குமட்டல் மற்றும் வாந்தி என்றால் என்ன?
குமட்டல் மற்றும் வாந்தி பெரும்பாலும் குடல் நோய்கள், வலிமிகுந்த சில உடல்நிலைகள் மற்றும் சில மருந்துகளின் பக்கவிளைவுகளுடன் தொடர்புடைய சில பொதுவான அறிகுறிகள் ஆகும். பல சந்தர்ப்பங்களில், குறிப்பிட்டபகுதி உணர்விழப்பு மருந்தின் பின் ஏற்படும் அறிகுறியாகக்கூட இந்த அறிகுறிகள் தோன்றலாம். வாந்தி என்பது வாய் மூலமாக வயிற்றில் உள்ளவை வெளிவருவதும் குமட்டல் என்பது வாந்திக்கு முன் ஏற்படும் அசௌகரிய உணர்வு நிலையும் ஆகும். இந்த இரண்டு நிலைகளுக்கும் சிகிச்சை அளிக்கமுடியும் மற்றும் இவை பொதுவாக தீவிர நோய் எதையும் குறிப்பதில்லை.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
குமட்டல் மற்றும் வாந்தி, சில நோய் நிலைகளின் அறிகுறிகள் ஆகும். இருந்தாலும், இவற்றுடன் சேர்ந்து கீழ்க்காணும் அறிகுறிகளும் தென்படலாம்:
- விரைந்த நாடித்துடிப்பு.
- உலர்ந்த வாய்.
- மயக்கம் அல்லது மயக்க உணர்வு.
- தலை சுற்றும் உணர்வு.
- குழப்ப நிலை.
- வயிற்றுப்பகுதியில் வலி.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படுவற்கான காரணங்களை காணலாம்:
- இயக்கத்தினால் உடல்நலக்கோளாறு அல்லது கடலில் பயணிப்பதால் ஏற்படும் குமட்டல் உணர்வு.
- வயிற்றில் ஏற்படும் நோய்தொற்று.
- வீங்கிய பித்தப்பை.
- ஒற்றைத்தலைவலி.
- தலைசுற்றல்.
- மூளைக்காயம் அல்லது மூளை புற்றுநோய்.
- வயிற்றுப் புண்கள்.
- அதிக அமிலத்தன்மை.
- கர்ப்பகாலத்தின் முதல் மூன்று மாதங்கள்.
- பயம்.
- விரும்பத்தகாத மணம்.
- உணவு உண்ணுவதில் கோளாறுகள்.
- உணவு நஞ்சேற்றம்.
- மருந்துகளின் பக்கவிளைவுகள்.
- பொது மயக்க மருந்து.
- கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
குமட்டல் மற்றும் வாந்திக்கு பல காரணங்கள் இருக்கலாம், அதனால் இந்த அறிகுறிகளுக்கான சரியான காரணத்தைக் கண்டறிவதன் மூலம் இதற்க்கு வெற்றிகரமாக சிகிச்சையளிக்க முடியும். ஒருவரின் விரிவான தனிப்பட்ட மற்றும் மருத்துவ வரலாற்றின் மூலம் இந்த அறிகுறிகளை ஏற்படுத்தும் காரணங்களை அறியலாம். இதைத்தவிர மற்ற குறிப்பிட்ட அறிகுறிகள் நோயின் அடிப்படை கண்டறிய உதவும். உருவரைவு ஆய்வுகள், இரத்தப் பரிசோதனைகள், குறிப்பிட்ட நோயை கண்டறியும் பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் அந்த நோயை கண்டறியலாம்.
பல சமயங்களில் வயிற்றுப்பொருள்கள் வெளியே வந்ததும் வாந்தி தானாகவே நின்றுவிடும், இதற்கு சிகிச்சை தேவையில்லை. குமட்டல் மற்றும் வாந்திக்கு மட்டும் சிகிச்சை அளிக்காமல் அடிப்படை காரணத்திற்கும் தேவையான சிகிச்சை அளிக்கப்படுகிறது. பின்வரும் சிகிச்சைகள் பொதுவாக பரிந்துரைக்கப்படுகின்றன.
- குமட்டல் தடுப்பு மருந்துகளான ஆன்டி-நாசியா மற்றும் ஆன்டி-எமெடிக் எனப்படும் வாந்தி அடக்கி மருந்துகளும் பரிந்துரைக்கப்படும். கர்ப்பிணிகள் மகப்பேறு மருத்துவரின் ஆலோசனையை பெற்றபின் மட்டுமே மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.
- பயண நோய் தடுப்பு மருந்தகள்.
- வாய்வழி அல்லது சிரைவழி நீரேற்றும் மூலம் உடலில் இழந்த நீர்ச்சத்தை திரும்பப் பெறச் செய்தல்.
- இயற்க்கை சிகிச்சை முறைகளான இஞ்சி அல்லது கிராம்புத் துண்டை வாயில் வைத்துக்கொள்வது மூலமும் குமட்டலில் இருந்து நிவாரணம் பெறலாம்.
உணவை சிறு பாகங்களாக உண்ணுதலும் உணவின் இடையில் நீர் அருந்தாமல் உணவுக்குப் பின் நீர் அருந்துதலும் குமட்டலை தடுக்க உதவும். மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாமல் நீண்ட காலம் வாந்தி நீடித்தால் உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகுங்கள்.