ள வலி நிவாரணிகளின் அளவை மதிப்பிடுவதன் மூலம், அவற்றின் தாக்கம் கண்டறியப்படுகிறது. பொதுவாக, மருத்துவர் வலி நிவாரணிகள் உட்கொள்ளுதலைக் குறைக்க பரிந்துரைப்பார், அல்லது அவற்றை முற்றிலும் தவிர்த்து, வலிக்கு எதிரான இயற்கை வைத்தியத்தை மேற்கொள்ளவும் பரிந்துரைக்கலாம். இயற்கை வலி நிவாரணி உணவுகளான மஞ்சள் மற்றும் இஞ்சி போன்றவை அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது மற்றும் இதனால் இவை வலியை குறைக்க உதவுகின்றன.
யோகா மற்றும் தியானம் போன்ற பிற தீர்வுகளும் வலி நிவாரணிகளைச் சார்ந்துள்ளதைக் குறைக்க பரிந்துரைக்கப்படலாம்.